Published:Updated:

விஜய் வழியைப் பின்பற்றும் நிவின் பாலி!

விஜய் வழியைப் பின்பற்றும் நிவின் பாலி!
விஜய் வழியைப் பின்பற்றும் நிவின் பாலி!

மலையாள உலகின் படங்களும் சரி நடிகர்களும் சரி சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்கள். அதிலும் ஃபகத் ஃபாசில், நிவின் பாலி, துல்கர் சல்மான் ஆகிய மூவரும் தனக்கான தனி இடத்தை இங்கே உருவாக்கிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

நிவின் பாலியின் நேரடி மலையாளப் படங்கள் தமிழகத்திலும் வெளியாகி வசூலிலும் ஹிட்டடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரேமம், 200 நாட்கள், அடுத்து வெளியான ஆக்‌ஷன் ஹீரோ பிஜு என தமிழகத்தில் செம ஹிட். தற்போது மூன்றாவதாக ’ஜேகோபின்டே ஸ்வர்க ராஜ்யம்’ மூன்றாவது நேரடி மலையாளப் படமும் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு கௌதம் மேனன் அப்பாவாக நடிக்கிறார் என்ற சிறப்பும் இணைந்து படத்துக்கு எதிர்ப்பார்ப்புகள் இன்னும் அதிகமாகியுள்ளன. 

விஜய் வழியைப் பின்பற்றும் நிவின் பாலி!

இதே போல் தான் விஜய் கேரளாவில் தனக்கென பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்கள், பிரம்மாண்ட ரிலீஸ் என உருவாக்கி வைத்துள்ளார், அங்கே விஜய் ஒருவர் மட்டுமே உருவாக்கிய கிரேஸை இங்கே பல மலையாள ஹீரோக்கள் உருவாக்க முயல்வது கண்கூடாகவே தெரிகிறது.

கடந்த சில வருடங்களில் 200 நாட்களை கொண்டாடிய தமிழ்ப் படங்கள் கூட இல்லாத நிலையில் மலையாள படமான பிரேமம் 200 நாட்களை சர்வ சாதாரணமாக கடந்தது நாமறிந்ததே, இப்படியே போனால் மலையாள சினிமா ரீமேக்குகள்,மலையாள நடிகர்களின் ஆக்கிரமிப்பு என தமிழ் சினிமாவின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுமோ என்ற ஐயமும் ஏற்படத்தான் செய்கிறது

அடுத்த கட்டுரைக்கு