Published:Updated:

ரஜினி பட நிறுவனம், விஜய் படத்தையும் கைப்பற்ற திட்டம்?

ரஜினி பட நிறுவனம், விஜய் படத்தையும் கைப்பற்ற திட்டம்?
ரஜினி பட நிறுவனம், விஜய் படத்தையும் கைப்பற்ற திட்டம்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் பாடல் வெளியீடு நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்தப்படத்தை வெளியிடும் உரிமையை முழுமையாக லைகா நிறுவனம் வாங்க முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினி பட நிறுவனம், விஜய் படத்தையும் கைப்பற்ற திட்டம்?

லைகா நிறுவனம் இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2ஓ, கமல் நடிக்கவிருக்கும் புதியபடம் உட்பட சில படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் வாங்கி வெளியிட்ட நானும்ரவுடிதான் மற்றும் விசாரணை ஆகிய இரண்டுபடங்களுமே வெற்றி என்பதால் சந்தோசத்தில் இருக்கிறார்கள். இவை இரண்டும் சிறியபடங்கள். எனவே விரைவில் வெளியாகவிருக்கும் தமிழின் பெரியபட்ஜெட் படங்களில் ஒன்றான தெறியின் விநியோகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியிருக்கிறதாம்.

ஒருபக்கம், தெறியை லைகா தான் வெளியிடவிருக்கிறது என்று உறுதியாகச் சொல்கிறார்கள் இன்னொருபக்கம், இதுதொடர்பான பேச்சுவார்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.
 
 

 

அடுத்த கட்டுரைக்கு