Published:Updated:

சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்

சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்
சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்

காவல் துறையின் மறு பக்கத்தைக் காட்சிப்படுத்திக் காட்டியது வெற்றிமாறனின் 'விசாரணை'. இந்தப் படத்தின் ஒட்டு மொத்த திரைக்கதைக்கும் தொடக்கப் புள்ளியாக இருப்பது 'அப்சல்' எனும் கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்துக்கு யதார்த்தமாக உயிர்கொடுத்த  'அப்சலுக்கு' ஃபேஸ்புக்கில் ஏகப் பட்ட பாராட்டுகள். அவரிடம் பேசினோம்.

சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்

"எனக்கு சொந்த ஊர் திருப்பூர். சின்ன வயசுல இருந்தே படிப்ப விட நடிப்பு மேல் ஆர்வம் அதிகம். நடனமும் கத்துக்க ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும் நானே நடன வகுப்புகள் நடத்திட்டு இருந்தேன். பார்க்கிற திரைப்படங்கள்ல எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர்கள உள்வாங்கி நானே தனியே நடிச்சு பார்ப்பேன். என்னைக்காச்சும் ஒரு நடிகனாக ஆக வேண்டும்ங்கற ஆசை என துரத்திக்கிட்டே இருந்துச்சு. அந்த சமயத்துல விஜய் டி.வில இருந்து 'கனா காணும் காலங்கள்' ஆடிசன் நடந்துச்சு.

சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்

கோயம்பத்தூர் ஸோன்ல பங்கேடுத்துகிட்டு முதல் இரண்டு ரவுண்ட கடந்து மூணாவது ரவுண்டுல தோத்துட்டேன்.இருந்தாலும் விடல. மறுபடியும் மதுரை ஸோன்ல பங்கெடுத்து சென்னைக்கு செல்க்ட் ஆன 50 பேர்ல நானும் ஒருத்தனா இருந்தேன்.  ஃபைனல்ஸ்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர்ல நானும் ஒருத்தன். அந்த விழாவுக்கு வெற்றிமாறன் சார் சிறப்பு விருந்தினரா வந்து இருந்தார். அவர் முன்னாடி பெர்பார்ம் பண்ணி ஸ்பாட் செல்க்ட் ஆனேன். சார் அன்னைக்கு என்னை பாராட்டுனத மறக்கவே முடியாது.

இப்படி தேர்வு செய்யப்பட்டவங்களுக்கு நடிக்க அழைப்பு வந்துச்சு. ஆனா அந்த சமயம் என் வாழ்க்கைல விதி விளையாடிருச்சு. எனக்கு அழைப்பு வந்த சமயம் எழுந்திருக்கவே முடியாதபடி அம்மை போட்டு இருந்துச்சு. இத்தன கஷ்டப்பட்டு கிடைச்ச வாய்ப்பு வீணாயிருச்சு ஆனாலும் நான் தளரல. மறுபடியும் என் இயல்பு வாழ்க்கைய தொடர்ந்தேன். கண்டிப்பா இன்னொரு வாய்ப்பு அமையும்ங்கற நம்பிக்கை.

சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்

அடுத்த வருஷம் வந்த ஆடிசன்லயும் கலந்துகிட்டு சென்னை வரைக்கும் வந்தேன். இந்தமுறை சென்னைல தங்குறதுக்கு என்கிட்ட காசு இல்ல. வெற்றிமாறன் சார் ஆபிஸ்ல வேலை பாக்குற எங்க அண்ணன் அவர் அங்கேயே தங்க இடம் கொடுத்தார்.வெற்றிமாறன் சார் கிட்ட அசோசியேட்டா இருந்த ராமலிங்கம் சார் என்ன கேமரா முன்னாடி நிறுத்தி நடிக்கச் சொன்னார்.அப்பறம் வெற்றி சார் கிட்ட கூட்டிட்டு அவர் முன்னாடியும் ஒரு சில முக பாவனைகளக் காட்டச் சென்னாங்க. நானும் ஏதோ பண்ணிட்டு வந்துட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் வெற்றி சார் ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு. போனப்போ 'அட்ட கத்தி' தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி ன்னு நிறையப் பேர் இருந்தாங்க. உள்ள போனதும் என்ன சட்டைய கழட்டிட்டு வந்து நிக்க சொல்ல நானும் நின்னேன். அப்பறம் தான் தெரியும் அது இந்தப்படத்தோட ஃபர்ஸ்ட் லுக்'னு. எங்கேயோ இருந்த என்ன இங்க கொண்டு வந்து நிறுத்துனது வெற்றிமாறன் சார் தான். அவருக்குத் தான் எல்லாப் பெருமையும் சேரணும். இப்போ அடுத்தது வாய்ப்புகள் வருது .சினிமாவுல ரஜினி ,கமல், தனுஷ் இவங்க தான் என்னோட இன்ஸ்பிரஷன்.இவங்கள மாதிரி ஒரு தனி இடம் அடையணும்ங்கறது தான் என் கனவு. அத நோக்கித் தான் ஒடிட்டு இருக்கேன்."

சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்

என  மூச்சு விடாமல் பேசும் அப்சலின் நிஜ பெயர் சிலம்பரசன். தனக்குக் கிடைத்த முதல் கதாபாத்திரத்தின் பெயர் அப்சல் என்பதால் அதையே தனது பெயராக வைத்துக் கொண்டார் அது மட்டுமில்லை 'விசாரணை ' படம் வெளியான பிப்ரவரி-5 ஆம் தேதியை தனது பிறந்தநாளாகவும்  கொண்டாடப் போகிறாராம்.


-பி.நிர்மல் (மாணவ பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு