Published:Updated:

ஷாருக்கானை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரசிகரின் துணிகரச் செயல்!

ஷாருக்கானை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரசிகரின் துணிகரச் செயல்!
ஷாருக்கானை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரசிகரின் துணிகரச் செயல்!

பிப்ரவரி 16 அன்று ஷாருக் கான்னின் ஃபேன் படத்தின் "ஜப்ரா மே தேரா ஃபேன் ஹோ கயா" பாடல் வெளியானது. அதனையடுத்து எங்கு திரும்பினாலும் மே தேரா ஃபேன் ஹோ கயா பாடலின் புகழாரம் தான். இப்பாடலில் ஷாருக்கின் தோற்றம், நடனம், எனர்ஜி என அத்தனையும் ரசிகர்களை கவர, படத்திற்காக ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டுமா, என ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஒரு நடிகனின் மிக பெரிய ஃபேன் பற்றிய கதை என்பதால், ஷாருக் கானின், ரசிகர்கள் பற்றிய அனுபவங்களை கேட்டு அனைவரும் அவரை படை எடுத்தவண்ணம் உள்ளனர்.

அதில் அவர் மறக்கவே முடியாத ஒரு ரசிகரை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  ஒரு நாள் திடீரென ஒரு மனிதர் என் வீட்டினுள் நுழைந்து, தனது உடைகளை அவிழ்த்து விட்டு, எனது நீச்சல் குளத்தில் குத்தித்து குளிக்க ஆரம்பித்துவிட்டார், செக்கியுரிட்டி வந்து அவரை பிடித்து விசாரித்த போது, "எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை, ஷாருக் கானின் நீச்சல் குளத்தில் நான் குளித்தால் மட்டும் போதும்" என கூறியுள்ளார்.

ஷாருக்கானை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரசிகரின் துணிகரச் செயல்!

பின்னர் நான் அங்கு வந்த போது அம்மனிதரை கட்டி தழுவி கொண்டேன், அவர் என்னிடமிருந்து போட்டோ, ஆட்டோகிராப் என ஏதும் எதிர்பார்க்கவில்லை. நான் இத்தனை பிரியத்திற்குரியவனா என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எனது ரசிகர்களை பற்றிய எத்தனையோ கதைகள் இருந்தாலும், இதை என்னால் மறக்கவே முடியாது என கூறியுள்ளார்.

எப்போதாவது ரசிகர்கள் தங்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளனரா என்ற கேள்விக்கு, பெண் ரசிகர்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி என்னை பயமுறுத்தும் அளவிற்கு யாரும் நடந்து கொள்வதில்லை. அவர்கள் மிகவும் அன்பானவர்கள் என கூறியுள்ளார். சமீபத்தில் ஷாருக் கான் நடித்த "டர்" பட பாணியில் ஒரு கடத்தல் சம்பவம் நடந்ததும், "டர்" படத்தினை பார்த்தே தான் அவ்வாறு செய்ததாக அந்த நபர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு -

அடுத்த கட்டுரைக்கு