‘உயிரே போனாலும் பிரச்சாரத்துக்குப் போவேன்’ - சூளுரைத்த குமரிமுத்து இன்று இல்லை

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து 35 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் நடித்துவருகிறார். நகைச்சுவையே இவரது தனி முத்திரை என்றாலும் குணசித்திர வேடங்களிலும் இவர் நடிப்பு பேசப்பட்டு வந்தது. கடந்த பல வருடங்களாக, தி.மு.க.-வின் பேச்சாளராகவும் செயல்பட்டு வந்தார்.எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ள குமரிமுத்துவின் வித்தியாசமான சிரிப்பு மக்கள் மத்தியில் பிரபலம். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இதுநம்ம ஆளு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்
 


இவர் சென்னை நந்தனம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில், மாடியில் குடியிருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் அறுவை சிகிட்சை செய்து கொண்ட இவரை, ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு வாரத்துக்கு முன் தொடர்பு கொண்டு, ‘இந்தத் தேர்தலில் தி.மு.க-விற்காக பிரச்சாரம் மேற்கொள்வீர்களா’ என்று நமது நிருபர் கேட்டதற்கு ‘உயிரே போனாலும் தி.மு.க-விற்குப் பிரச்சாரம் செய்வேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர் பயணங்களால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், மாடி ஏறுவதற்கும் சிரமப்பட்டு வந்திருக்கிறார்.  இந்நிலையில் சிகிட்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், இரு தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று இரவு காலமானார்
 


‘உயிரே போனாலும் பிரச்சாரத்துக்குப் போவேன்’ என்று அவர் சொன்னபடியே, பிரச்சாரங்களுக்குச் சென்றார். ஆனால், இவர் உடல்நிலை குறித்து தி.மு.க-விலிருந்து யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!