Published:Updated:

”என் தாய் இன்றைக்கும் விறகு சுமக்கிறார்” கண்கலங்கிய சமுத்திரகனி!

”என் தாய் இன்றைக்கும் விறகு சுமக்கிறார்” கண்கலங்கிய சமுத்திரகனி!
”என் தாய் இன்றைக்கும் விறகு சுமக்கிறார்” கண்கலங்கிய சமுத்திரகனி!

விகடன்  ஊழியர்களின் பெண்கள் தின விழாவில் கலந்துகொண்ட சமுத்திரக்கனி தனது வாழ்வில் முக்கியப் பெண்களான அம்மா, மனைவி குறித்து பேசினார்,  பேசும் போது அவரால் பேச முடியாமல் கண்கலங்கி நின்ற தருணம் நம்மையும் நம் தாயை நினைக்கத் தோன்றிய தருணம் எனலாம்.

அவர் பேசுகையில், எனக்கு என்ன பேசுதென்றே தெரியவில்லை, கையெல்லாம் நடுங்குகிறது. புத்திசாலிப் பெண்கள் மத்தியில் பேசுவதே சற்று கடினம் தான்.

இந்த நாளில் என் தாய் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்போதும் மாறாமல் அப்படியே இருக்கிறார். எந்நேரமும் உழைப்பு, சிறு வயதில் என்னை இடுப்பில் கட்டிக்கொண்டு விவசாய வேலை செய்வார். பிறகு நான் பள்ளியில் படிக்கும் வேளையில், அம்மா வீட்டில் இல்லை என்றால் நடந்து தேடிச் செல்வேன். பிறகு சைக்கிளில் தேடிக் கண்டுபிடிப்பேன். பிறகு அஸிஸ்டெண்ட் டைரக்டராக இரு சக்கர வாகனத்தில் தேடிச் செல்வேன்.

”என் தாய் இன்றைக்கும் விறகு சுமக்கிறார்” கண்கலங்கிய சமுத்திரகனி!

இப்போ இயக்குநர், நடிகர் என்ற தோரணையில் காரில் தேடிச் சென்று பார்க்கிறேன். அம்மா மட்டும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.  என் அம்மாவுக்கு இப்ப 73 வயதாகிறது. இப்போதும் அதே விறகுக் கட்டை சுமந்துக் கொண்டு எப்ப ராசா வந்த எனக் கேட்கிறார். இந்த விறகுக் கட்டுக்கு எவ்வளவும்மா கிடைக்கும் என்றால் அறுபது ரூபாய் கிடைக்கும் என்றார். ஏம்மா, நான் தான் உங்களுக்கு பணம் அனுப்பறேனே அதை என்ன செய்றீங்க என்றால் அதெல்லாம் அங்கே இருக்கிறது. அது எல்லாம் உன் செலவுக்கு கண்ணு என்கிறார். நானும் அவரை மாற்றி சென்னைக்குக் கொண்டு வந்து கவனித்துக் கொள்ள ஆசைப்பட்டாலும் உழைத்த உடம்பு நான் இப்படித்தான்பா என  பேச முடியாமல் கண்கலங்கினார்.

”என் தாய் இன்றைக்கும் விறகு சுமக்கிறார்” கண்கலங்கிய சமுத்திரகனி!

மீண்டும் தொடர்ந்தவர், அந்த அறியாமைதான் இன்னும் அவரை கலப்படமாக்காமல் வைத்திருக்கிறது. நாமெல்லாம் நகரத்து ஸ்டைல், அவசர வாழ்க்கை என கலப்படமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா , என்னைக்குமே அம்மா தான் என பெண்கள் தினத்தில் தன் அம்மாவை நினைவு கூர்ந்து பேசினார்.

பெண்கள் தங்களோட வாழ்க்கையில் எவ்வளவோ தியாகம் செய்து வீட்டில் ஒரு வாழ்க்கை, வேலையில் ஒரு வாழ்க்கை என போராடுகிறார்கள். அந்த வலிமை கண்டிப்பாக ஆண்களிடம் கிடையாது என பேசி முடித்து விட்டு பெண்கள் தின வாழ்த்துகள் சொல்லி விடை பெற முயற்சித்த சமுத்திரகனியை, சும்மா விடுவோமா நாம். சில பல கேள்விகள் கேட்டு அவரது பதிலையும் பெற்றோம்,

பெண்கள் தினம் குறித்து உங்கள் கருத்து

பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை, ஒவ்வொரு நாளும் கொண்டாடப் பட வேண்டியவள் பெண்

நீங்கள் புகைப்பதை விட்டுவிட்டீர்களா

விட முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. நேற்றுக் கூட சிந்தித்தேன். ஆனால் கண்டிப்பாக விட வேண்டும்.

தாய்மாமனாக உங்கள் அனுபவம், 

என் மனைவிக்கே நான் தாய்மாமன் தான். நான் இந்த நிலைமைக்கு வர என் அம்மா ஒரு காரணம் என்றால் , அடுத்து என் மனைவி மிக முக்கிய காரணம். நீங்கள் கண்டிப்பாக உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும் என என்னை உதவி இயக்குநராக சேரச் சொன்னதே அவர் தான்

”என் தாய் இன்றைக்கும் விறகு சுமக்கிறார்” கண்கலங்கிய சமுத்திரகனி!

உங்கள் பெண் தோழிகள் பற்றிச் சொல்லுங்களேன்

(சிரிக்கிறார்) நாமெல்லாம் இவ்வளவு எனர்ஜியாகவும், பல மைல் கறகளை அடைகிறோம் என்றால் தோழிகள் தான் காரணம்

சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

சின்னத்திரை தான் மிகக் கடினம். இன்று ஒரு வெற்றியான இயக்குநராக நிற்பதற்கு சின்னத்திரை கொடுத்த அனுபவம் தான் காரணம். தினம் தினம் யோசிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும். சின்னத்திரை சவாலான விஷயம் என்றார்

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்