Published:Updated:

சத்யராஜ் ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிப்பது எதனால்?

Vikatan Correspondent
சத்யராஜ் ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிப்பது எதனால்?
சத்யராஜ் ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிப்பது எதனால்?

ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்துவரும் ஒரு டஜன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார்.

சத்யராஜ் ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிப்பது எதனால்?

முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் காமெடி கலந்த குடும்ப செண்டிமெண்ட் படமாக இயக்கத் திட்டமிட்டிருக்கிறார் பாண்டிராஜ். இந்நிலையில் இப்படத்தில் இரு முக்கியமான கேரக்டர்களில் சத்யராஜும் ராஜ்கிரணும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். இருவரும் இணைந்து நடிக்கவிருப்பது இதுவே முதல்முறை. அதேபோல் ஜி.வி.பிரகாஷூம் இவர்களுடன் இணைந்து நடிப்பது முதல்முறை.

ஜி.வி.பி தற்போது நடித்துவரும் ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’, ‘புரூஸ்லி’, ‘கெட்ட பய சார் கார்த்தி’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ போன்ற படங்களுக்குப்  பிறகு இந்தப் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

 தாட்சாயணி