Published:Updated:

சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo

சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo
சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo

சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo

சூது கவ்வும் வெற்றிக்குப் பிறகு நலன் குமரசாமி கொடுத்திருக்கும் இரண்டாவது ட்ரீட், காதலும் கடந்து போகும்.

சென்னையில், ஐடி துறையில் வேலை செய்துவிட்டு, நிறுவனம் இழுத்து மூடப்பட்டதால், வேறு வேலை தேடுகிறார் மடோனா செபாஸ்டியன். ஊருக்குள் பார் வைத்திருக்கும் சத்யா சுந்தரிடம் அடியாளாய் வேலை செய்கிறார் விஜய் சேதுபதி. வேலை போய்விட்டாதால், அறையைக் காலிசெய்துவிட்டு, விஜய் சேதுபதி வீட்டிற்கு எதிர் வீட்டில் குடிவருகிறார் மடோனா. அதைத் தொடர்ந்து மோதலும், நட்புமாய்த் தொடர்கிறது அவர்கள் உறவு.

சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo

இதற்கிடையில், ‘ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தா பார் எடுத்துத் தர்றேன்ன?” என்று இடம் விஜய் சேதுபதி நச்சரித்துக் கொண்டிருக்க, எக்ஸ் போலீஸான சமுத்திரக்கனியிடமிருந்து தொடர்ந்து தொல்லைகள் இவர்கள் கூட்டத்திற்கு.

மடோனாவில் வீட்டில், அவருக்கு வேலை போய்விட்டதை அறிந்து ‘மொதல்ல கெளம்பி வா’ என்று அப்பா அழைக்கிறார். வேலைக்குப் போகும் ஆவலில் இருக்கும் அவர், அதைச் சமாளிக்க ஒரு பொய் சொல்கிறார். இங்கே சமுத்திரக்கனியை சத்யா சுந்தர் கூட்டம் சமாளிக்கத் திணறுகிறது.
இரண்டும் என்னவாகிறது என்பதையும், மடோனா - விஜய் சேதுபதி உறவு காதலா-நட்பா என்பதையும் தனக்கே உரிய பாணியில்.. இல்லையில்லை.. கொரியன் படப்பாணியில் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி.

மை டியர் டெஸ்பரேடோ என்கிற கொரியன் படத்தை, முறையாக அனுமதி வாங்கி திரைக்கதை செய்திருக்கிறார் நலன் குமாரசாமி. அதற்காக அதே மாதிரி இத்தனை மெதுவாகவா இருக்க வேண்டும் படம்? டாப் கியர் இல்லாவிட்டாலும், நான்காவது கியரிலாவது பயணித்திருக்கலாமே என்று தோன்றுகிறது. வசனங்களிலும், கதாபாத்திரங்களை வேலை வாங்கிய விதத்திலும் கவர்ந்து இந்த ‘ஸ்லோ’த்தனத்தை மறக்கடிக்க முயல்கிறார். பல காட்சிகள் யூகிக்கக் கூடியதாகவே இருக்கிறதென்பதும் குறையாகப் படுகிறது.

சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo

விஜய் சேதுபதி என்ன பேசினாலும் அவரது மாடுலேஷலுக்கு ரசிக்கப்படுகிறது. ‘நான் ஒரு பழமொழி சொல்றேன்.. பழசாத்தான் இருக்கும்.....’ என்பதெல்லாம் டிரெய்லரிலேயே வந்து ஹிட்டாகிவிட்டது. மடோனாவிடன் நேர்முகத் தேர்வாளர் கேட்கும் ‘ஏன் உங்களுக்கு இதுவரைக்கும் வேலை கிடைக்கல’ கேள்விக்கு அவர் சொல்லும் பதில்.. நச்!

விஜய் சேதுபதி.. கதிர் என்கிற அடியாளாக வெரைட்டி காட்டியிருக்கிறார் மனுஷன். படத்துக்குப் படம் உடல்மொழியிலும் சரி, வசன மாடுலேஷனிலும் சரி பின்னி எடுக்கிறார். ’கககபோ..’ பாடலில் சரியான ஆட்டம் போடுகிறார். அறிமுகப்பாடலாக வைக்காமல், சரியான இடத்தில் அதைச் செருகிய இயக்குநருக்கு நன்றி! மடோனா செபாஸ்டியன்! ஏம்மா, பொண்ணே.. தமிழ்ல உங்களுக்கு இது முதல் படமா என்ன? நம்பவே முடியவில்லை. திறமையான நடிப்பால் கவர்ந்திழுக்கிறார்.
சத்யா சுந்தர், இன்னொரு அடியாள் கிரண் என்று எல்லா கதாபாத்திரங்களும் தத்தமது பணியை சிறப்புறச் செய்திருந்தாலும், விஜய் சேதுபதி கூடவே வரும் பையனாக நடித்திருக்கும் மணிகண்டன், ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்று தோன்றுகிறது.

சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo

பாடல்கள் ஓகே என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது பின்னணி இசையைத்தான். இப்போதைய இசையமைப்பாளர்களில் பின்னணி இசையை செறிவாக, சரியாக அமைக்கக் கூடியவராக சந்தோஷ் நாராயணன் இருக்கிறார். இந்தப் படத்தில் அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் சில காட்சிகள் இனித்தாலும், ஒன்றுமில்லை என்றுதான் இருக்கிறது. இந்தக் கூட்டணியால் இதைவிடவும் சிறப்பான படத்தை நிச்சயம் தர முடியும் என்றிருக்க, இதை அப்படியே கொடுக்க வேண்டியது ஏன் என்று தெரியவில்லை.

படம் முழுவதும் பயணிக்கும் அவர்களிக்கிடையேயான உறவின் அழகை ரசிப்பதற்காகவே பார்க்கலாம் பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு