Published:Updated:

காட்ஃபாதரான மிஷ்கின், விஷால் பட கலாட்டா

காட்ஃபாதரான மிஷ்கின், விஷால் பட கலாட்டா
காட்ஃபாதரான மிஷ்கின், விஷால் பட கலாட்டா

பிசாசு படத்தைத் தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கிறார். அப்புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் விஷாலின் அலுவலகத்தில் நடந்துமுடிந்தது. 

முத்தையா இயக்கத்தில் மருது படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த கையோடு, லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி பாகம் 2ல் நடிப்பார் விஷால் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். அப்படத்திற்கு “துப்பறிவாளன்” என்று பெயரிட்டுள்ளனர்.

காட்ஃபாதரான மிஷ்கின், விஷால் பட கலாட்டா

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான “விஷால் ஃபிலிம் பேக்ட்ரி” தான் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் பிசாசு படத்திற்கு இசையமைத்த அரோல் கரோலி தான் இப்படத்திற்கும் இசை.

அரோல் மிஸ்கின், விஷாலுடன் செய்த கலாட்ட தருணங்களை தன்னுடைய முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார், “ என்னுடைய காட்பாதருடன் இரண்டாவது பயணத்திற்கு தயாராகிவிட்டேன்.  சொந்தவாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருக்கிறார்  விஷால் அண்ணா, உங்களுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு