Published:Updated:

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

தோ களை கட்டிவிட்டது விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5. இன்றைக்கு இறுதிச்சுற்று. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்தாவது சீசனிலும் ஃபைனலைத் தொட்டுவிட்டது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

செம பிசியாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஃபைனல் போட்டியாளர்கள் ஐந்து பேரும் , கொஞ்சம் பேசுங்களேன் என்றால் படபடக்கிறார்கள்,

சியாத்,

செம எக்ஸைட்டா இருக்கு, ஆனால் வெற்றி பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அந்த பெரிய ஸ்டேஜ்ல போய் நிற்கறதே பெரிய சேலஞ்சா பார்க்கறேன். எனக்கு சொந்த ஊரு பாலக்காடு, கேரளா. டிகிரி முடிச்சிட்டு இப்போ முழு நேரமா மியூசீஷியனா இருக்கேன். அதிகமா முஸ்லிம் சாங்ஸ் தான் பண்ணிட்டு இருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கப்பறம் தான் நிறைய பாடல்கள் பாட ஆரம்பிச்சிருக்கேன். கோயம்புத்தூர் ஆடிஷன்ல தான் என் ஃப்ரெண்ட் மூலமா இந்த போட்டிக்குள்ள வந்தேன். அம்மா நல்லா பாடுவாங்க. அதே மாதிரி அக்கா, அண்ணாவும் நல்லா பாடுவாங்க. பாட்டு மட்டுமில்லாம பியானோவும் நல்லா வாசிப்பேன். பயங்கரமான கேஷுவல் நான். எனக்கு ஜாலியா இருக்கறது ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் இருக்கேன். இருந்தாலும் அந்தப் பெரிய செட்ட பார்த்த உடனேயே கொஞ்சம் படபடப்பா இருக்கு. பார்க்கலாம்!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

ஃபரிதா,

மத்த நாலு பெருக்கும் எனக்கும் ஒரு பெரிய வித்தியாசம் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. எனக்கு கண்டிப்பா இந்த வெற்றி தேவைப்படுது. அவ்ளோ கஷ்டப்பட்டு வந்துருக்கேன். எனக்குக் கணவர் இல்ல. ரெண்டு குழந்தைகளோட படிப்புக்குக் கூட என்னால செலவு செய்ய முடியாத நிலைல இருக்கேன். இப்போ கூட என் கணவரோட குடும்பம் தான் எனக்கு நல்ல சப்போர்ட் குடுத்துட்டு இருக்காங்க. இருந்தாலும் அவங்களும் பெரிய பணம் படைச்சவங்க இல்ல.மத்தவங்கள்லாம் இளைஞர்கள். ஈஸியா அவங்களுக்கு ஓட்டுகள் விழும், ஆனால் என்னோட ஃபாலோயர்ஸ் எல்லாருமே கொஞ்சம் மிடில் ஏஜ்ல இருக்காங்க அவங்கள்ல சில பேருக்கு எப்படி ஓட்டு போடணும்னு கூட தெரியல. நிறைய சங்கடங்கள், நிறைய பிரச்னைகளைக் கடந்து இந்த இடத்துக்கு வந்துருக்கேன். நாளைக்குக் கிடைக்கப்போற வெற்றி தான் என் வாழ்க்கைக்கு ஒரு பெரிய சப்போர்ட்டா இருக்கும். இருந்தாலும் அந்த ஸ்டேஜ்ல நிக்கறதே ஒரு பெரிய விஷயம் தான். நம்பறேன். ரொம்ப ஜாலியா இருந்தேன் என்னோட கணவர் போனதுக்கு அப்பறம் தான் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்னு கூட சொல்லலாம். ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க .பிரம்மாண்ட ஸ்டேஜ் , லைவ். என்ன நடக்குமோனு இருக்கு. நம்பிக்கையோட இருக்கேன்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

ராஜகணபதி:

நான் பிறந்தது மதுரைக்குப் பக்கத்துல மேலூர். பிறந்தவுடனேயே சென்னை வந்தாச்சு. நான் +2 படிச்சிட்டு இருக்கேன். ஃபைனலுக்குக் கூட மேத்ஸ் எக்ஸாம் எழுதிட்டு தான் வரப் போறேன். படிச்சிட்டு வழக்கமான பி.ஏ, அல்லது பி.எஸ்.சி இப்படிதான் ஏன்னா சின்ன வயசுல இருந்தே மியூசிக் கத்துக்கிட்டு இருக்கேன். ஃபியூச்சர் மியூசிக் தான். ஆமாம் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டட்ல இருந்து கர்னாடிக் மியூசிக். இப்போ இங்க வந்து நிற்கறேன். எனக்கு நாளைக்கு போட்டிய நினைச்சாக் கூட எக்ஸைட்டா இல்ல, இப்போல்லாம் வெளிய போனாலே ஆளாளுக்கு என் கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க, ஹாய் சொல்றாங்க அதுதான் எக்சைட்டா இருக்கு. என் குடுமி வேற எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் போல ஆகிடுச்சு , ஆக்சுவலி அப்படி கேக்கணும்னு தான் வெச்சேன். அது நடந்துடுச்சு. நிறைய விஷயம் பண்ணணும். ஆல்பம் ரிலீஸ் பண்ணணும். நல்ல ஸ்டேஜ் கிடைச்சிருக்கு இதுக்கு முன்னாடி ஜூனியர் சூப்பர் சிங்கர்ல வந்தேன் அப்போ முடியல இப்போ ஃபைனல எட்டிப் பிடிச்சுட்டேன். அத யூஸ் பண்ணி எனக்குன்னு ஒரு பேரு கொண்டு வரணும். டைட்டில் வின் பண்ணணும்னு நினைக்கல.. பார்க்கறவங்கள எண்டெர்டெயின் பண்ணணும்! அதுதான் என்னோட குறிக்கோள். வீட்ல செம சப்போர்ட். நாளைக்கு நைட்டு தெரிஞ்சுடும்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

ஆனந்த் அரவிந்தாக்ஷன்,

ரெடியா இருக்கேன். எனக்கு போட்டின்னு ஒரு எண்ணமே இல்லை, ஏன்னா இதுக்குத்தான் ஆசைப் பட்டோம்? ஒரு ஃபைனல் மேடையில எல்லார் முன்னாடியும் பாடணும். அதுதான் முக்கியம் . வின் பண்றதெல்லாம் அப்பறம். என்னோட பாட்டும் அப்படித்தான் ஆடியன்ஸ திருப்தி படுத்தற மாதிரி இருக்கணும்னு யோசிச்சு செலக்ட் பண்ணியிருக்கேன். ஜாலியா இருக்கு. நான் இப்படி தான். கோவமோ டென்ஷனோ வராது. சிம்பிளா , கேஷுவலா இருப்பேன். நான் பி.காம் படிச்சுட்டு சவுண்ட் இன்ஜினியரிங் படிச்சேன். மியூசிக் ரிலேட்டடா படிக்கணும்னு நினைச்சு படிச்சேன். மியூசிக்னா அவ்ளோ பிடிக்கும். அப்பா ஃபேமஸ் கர்னாட்டிக் சிங்கர் அரவிந்தாக்ஷன். அவரோட ஜீன் அப்படியே வந்துடுச்சு. அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணா லண்டன்ல இருக்காங்க. வொர்க் பண்றாங்க. மியூசிக் வாய்ப்புக்காக நிறைய தேடினேன். இண்டஸ்ட்ரியில நிறைய அலைஞ்சேன். கடைசி ட்ரை தான் சூப்பர் சிங்கர். இப்போ இங்க வந்தாச்சு ஸ்டேஜ் சூப்பரா இருக்கு. பிரம்மாண்ட செட் போட்ருக்காங்க. நடுவுல வேற போட்டி போட்டு பாடி வெளியேறினேனு கூட இல்லாமல் தொண்டை சரியில்லாமல் வெளியே போனேன். அப்பறம் ஒயில்ட் கார்டு கை குடுத்துச்சு. அதுக்கு முதல்ல நன்றி. எதிர்காலத்துல நிறைய பாட்டு ரிலீஸ் பண்ணணும். எல்லாத்துக்கும் மேல இந்த டைட்டில் ஃபரிதா அக்காவுக்கு கிடைக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. எங்களையெல்லாம் விட அவங்க வாழ்க்கைக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். நாங்க எல்லாருமே ஓட்டு போட்டாக் கூட ஃபரிதா அக்காவுக்குதான் போடுவோம்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

லட்சுமி

கொஞ்சம் டென்ஷனா இருக்கு, எக்ஸைட்டா இருக்கு. பெரிய ஸ்டேஜ் , இந்த செட் பாத்தோன இன்னும் படபடப்பா இருக்கு. எனக்கு சொந்த ஊரு கொச்சின். நான் கொஞ்சம் வித்தியாசமான படிப்பு படிக்கறேன். மெட்டிரியல் சைன்ஸ் & மெட்டியோராலஜி (material science and meteorology) ஃபர்ஸ்ட் இயர் ஆக்சுவலி எனக்கு இந்தப் படிப்பு படிக்கணும்னு ஆசையில்லை. இந்தக் காலேஜ்ல படிக்கணும்னு தான் ஆசை. அதான் பெங்களூர்ல என்.ஐ.டில படிக்கறேன் அப்பா வக்கீல், அம்மா டீச்சர். தம்பி +1 படிக்கறாரு. ஏகப்பட்ட எலிமிநேஷன், ஏகப்பட்ட ரிஹெர்சல். இதுலல்லாம் தப்பிச்சு இப்போ இங்க வந்துட்டேன். ஃபைனல் கிளப்பணும். எனக்கு டைட்டில் வின் பண்ணணும்னு ஆசை இருந்தாக் கூட ஃபர்ஸ்ட் நான் நல்லா பாடணும்.நான் எடுத்துகிட்ட பாட்ட முழுமையா சரியா பாடணும். இதுல சீஃப் கெஸ்ட் யாருன்னு கூட சொல்ல மாட்றாங்க. ரொம்ப சீக்ரெட்டா இருக்கு. யாரு முன்னாடி பாடப் போறோம்னு தெரியல. இது முடிஞ்ச உடனே அடுத்து ஸ்டடீஸ் முடிக்கணும். அப்பறம் திரும்ப மியூசிக் எனக்கு மொழி பிரச்னை இல்லை இந்தி, தமிழ், மலையாளம் தெரியும் எந்த ஃபீல்ட்னாலும் ஓகே. மியூசிக்ல பெரிய ஆளா வரணும்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி

ஐந்து பேருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு என்ன நடக்கிறது, யார் சிறப்பு விருந்தினர் , யாருக்கு டைட்டில் ஏதாவது கெஸ்ஸிங் என நிகழ்ச்சிக் குழுவிடம் கேட்டால் எல்லாமே சீக்ரெட். அப்பறம் சஸ்பென்ஸ் போய்டுமே, ஆனா வின்னர் எங்களுக்கே சஸ்பென்ஸ் , அது மக்களோட கையில இருக்கு என்கின்றனர். காத்திருப்போம் இன்றிரவு 9.30மணி வரை..

- ஷாலினி நியூட்டன் -