Published:Updated:

என் மனைவி தோழா படத்தில் நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க - நாகார்ஜுனா பேட்டி

Vikatan Correspondent
என் மனைவி தோழா படத்தில் நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க - நாகார்ஜுனா பேட்டி
என் மனைவி தோழா படத்தில் நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க - நாகார்ஜுனா பேட்டி

கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் தோழா. வம்சி இயக்கத்தில் ராஜுமுருகன் வசனத்தில்  வெளியாகவிருக்கும் படம் . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் படம் குறித்து கார்த்தி, நாகார்ஜுன், இயக்குநர் வம்சி விவேக் மற்றும் மதன் கார்க்கி பேசினர்.

வாழ்க்கையை  வாழ்ந்து முடித்த ஒருவர், வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒருவர் ஆகிய இருவரின் கதை தான் தோழா எனக் கூறினார் கார்த்தி. நடிகர் விவேக் பேசுகையில் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது கார்த்தியின் உதவும் குணம் கண்டு ஆச்சர்யப்பட்டேன் கார்த்தி கேட்டுக்கொண்டதற்காக ஒரு சின்ன ரோலில் நடித்தேன் ஆனால் இராமாயணத்தின் ஆஞ்சநேயர் கேரகடர் போல் முக்கியமான கேரக்டர். என்றார். தொடர்ந்து பேசிய கார்த்தி சென்னை வெள்ளத்தில் நாய் கூட உதவியது சார். நான் உதவியதெல்லாம் விஷயமே அல்ல என்றவர் நாகார்ஜுனாவுடன் நடிக்க வேண்டும்  என்பது எனது ஆசை எனச் சொல்லி அமர்ந்தார்.

என் மனைவி தோழா படத்தில் நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க - நாகார்ஜுனா பேட்டி

நாகார்ஜுன் பேசுகையில்,  நான் தமிழில் இதயத்தைத் திருடாதே, ரட்சகன், பயணம்  என முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்தேனோ அதே போல் மீண்டும் தமிழில்  எனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த படம் கிடைத்துள்ளது. இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமான படம். என்றார்.  அவர் பேச்சைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள்....

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்துகொண்டு எப்படி வீல் சேரிலேயே நடித்தீர்கள்?

எவ்வளவோ படங்கள் அப்படி பண்ணிட்டேன் இப்போவாது வித்தியாச கேரக்டர் செய்யணும் உண்மையைச்  சொன்னா நான்  காத்திருந்ததுக்குக் கிடைச்ச அதிர்ஷ்டமான வாய்ப்பு இது. நீங்க நல்லா டான்ஸ் ஆடுவீங்க இப்போ இந்தப் படத்துல உங்க முகம் மட்டும் தான் அசையும் கார்த்தி தமன்னா கூட டான்ஸ் ஆடும்போது உங்களுக்கு எப்படி இருந்துச்சு?
ஹா ஹா .. கார்த்தி மூலமா அவரோட கை கால்கள் மூலமா நான் ஆடினேன். ஆக்சுவலி படத்தோட கத கூட அதுதான்.  எனக்காக அவர் அவருக்காக நான். ஆனா பெர்சனலா சொல்லணும்னா கொஞ்சம் பொறாமையா இருந்துச்சு..

ஏற்கனவே நீங்க மனம் படத்துலயே உங்க வழக்கமான மசாலா பாணிய மாத்திட்டீங்க இப்போ தோழா. இனிமே உங்க படங்கள் எப்படியிருக்கும்?
 
இப்படி யுனிக்கா நிறைய படங்கள் பண்ணணும்.. அதுதான் பண்ணுவேன்..போதும் நிறைய லிப்ஸ்டிக் போட்டு ஜீன்ஸ் போட்டு பறந்து பறந்தெல்லாம் அடிச்சாச்சு .. கொஞ்சம் உணர்வுப்பூர்வமான படங்கள் பண்ணுவோம்.
 
உங்க வீட்ல இந்தப்படத்த எப்படி எடுத்துக்கிட்டாங்க ?

என் மனைவி தோழா படத்தில் நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க - நாகார்ஜுனா பேட்டிஎன் ஒயிஃப் கண்டிப்பா உங்களை இப்படியெல்லாம் வீல் சேர்ல பாக்க முடியாது இந்தப் படம் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால் கண்டிப்பா படம் பார்த்துட்டு அவங்க பெருமையா நினைப்பாங்க. நீங்களும் பாருங்க உண்மையா ஒரு நட்பு, காதல் , உணர்வு அதுக்குள்ள காமெடி எல்லாமே இருக்கு.. முக்கியமா இது ஃப்ரெஞ்சு படத்தோட ரீமேக் இல்ல அடாப்டேஷன். கதையை மட்டும்  எடுத்துகிட்டு  நம்ம இந்திய உணர்வுகளோட எடுத்துருக்கோம்..
 
கார்த்தி பத்தி சொல்லுங்க?

முதல்ல எனக்கு கார்த்தி யாருன்னு தெரியல ஹூஸ் தட் மேன்னு கேட்டேன்.  அப்பறம் தான் சூர்யா பிரதர்னு சொன்னாங்க. விவேக் சார் பேசும் போது தான் தெரிஞ்சது. கார்த்தி சின்னப் பையனா சைக்கிள் தள்ளி விட்டு விவேக் சாருக்கு ஹெல்ப் பண்ணதா சொன்னாருன்னு. அப்போதான் என்னோட வயசு எனக்கு ஞாபகம் வந்துச்சு.. அதுக்காக கார்த்திய நான் பாய்னு சொல்ல மாட்டேன் , மேன் தான் அப்பறம் என் வயசு தெரிஞ்சுடும்ல..
 
வம்சி இந்தப் படம் பத்தி சொன்னபோது என்ன ஃபீல் பண்ணீங்க?

முதல்ல சிடி குடுத்து பார்க்க சொன்னப்ப நீங்க நோ சொல்ல போறீங்கன்னு தான் வம்சி சொன்னாரு .. ப்ளீஸ் நோ சொல்லிடாதிங்கன்னு சொன்னாரு.. ஆனா நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படம் பாத்துட்டேன்.. ஆனா நான் அந்த வீல் சேர் வாசி தானான்னு கேட்டேன். அவர்  ஆமாம்ன  உடனே ஓகே சொல்லிட்டேன்..எனக்கு எக்ஸ்ட்ராடினரி கேரக்டர். என் வாழ்க்கையவே மாத்தப் போற படமா நினைக்கிறேன் . எப்படி இதயத்தைத் திருடாதே என் லைஃப்ல ஒரு சேஞ்சோ அப்படித்தான் இந்தப் படம்.. தோழா பார்க்க மறக்காதிங்க.

தொகுப்பு : ஷாலினி நியூட்டன்