Published:Updated:

பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி

பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி
பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி

பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 88.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், கடந்த சில வாரங்களாக  உடல் நலம் இல்லாமல் இருந்தார். உடல் நிலை மோசமானதால் 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 

பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி

வீடு திரும்பிய அவர் முதுமை மற்றும் உடல் நிலை காரணமாக இன்று காலை 10.30  மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைப்படத்துறை செய்தி தொடர்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்ற ஆனந்தன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நாளை இறுதிச் சடங்கு நடை பெறுகிறது. மரணம் அடைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சிவகாமி (83) என்ற  மனைவியும், டைமண்ட் பாபு, ரவி, ஆகிய மகன்களும்  கீதா, விஜயா என்ற மகள்களும் உள்ளனர்.  இவர்களில் டைமண்ட் பாபு முக்கிய நடிகர்களுக்கு செய்தி தொடர்பாளராக  இருந்து வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா இரங்கல்:
தமிழ்த் திரை உலகின் வரலாற்று ஆசிரியர் என்றும், நடமாடும் நூலகம் என்றும் பெருமை பெற்ற 'பிலிம் நியூஸ்’ ஆனந்தன்  உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.  சினிமா உலகில் நீண்ட கால அனுபவம் உள்ள  ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன்  சினிமா தொடர்பான அனைத்து விவரங்களையும், புகைப்படங்களையும் தொகுத்துள்ளார். 

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செய்தியாளராக பணியாற்றிய  போது, தமிழ் சினிமா குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து, அதையே உணர்வுபூர்வ பணியாக மேற்கொண்டார். எவரிடமும் இல்லாத வகையில் அனைத்து விவரங்களையும் இவர் தொகுத்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

2002-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட பத்து  லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும், திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’ என்னும் நூலை வெளியிடுவதற்கு நிதி உதவி வழங்கியது. ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன்  இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி


 

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ. பிலிம் நியூஸ் ஆனந்தன்- நினைவலைகள்!  
 
தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தன், சென்னையில் கோடம்பாக்கத்தில் இன்று காலமனார்.அவருக்கு வயது 88. கடந்த 1954ம் ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட தென் இந்திய திரைப்படங்களின் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள் என்று அனைத்துத் தரப்பு தகவல்களையும் சேகரித்து  வைத்து இருந்த பெருமைக்கு உரியவர்.

அவரின் வாழ்க்கையில் சினிமா ஒன்றிக் கலந்த வரலாற்றை,  அவரே முன்பு ஒரு பேட்டியில் கூறியது இங்கே சுருக்கமாக....

"எனது பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். மேலும் சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் காரணமாக,  எனது யுக்தியால் இரட்டைவேடப் படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக் கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்- ஜெயலலிதா இரங்கல், விஜயகாந்த் நேரில் அஞ்சலி


1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டேன். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தேன். எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினேன்.

நடிகர் சங்கத்தின் நடிகன் குரல் பத்திரிகையின் போட்டோ - ஜர்னலிஸ்ட் - ஆக மாறினேன். அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், நடிகன் குரலின் பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆரை தினமும் சந்திப்பார். அவருடன் நானும் செல்வேன்.

1958 ல் எம்.ஜி.ஆர்.,  நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜென்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அன்றைய வழக்கம்.

“ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா?” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம்தான்" என்று தெரிவித்தார் ஆனந்தன்.

அடுத்த கட்டுரைக்கு