Published:Updated:

ரஜினிகாந்துக்கு வயது 41 - ஹேப்பி பர்த் டே ரஜினிகாந்த்

ரஜினிகாந்துக்கு வயது 41 - ஹேப்பி பர்த் டே ரஜினிகாந்த்
ரஜினிகாந்துக்கு வயது 41 - ஹேப்பி பர்த் டே ரஜினிகாந்த்

ரஜினிகாந்துக்கு வயது 41 - ஹேப்பி பர்த் டே ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டாருக்கு டிசம்பர் மாதத்தில்தானே பிறந்த நாள் இன்றைக்கு வாழ்த்து சொல்றாங்களேன்னு அதிர்ச்சியாக இருக்கிறதா? ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ். கர்நாடகத்திலிருந்து நடிப்பு வேட்கையோடு சென்னை வந்தவர், நண்பர்கள் உதவியோடு ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து, சிவாஜி ராவ் எனும் பெயரிலேயே நடிக்கும் வாய்ப்பும் தேடிக்கொண்டிருந்தார். தன் பார்வையில் விழுந்த சிவாஜி ராவை, 1975 ஆம் ஆண்டு இயக்குநர் பாலச்சந்தர் அருமையான கேரக்டரில் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தினார்.

அதே ஆண்டு, வண்ணமயமான ஹோலி பண்டிகையில் சிவாஜி ராவ் என்ற பெயரை மாற்றி, ரசிகர்களைக் காந்தம் போலக் கவரும் 'ரஜினிகாந்த்' என்ற பெயரைச் சூட்டினார் பாலச்சந்தர். அன்றுதான் ரஜினிகாந்த் எனும் புதிய பெயருடன் பிறந்தார். அந்தப் பெயரே உலகம் முழுவதும் பரவி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்த் எனும் இந்தப் பெயர் திரையில் ஒளிரும்போதுதான் சில்லறை காசு, வண்ணக் காகிதங்களைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

ரஜினிகாந்துக்கு வயது 41 - ஹேப்பி பர்த் டே ரஜினிகாந்த்

கையில் சூடம் கொளுத்திக் காட்டிய ரசிகர்களும் உண்டு. இன்னும் பலரை, தங்களை மறந்து விசில் அடித்துக்கொண்டே, சட்டையைக் கழற்றி ஆட வைத்ததும் இந்தப் பெயர்தான். பலர் தங்கள் பெயரோடு இணைத்துக்கொண்டது ரஜினி எனும் பெயரைத்தான். ரஜினி ரசிகர்கள் பலரும் தங்கள் உடலில் தங்களின் ஹீரோவை பச்சை குத்திக்கொள்வார்கள். அப்படி சூப்பர் ஸ்டாரின் பெயரை 'ரஜினிகாந்த்' என்றே பச்சைக் குத்திக்கொள்கின்றனர்.

தங்களின் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெண் குழந்தைகளுக்கும் ரஜினிகாந்த் பெயரையே வைத்துள்ளனர். தங்களின் கடைகளுக்குக்கூட ரஜினி பெயரை வைத்துள்ள தீவிர ரசிகர்கள் ஏராளம். பல படங்களின் பாடல்களில் ரஜினி எனும் பெயர் வருவதுபோலவும் எழுதப்பட்டிருக்கின்றன. சென்ற மாதம், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ஹிட் படத்தின் பெயரும் ரஜினி முருகன் என்று வைத்திருப்பதன் மூலம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பெயருக்குள்ள பவர் அதிகரித்தே வருகிறது என்பதைச் சொல்லியா தெரியவேண்டும்? இன்று ஹோலி பண்டிகை. அப்படியென்றால் 'ரஜினிகாந்த்' பிறந்த நாள் தானே பாஸ்? அப்பறமென்ன... ஸ்வீட் எடு கொண்டாடு!

- வி.எஸ்.சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு