Published:Updated:

”அஜித் ஃபேன்ஸ் பாராட்டினாங்க, விஜய் ஃபேன்ஸ் திட்டினாங்க” சன் மியூஸிக் மாஷ் அப் மைண்ட் கார்த்திக் சரண்!

”அஜித் ஃபேன்ஸ் பாராட்டினாங்க, விஜய் ஃபேன்ஸ் திட்டினாங்க” சன் மியூஸிக் மாஷ் அப் மைண்ட் கார்த்திக் சரண்!
”அஜித் ஃபேன்ஸ் பாராட்டினாங்க, விஜய் ஃபேன்ஸ் திட்டினாங்க” சன் மியூஸிக் மாஷ் அப் மைண்ட் கார்த்திக் சரண்!

ன் மியூசிக்கின் மாஷ் அப் தான் இப்போது இளசுகளின் ஹாட் சாய்ஸ். அதிலும் தல மாஷ் அப் செம ஹிட் எனில் மை பாட்டு நிகழ்ச்சியில் கூட அனைவரின் சாய்ஸாக நிற்கிறது லவ் மாஷ் அப்.. பலரும் ரிங் டோன்களாகக் கூட இந்த மாஷ் அப்’ களை வைத்திருக்க இந்த மாஷ் அப் ஐடியாவுக்கு சொந்தக் காரரான கார்த்திக் சரணிடம் ஹாய் சொன்னோம்,

உங்க மீடியா அனுபவம் பத்தி சொல்லுங்களேன்?

‘‘நான் சுத்தமான சென்னைக்காரன். எஸ்.ஆர்.எம். காலேஜ்ல விஸ்காம் படிச்சுட்டு, கேமராமேன் ஆகணும்னு கனவு கண்டேன். என்னோட ஷார்ட் ஃபிலிம்ஸ், டாக்குமென்டரி எல்லாம் தந்த வாய்ப்பு... என் புரொஃபைலை ‘நீயா நானா’ புரொகிராம் புரொட்யூசர் ஆக்குச்சு!”.

”அஜித் ஃபேன்ஸ் பாராட்டினாங்க, விஜய் ஃபேன்ஸ் திட்டினாங்க” சன் மியூஸிக் மாஷ் அப் மைண்ட் கார்த்திக் சரண்!

வீட்ல மீடியா’னு சொன்னாலே காதுல ரத்தம் வர வெச்சுடுவாங்களே?

“உண்மைதான், வீட்ல என்னை மீடியாவுக்கு வழியனுப்பி வைக்க பெருசா விருப்பமில்ல. ஆனாலும் அவங்க விருப்பப்படி எம்.பி.ஏ படிச்சுட்டே என்னோட பேஷன் குறும்படம், வாய்ஸ் வொர்க்னு லைஃப் போச்சு!”.

சன் மியூசிக் என்ட்ரீஎப்படி?

“நீயா நானா, ஷார்ட் ஃபிலிம்ஸ் இந்த எக்ஸ்பீரியன்ஸ் ‘மாமிஸ் டே அவுட்’ புரொகிராம் புரொட்யூசர் ஆகிட்டேன். விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவுக்கும், எனக்கும் புது லைஃப் கொடுத்த ஷோ அது தான்!”

இந்த மாஷ் அப் ஐடியா எப்படி?

“என்னதான் மாமீஸ் டே அவுட் ஷோ ஹிட் ஆனாலும் என் பேரு வெளிய வரவே இல்லை. ‘யார்டா இந்த கார்த்திக்னு கேக்கணும். என்ன செய்யலாம்?’னு மண்டையை உடைச்சு யோசிச்சதுதான், `மாஷ் அப்’. முதல்ல ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பண்ணினோம். செம ஹிட். தொடர்ந்து பல மாஷ் அப் பண்ணி லைக்ஸ் குவிச்சாச்சு!”.

”அஜித் ஃபேன்ஸ் பாராட்டினாங்க, விஜய் ஃபேன்ஸ் திட்டினாங்க” சன் மியூஸிக் மாஷ் அப் மைண்ட் கார்த்திக் சரண்!

இந்த மாஷ் அப்’க்கு பின்னாடி என்ன நடக்குது?

“பலரும் ‘பாட்டை மிக்ஸ் பண்றதுதானே மாஷ் அப்’னு இதை ஈஸியா நினைக்கலாம். ஆனா, இதுவும் கிட்டத்தட்ட மியூசிக் கம்போசர் வேலை மாதிரிதான். பாட்டு உடையக் கூடாது, டியூன் மாறிடக் கூடாது, இசையமைச்சவங்க, பாடினவங்க ‘அய்யோ, என் பாட்டு!’னு நினைக்கும்படி ஆயிடக் கூடாது. இப்படி பல சவால்கள். சில இடங்களில் பாடல்களைக் கோர்க்கும்போது நானே பாடினேன், சில எஃபெக்ட்ஸ் பயன்படுத்தினோம். இப்படி எவ்வளவோ உழைப்புகளுக்கு அப்பறம் தான் இந்த மாஷ் அப் முழுமையாகுது!”.

அஜித் மாஷ் அப் போட்டு ஃபேன்ஸ இம்ரஸ் பண்ணீட்டிங்களே?

“அஜித் மாஷ் அப் பண்ணினப்போ, `தல’ மாஷ் அப் கூடவே என் பேரும் சேர்ந்து ட்ரெண்ட் ஆச்சு... அதுதான் வாவ் மொமண்ட்! இப்போ எல்லோரும் விரும்பிக் கேட்கிறது, லவ் மாஷ் அப். சிலர், டிராக் வேணும்னு கேட்டு அனுப்பச் சொல்லி ரிங் டோனா வெச்சுக்கறாங்க!”. 

 காமெடி மாஷ் அப்’ல ஏன் விஜய்? 

“ இல்ல ஒரு ஃபைனல் டச் வேணும்னு நினைச்சு வெச்சது, எல்லாத்துக்கும் மேல எங்க டீமோட பேரு வர இடத்துல விஜய் சார் சீன் வெச்சா தான எங்களுக்கு ரீச் கிடைக்கும். அத தான் நினைச்சு வெச்சோம் வேற எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை, உண்மைய சொன்னா நாங்க பண்ண மாஷ் அப்’லயே அதுதான் செம ஹிட். அந்த பாட்டுல வர ஒவ்வொரு காமெடி டயலாக்கும் எல்லாருக்கும் மனப்பாடம். முக்கியமா ”சங்கூதுற வயசுல சங்கீதா”, ”கம்முனு கிட” இப்படி எங்களுக்கே ஒரு உற்சாகம் கொடுத்த மிக்ஸ் அது. ஆனா எந்த அளவுக்கு தல ஃபேன்ஸ் கிட்ட பாராட்டு வாங்கினோமோ அதே அளவுக்கு விஜய் ஃபேன்ஸ் கிட்ட செம திட்டு. என்ன இப்படி ஆகிடுச்சுன்னு உடனே விஜய் மாஷ் அப் செம பக்காவா பிளான் பண்ணி உருவாக்கினோம். அவ்ளோ தான் விஜய் ஃபேன்ஸ் செம ஹேப்பி அண்ணாச்சி ஆகிட்டாங்க..அந்த காமெடி மாஷ் அப்’ல விஜய் மட்டுமில்ல ரஜினி, கமல், எல்லாருமே வருவாங்க. ஏன் பன்னீர் செல்வமா திரும்ப வரணும்ங்கற சீரியஸ் டயலாக் கூட வெச்சிருப்போம்!”

இந்த மாஷ் அப் செம ரீச் .... ஹேப்பியா இருக்கு. அடுத்து, ஒரு புது கான்செப்ட் பிடிக்கணும்!’’

குட்... கார்த்திக்! 

லவ் மாஷ் அப் வீடியோ! 

- ஷாலினி நியூட்டன் -