Published:Updated:

டிரெண்டா இருந்திருந்தா டிஃப்ரண்டா இருந்திருக்கும் - நாரதன் விமர்சனம்

டிரெண்டா இருந்திருந்தா டிஃப்ரண்டா இருந்திருக்கும் - நாரதன் விமர்சனம்
டிரெண்டா இருந்திருந்தா டிஃப்ரண்டா இருந்திருக்கும் - நாரதன் விமர்சனம்

ராமு: ‘டேய் சோமு.. நாரதன் பார்த்துட்டியா என்ன கதை?’


சோமு: ‘ஓ.. கோவைல இருந்து புறப்படற டிரெய்ன்ல நகுல், நிகிஷா பட்டேலைத் தொரத்தறவங்ககிட்ட இருந்து காப்பாத்தறார்.
 

ராமு: எதுக்கு தொரத்தறாங்க?
 

சோமு: அதெல்லாம் கேட்கக்கூடாது. நகுலே கேக்காம படம் பூரா காப்பாத்திட்டேதான் இருக்கார். க்ளைமாக்ஸ் நெருங்கும்போதுதான், ஆடியன்ஸ் எந்திரிச்சுப் போய்டுவாங்க.. அதுக்குள்ள சொல்லணுமேன்னு.. அப்பயும் இவரா கேக்கல, அவங்களா சொல்றாங்க.

ராமு: அப்பறம்?

டிரெண்டா இருந்திருந்தா டிஃப்ரண்டா இருந்திருக்கும் - நாரதன் விமர்சனம்

சோமு: நகுலோட, மாமா ராதாரவி அவர் பொண்ணு சோனுகூட இவரைக் கோவிலுக்கு அனுப்ச்சா, அங்கயும் நிகிஷா ஓடி வர்றாங்க. அவங்கள காப்பாத்த நகுல் ஓடறாரு. ஓடறாரு.. ஓடிட்டே இருக்கார். ராதாரவி வேலையாட்களான எம், எஸ். பாஸ்கர் டீமும் ஓடுது. ஓட்டத்துக்கு நடுவுல பாட்டெல்லாம் பாடிகிட்டே ஓடி, சாப்பிட்டுகிட்டே ஓடி..  இதுக்கு நடுவுல ராதாரவி வீட்ல கதை சொல்ல வந்த டைரக்டர் ப்ரேம்ஜி அமரன் சொல்ற கதையும், நகுலுக்கு நடக்கறதும் ஒரே மாதிரி இருக்கு! 

 ராமு: அதெப்படிடா?
 

சோமு: அதும் எப்டின்னெல்லாம் கேக்கக்கூடாது. ஏன்னா கதை எழுதினது பவர் ஸ்டார் சீனிவாசன். அந்தக் கதையத்தான் பிரேம்ஜி, ராதாரவிக்கு சொல்றார்.
 

ராமு: ஓ.. இது பவர் ஸ்டார் எழுதின கதையா?
 

சோமு: நாரதன் படக்கதை இல்ல. நாரதன் படத்துக்குள்ள வர்ற படத்துக்காக டைரக்டர் பிரேம்ஜி சொல்ற கதை.
 

ராமு: அப்பறம் என்னாச்சு?
 

சோமு: அப்பறம் பிரேம்ஜிகிட்ட கதையக் கேட்டுகிட்டே ராதாரவி, அதே மாதிரி தன் வாழ்வுல நடக்கறதை தெரிஞ்சுகிட்டு டென்ஷனாகி, நம்மளையும் டென்ஷனாக்கி..
----------------
 

ன்னடாது.. பழைய ஸ்டைல்ல ராமு.. சோமுன்னுகிட்டுன்னு டென்ஷனாவுதா.. அப்டித்தாங்க. கிரேஸி மோகன் கைல கிடைச்சா நல்ல படமாவோ, குறைந்தபட்சம் நல்ல நாடகமாகவோ ஆகியிருக்க வேண்டிய கதை.. ‘புத்தம்புதிய வசனங்களால’ அய்யோ சாமின்னு ஆய்டுச்சு.
 

அப்படி என்ன வசனங்களா? புதுமையான, இளமையான வசனங்கள்-ங்க! ‘ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு கடசீல..’, ‘நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும்’, ‘ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க’ ‘கதைய மேல சொல்லு - மேலன்னா மொட்ட மாடிலயா?’ அப்டின்னு ஆரம்பிச்சு வசனங்கள் எல்லாம் புது ரகம். இதுவரைக்கும் கேட்டதே இல்லன்னா பார்த்துக்கங்களேன்!

இனி புதுசா படம் பண்றவங்க யாருக்காவது, எந்தெந்த கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கலாம்னு டவுட் வந்தா, இந்தப் படத்தைப் பார்க்கலாம். அத்த்த்த்த்தனை பேர் இருக்காங்க. பிரேம்ஜி, பவர் ஸ்டார், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, பாண்டு, வையாபுரி, சுப்பு பஞ்சு அருணாசலம், சேத்தன், மீரா கிருஷ்ணன், கவிதா, ‘தேன்ன்ன்ன் அடை’ மதுமிதா அப்டின்னு டஜன் கணக்குல கேரக்டர்ஸ். இதுல வசனம் பேசி நடிச்சவங்க ஆளுக்கு 100 பேரை பார்க்க வெச்சாலே படம் ஹிட்டாய்டும் போல.
 

டிரெண்டா இருந்திருந்தா டிஃப்ரண்டா இருந்திருக்கும் - நாரதன் விமர்சனம்

இடைவேளைக்குப் பிறகு, ஒரு சில காட்சிகள்ல, கிச்சுகிச்சு மூட்டி, தியேட்டர்ல சிரிக்கறாங்க. நமக்குத்தான் பிடிக்கலையோன்னு பக்கத்துல இருக்கறவர்கிட்ட கேட்டா, ‘சிரிக்கலைன்னா விடமாட்டாங்க போல.. சும்மா உட்கார்ந்திருக்கறதுக்கு சிரிக்கவாவது செய்லாமேன்னு சிரிக்கறேன்’னு சொல்றார்.
 

நிகிஷா படேல், எதுக்கு ஓடறாங்கன்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சிருக்காங்க. அதுல வில்லன் சுப்பு பஞ்சு அருணாச்சலம். அவரைப் பார்த்தாலே பயமா இருக்குன்னு அஞ்சாறு பேர் வெளில போய்ட்டாங்க.
 

க்ளைமாக்ஸ் பின்னி மில் ஃபைட் சீன் நடக்கறப்ப, வையாபுரி போலீஸைக் கூட்டீட்டு வந்து வில்லன் கேங்கைக் காமிச்சு ‘அரெஸ்ட் பண்ணுங்க சார்’ங்கறார். போலீஸும், அவங்க சட்டையப் பிடிச்சு ‘வாங்கடா’னு இழுத்துட்டுப் போறாங்க.  இதுவரைக்கும் தமிழ்சினிமா பார்க்காத புதுமையான டிரெண்டான இறுதிக்காட்சி!
 

பத்து ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து போய், கலகலன்னு கலாய்ச்சுட்டு வரலாம். அதுக்கு வேணா ஓகே.  

படத்துல ஒரு சீன்ல பிரேம்ஜி சொல்றார். ‘இப்போதைய டிரெண்டு தெரியாம படம் எடுத்தா அவ்ளோதான்’னு. வேற என்ன சொல்ல... அவ்ளோதான்! 
 

பின் செல்ல