Published:Updated:

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

Published:Updated:
##~##
மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

ஏராளமான தேசிய விருதுகளை வாங்கி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்த் திரை உலகம். ஒரே நேரத்தில் ஆறு விருதுகள் பெற்று அட்டகாசம் செய்துள்ள, 'ஆடுகளம்’ சிறந்த படத்துக்கான 'சிவராம் கரந்த்’ விருது பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை விருது இரண்டுமே தமிழுக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. தனுஷ், சரண்யா பொன்வண்ணன், வைரமுத்து, தம்பி ராமையா, சுகுமாரி, தினேஷ்குமார், கிஷோர் ஆகியோருடன் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று இரட்டை விருதை பெற்றுள்ளார், வெற்றி மாறன். ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்த ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது. ரஜினியின் 'எந்திரன்’ திரைப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்காக ஸ்ரீனிவாஸ் மோகனும், சிறந்த கலை, தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரிலும் விருது பெற்று இருப்பது தனிச் சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..
மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

பிரமாண்டமான கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது சூர்யாவின் நீண்ட நாள் ஆசை. அதற்காக, சென்னை தி.நகரின் இதயப் பகுதியில் இடம் வாங்கிவிட்டார். விரைவில் கட்டப்பட இருக்கும் மாளிகையின் மதிப்பு, 'எந்திரன்’ பட்ஜெட்டில் பாதியாமே!

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

நீண்ட காலமாகவே நித்தியானந்தாவின் சீடர், சந்தானம். இடையில் கிளுகிளு சமாசாரம் ரணகளமாகவே, சந்திப்பை நிறுத்திக்கொண்டாராம். 'சாமியா இப்படி செஞ்சார்..?’ என்ற கேள்வி சந்தானத்தை உலுக்கிக்கொண்டே இருந்ததாம். இறுதியில், சாமியாரையே சந்தித்து, தனது குழப்பத்தை நிவர்த்தி செய்துகொண்டாராம்!

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..
மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..
மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

அம்மாவின் சாபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம் ஜாக்கெட்.  அதனால், புதிய தலைவரைத்  தொடர்புகொண்டு சமரசத்துக்குத் தூதுவிட, 'நோ’ சொல்லிவிட்டாராம் நைனா!  

மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..
மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..
மிஸ்டர் மியாவ்: சந்தானந்தா..

  வாரிசுகளுக்கு காவடி தூக்கிய சினிமா புள்ளிகளின் பட்டியலைக் கேட்டு இருக்கிறதாம், கோட்டை. அந்த மனிதர்களின் பண பலம், பின்புலங்களைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism