Published:Updated:

அஜீத்தோ, விஜய்யோ இப்படி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? - ஷாருக்கின் FAN விமர்சனம்

டெல்லியில் ‘சைபர் கஃபே’ நடத்திவரும் கௌரவ் (ஷாருக்), சூப்பர் ஸ்டார் ஆர்யன் கன்னாவின் (ஷாருக், again!) கொலவெறி ரசிகர். நடை உடை பாவனை என்று எல்லாமே அவரைப் போல வாழ்ந்து வரும் கௌரவ், தன்னை ‘ஜூனியர் ஆர்யன்’ என்று அழைத்துக் கொள்கிறான். ஒரு விழாவில் நடிகர் ஆர்யனாக தோன்றி முதல்பரிசு வென்று அந்தப் பரிசுடன் ஆர்யனை சந்திக்கச் செல்கிறான்.
 
ஆர்யன் கன்னா, தன் பிறந்தநாளுக்காக ஐந்து நிமிடம் வெளியே வந்து, தரிசனம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட, அத்தனை கூட்டத்தில் அவரை தனியே சந்திப்பதெல்லாம் நடக்காத காரியம் என்று முடிவு செய்கிறான். ஆர்யனை சந்திக்க, கோக்குமாக்காக ஒரு ஐடியா செய்து போலிஸில் மாட்டுகிறான்.

அங்கே முதன்முதலாக சந்திக்க வரும் ஆர்யனிடம், ‘நான் உன் ஃபேன் தானே? எனக்காக ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாதா?’ என்று கௌரவ் கேட்க, ‘இது என் வாழ்க்கை. ஐந்து நொடிகூட உனக்கு ஒதுக்க முடியாது.. நீ உன் குடும்பத்தைப் பார்’ என்று ஆர்யன் சொல்லிவிட அத்தனை வருடங்களாக ஆர்யன் மீதிருந்த பிம்பம் சரிந்து விழுகிறது.
 
‘இனி நான் உன் பின்னால இல்ல.. நீ என் பின்னாடி வருவ’ என்று இடைவேளையில் சூளுரைக்கும் கௌரவ், என்னென்ன செய்கிறான், ஒரு ரசிகனாக அவனுக்கு என்ன ஆகிறது, ஆர்யனுக்கு என்ன ஆகிறது என்பதை இடைவேளைக்குப் பிறகு சொல்லி முடித்திருக்கிறார்கள்.
 
அஜீத்தோ,  விஜய்யோ இப்படி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? - ஷாருக்கின் FAN விமர்சனம்

ஷாருக்குக்கு லைஃப் டைம் சொல்லிக் கொள்ளும்படியான படம். ஆர்யனுக்கும், கௌரவுக்கும் கண்ணிலும், உதட்டிலும், மூக்கிலும் என்று வெகு சின்னச் சின்ன மாற்றம்தான். நடிப்பில், சீனுக்கு சீன் சிக்ஸர் அடித்திருக்கிறார் மனுஷன். கௌரவாக இருக்கும்போது, டக்கென்று ஆர்யனாக முகபாவம் மாற்றும் போதும் சரி, ஆர்யனாக இருக்கும்போது கௌரவாக முகத்தை மாற்றும்போதும் சரி..  க்ளாஸ் மேன்! அவார்டுகளுக்கு இப்போதே ஒரு ஷெல்ஃபை காலியாக வைத்துக் கொள்ளலாம் ஷாருக்!
 
இரண்டு முக்கிய வேடங்களையுமே, சிங்கிளாக ஷாருக்கே சுமப்பதால் திரையில் வேறு யாரையுமே தெரியவில்லை.
 
டைரக்‌ஷன் மணீஷ் ஷர்மா. உண்மையிலேயே ஷாருக், தனது பேட்டிகளில் அடிக்கடி சொல்லும் ‘ஃபேன்ஸ் இல்லைன்னா நான் இல்லை’ வசனத்தை நூல்பிடித்து இப்படி ஒரு கதை பின்னியிருக்கிறார். எட்டு வருடங்களாக மனதில் இருந்த கதையாம்.  வெரிகுட். ஆனால், இடைவேளை வரை 20-20யாக இருந்து, இடைவேளைக்குப் பிறகு டெஸ்ட் மேட்ச் கணக்காய் இழுக்கிறது. ஆர்யன் - கௌரவ் வெளிநாட்டில் ஓடுகள் மீதும், க்ளைமாக்ஸில் மொட்டை மாடியிலும் துரத்துகிற சேஸிங் காட்சிகள் எல்லாம் ஆர்குட் காலம் பாஸ். பல காட்சிகளில் லாஜிக் பொத்தல்கள். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவனை ரசிகன் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டுவதெல்லாம் காதில் சுற்றிய ஆளுயரப் பூமாலை. அதற்காக அந்த சூப்பர் ஸ்டாரே, ரசிகன் இருக்கும் ஊருக்கு வந்து... போங்க டைரக்டர் சார்.. கற்பனை இப்டிலாம் தறிகெட்டுப் போகக்கூடாது உங்களுக்கு!

யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ், பெரிய பட்ஜெட் படம் என்பதால் லண்டன், குரோஷியா என்று வெளிநாடுகளில் எல்லாம் படப்பிடிப்பு. உண்மையில் இந்தியாவுக்குள் இருப்பதாகவே கதையைப் பின்னியிருக்கலாம்.  சேஸிங் காட்சிகளுக்கான பின்னணி இசைக்கு காது பஞ்சைத் தேடுகிறது. பாடல்கள் இல்லாதது குறையாகவே இருக்கிறது. வசனங்களுக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்கள்.
 
ஆர்யன்: ”எனக்காக இதையெல்லாம் பண்றதுக்கு நீ யாரு?’

கௌரவ்: “உங்க ஃபேன்”

ஆர்யன்: “இதெல்லாம் அன்பு இல்ல. முட்டாள்தனம்.. என் ஃபேன் இப்படிப் பண்ண மாட்டான்’ என்று ஆர்யன் மூலமாக ஷாருக் தன் ரசிகர்களுக்கு செய்தி சொல்லி, அப்படி பைத்தியக்காரத்தனமாய் இருந்தால் என்ன ஆகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஷாருக் ரசிகர்களுக்கு மட்டும்தானா?

இதப் படிச்சுட்டீங்களா?

அஜீத்தோ,  விஜய்யோ இப்படி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? - ஷாருக்கின் FAN விமர்சனம்
அஜீத்தோ,  விஜய்யோ இப்படி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? - ஷாருக்கின் FAN விமர்சனம்

.

.

அடுத்த கட்டுரைக்கு