Published:Updated:

அச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை! அலர்ட் ‘மனிதன்’ உதயநிதி

அச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை! அலர்ட் ‘மனிதன்’ உதயநிதி
அச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை! அலர்ட் ‘மனிதன்’ உதயநிதி
அச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை! அலர்ட் ‘மனிதன்’ உதயநிதி

கெத்து படத்தில் ஆக்‌ஷன் அதகளம் செய்த உதயநிதியின் அடுத்த லெவல் படம் தான் மனிதன்.  உதயநிதியின் ஐந்தாவது படம், எதிர்பார்ப்புகளுக்கு நடுவே உதயநிதியை அவரின் அலுவலகத்திலேயே மடக்கிப்பிடித்து பேசினோம்.  “சீரியஸா நடிச்சிட்டு இருப்போம், வந்து கிச்சுகிச்சு மூட்டி விளையாடிட்டு இருப்பாங்க, ரொம்ப ஜாலியான ஆர்டிஸ்ட் தான் ஹன்சிகா” என்று ஜாலியாக பேசத்தொடங்கினார் உதயநிதி.

மனிதன் - ஒன்லைன்ல சொல்லுங்க?

“சில படங்களை பார்த்துட்டு வீட்டுக்கு போய் யோசிச்சா மனசுல நிக்காது. ஆனா சில படங்கள் மனசுல நிக்கும், ரெண்டாவது வகைப் படம் தான் மனிதன். நிச்சயம் உங்களை கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.”

ரஜினி டைட்டிலை வைக்குறது இப்போ புதுடிரெண்டா இருக்குதே?


“முதல்ல சக்தின்னு பேர் வைக்கலாம்னு முடிவெடுத்தோம். சிலபேரு பராசக்தினுலாம் சொன்னாங்க. கடைசியா விவேக் சார் சொன்ன டைட்டில் தான் மனிதன். ரஜினிசாரோட டைட்டில், அதுனால டைட்டில் ரீச் அதிகம். ஆனா ரஜினியோட மனிதனுக்கும், இந்த மனிதனுக்கும் சம்பந்தம் கிடையாது பாஸ்.

ரெண்டாவது முறையா ஹன்சிகா உங்களோட நடிக்கிறாங்களே!

“என்னோட மோஸ்ட் லக்கியஸ்ட் கேர்ள் ஹன்சிகா தான். எனக்கு எப்படியோ, அப்படித்தான் ஹன்சிகாவுக்கும் இந்தப் படம் ரொம்ப முக்கியம். ஹீரோயினா 4 பாட்டுனு இல்லாம, எமோஷனல் காட்சிகளிலும் கலக்கியிருக்காங்க.

அச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை! அலர்ட் ‘மனிதன்’ உதயநிதி

யார் அந்த மனிதன்?

என்னைப் பற்றிய படம்னு கிடையாது, பொள்ளாச்சியிலிருந்து சென்னைவரும் சாதாரண ஒரு வக்கீல், நியாயத்திற்காக பெரிய வக்கீல் பிரகாஷ்ராஜூடன் ஏற்படும் போராட்டம் தான் இந்த மனிதன்.

கெத்துல சத்யராஜ், மனிதன்ல பிரகாஷ்ராஜ்! சீனியர் நடிகர்களோடு எப்படி போட்டிபோட்டு நடிச்சீங்க? 

ஷூட்டிங் போகும்போதே பயம் வந்துடுச்சி. க்ளாஸ் ரூமுக்குள்ள வர ஸ்ட்ரிக்ட்டான டீச்சர்மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள வருவாரு பிரகாஷ்ராஜ். அவர் வந்தாலே மொத்த டீமும் அமைதியாகிடும். ‘ஏன் எல்லோரும் அமைதியாகிட்டாங்கனு ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்பாங்க?’அந்த அளவுக்கு அவரோட நடிப்பும் படத்துல இருந்துச்சி. பிரகாஷ்ராஜுட்டயே போய் இப்படி நடிக்கிறீங்களே, உங்க கூட நடிக்கவே பயமா இருக்கு சார்னு சொல்லுவேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா யாருக்கு படத்துல இம்பார்ட்டன்ட்?

ஹன்சிகா தான் இந்தப் படத்துல ஹீரோயின். ஐஸ்வர்யாவுக்கு இந்தப் படத்துல முக்கியமான ரோல். காக்காமுட்டை பார்த்ததுமே இந்தப் படத்துல நீங்க நடிக்கணும்னு கேட்டேன். உடனே ஓகே சொல்லிட்டாங்க.

இதயம்முரளி படம் எடுக்கப்பட்டால் ஹன்சிகா தான் ஹீரோயினா?


ஹன்சிகாவுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்கிரிப்ட் தான் இதயம்முரளி. படம் ஷூட் போகாததுக்கு பட்ஜெட் மட்டுமே காரணம். ஹீரோயின் தேடி ஹீரோ அமெரிக்கா போறது தான் படமே. வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள்ல காதலோடு காமெடியும் கலந்திருந்தா எப்படி இருக்கும் அதான்  “இதயம்முரளி” பட ஸ்கிரிப்ட். 

கெத்து படத்த விட இந்தப் படத்துல நடிப்பு இம்ப்ரூவ் பண்ணிருக்கீங்களா?

கெத்துல நடிப்ப விட ஆக்‌ஷன் தான் அதிகம். ஆனா இந்தப் படத்துல நடித்து தான் ஆகணும். நிறைய டயலாக்ஸ், சீனியர் ஆர்டிஸ்ட்னு பயமும், சவாலும் அதிகம். அத கடந்து தான் நடிச்சிருக்கேன். இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு தான் தோணுச்சி. ரசிகர்கள் தான் பார்த்து ரிசல்ட் சொல்லணும்.

அச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை! அலர்ட் ‘மனிதன்’ உதயநிதி

.

ரெட்ஜெயண்ட் மூவி பேனரில் வெளியாகும் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கலைனு வருத்தப் பட்டுருக்கீங்களா?

ஒவ்வொரு முறையும் கோர்ட்ல கேஸ் போட்டு தான் பெறவேண்டியிருக்கு. இந்த ஐந்து வருசமும் பழகிப்போச்சி. கப்பலோட்டிய தமிழன் படத்தை டிஜிட்டலா வெளியிடுறேன்னு சொன்னாலும் அந்தப் படம் தமிழ்ப் படமேயில்லைன்னு வரிவிலக்கு தரமாட்டேன்னு தான் சொல்லப்போறாங்க. 

மனிதன் சென்சாரில் எந்த கட்டுமின்றி யூ சான்றிதழ் வாங்கியிருக்கு, ஆனா நிச்சயமா நிராகரிச்சிடுவாங்க. கோர்ட்டு போய் தான் வரிவிலக்கு பெறணும். விடுங்க பாஸ்  பழகிப்போச்சி...

பி.எஸ்.முத்து