வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (01/05/2016)

கடைசி தொடர்பு:12:30 (01/05/2016)

கபாலி டீசர்

மகிழ்ச்சி!

கலைப்புலி தாணு அறிவித்திருந்தபடி ’கபாலி’ டீசர் சற்று முன் வெளியானது.

அவரது ஸ்டைலான நடையென்றாலும், ஸ்பீடாக இல்லாமல் ஸ்டைலிஷாக நடந்து வர’ நெருப்புடா’ என்றொலிக்கிறது பிஜிஎம்.

வரச்சொல்லுடா அவனை என்றதும், எந்த கபாலின்னு நெனைச்ச? என்று ‘கபாலிக்கு’ விளக்கம் கொடுக்கிறார் ரஜினி. ஒரு நொடி, பூப்போட்ட சட்டையில் ‘சிவாஜி’ பட ரஜினி சாயலிலும் வருகிறார். ஃப்ளாஷ்பேக்காக இருக்க வேண்டும்.

கபாலி டீசரில், மிக முக்கியமாய்ப் பாராட்டப்பட வேண்டியவர் சந்தோஷ் நாராயணன். தன் சிறப்பையும் விட்டுக் கொடுக்காமல், அதிரிபுதிரி தடாலடி இசையெல்லாம் இல்லாமல் ஒருவித ஹீரோயிச பிஜிஎம் குடுத்திருக்கிறார். டீசர் பார்த்து முடித்ததுமே அந்த பிஜிஎம்மை உங்கள் உள்ளம் முணுமுணுக்கும். வெல்டன் சந்தோஷ்.

பா.ரஞ்சித்தின் ட்ரேட் மார்க்கான ‘மகிழ்ச்சி’யை ரஜினி சொல்ல... முடிகிறது டீசர்.

வெளியான 15 நிமிடங்களில் ஐம்பதாயிரம் பார்வையாளர்களைத் தொட்டிருக்கும் அந்த டீசர்.. இதோ உங்களுக்காக...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க