Published:Updated:

' அம்மாவுக்கு ஆம்புலன்ஸ்.. நண்பனுக்கு நான்டா..!' கேப்டன் அமெரிக்கா #CaptainAmerica-civilwar

சூப்பர் ஹீரோக்கள் என்றாலே , ஒரு கதாநாயகியை காப்பாற்ற ஊரை அழிக்கும் ஜீவன்கள் தான் என்பது வரலாறு. இப்படி சொகோவியாவில் யாரையோ காப்பாற்ற அவெஞ்சர்ஸ் செல்ல, அங்கு இருக்கும் ஜெமோவின் குடும்பத்தை கொன்றுவிடுகின்றனர். அவெஞ்சர்ஸ் அணியை சல்லி சல்லியாக உடைப்பேன் என சபதம் எடுக்கிறார் ஜெமோ.அது தான் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தின் கதை.

கேப்டன் அமெரிக்கா , அயர்ன் மேன், பிளாக் விடோ, வின்டர் சோல்ஜர்,ஃபால்கன், வார் மெஷின்,பிளாக் பாந்தர், விஷன், ஸ்கார்லெட் விச், ஏன்ட்-மேன், ஷேரன் கார்ட்டர், ஸ்பைடர்-மேன்  (இப்பவே கண்ண கட்டுதே) என படம் முழுவதிலும் சூப்பர் ஹீரோக்கள் தான். இவர்கள் போதாது என தீவிரவாதத்தை ஒடுக்கும் அதிகாரியாக ஹாபிட் பட புகழ் மார்ட்டின் ஃப்ரீமேன் வேறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கடத்தத் திட்டமிடுகிறது ப்ராக் ரம்லோ குழு. கேப்டன் அமெரிக்கா , தன் டீமோடு சென்று அதைத் தடுத்து நிறுத்துகிறார். ரம்லோ தற்கொலைப்படையாக மாற, ஸ்கார்லெட் விச் செய்த செயலால், வெடி தரையில் வெடிக்காமல், அருகில் இருக்கும் கட்டிடத்திற்குள் வெடித்து விடுகிறது. அங்கு இருக்கும் பலர் கொல்லப்படுகிறார்கள்.

இனி அவெஞ்சர்ஸ் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஐக்கிய சபையின் அனுமதி பெற வேண்டும் என முடிவு செய்கிறது. டோனி ஸ்டார்க் தலைமையிலான அயர்ன் மேன் அணி இதற்கு ஆதரவு தெரிவிக்க, “ இந்த நொண்ணெய் எனக்கு என்ன அனுமதி தர்றது “ என நோ சொல்கிறார் கேப்டன் அமெரிக்கா.

வியன்னாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கும் சமயம் , நடக்கும் குண்டுவெடிப்பில் வக்கண்டா (வக்கண்டா எங்க இருக்குன்னு எல்லாம் கூகிளில் தேடாதீங்க ) நாட்டு மன்னர் டிசக்கா கொல்லப்படுகிறார். குண்டுவெடிப்பிற்கு காரணமான பார்ன்ஸை(வின்டர் ஷோல்ஜர் ) கைது செய்ய முடிவு செய்கிறார்கள். “தாய்க்கு ஒண்ணுன்னா ஆம்புலன்ஸ அனுப்புவேன், நண்பனுக்கு ஒண்ணுன்னா நானே போவேன் “ என கேப்டன் அமெரிக்கா பார்ன்ஸை காக்கச் செல்கிறார்.அவர்கள் கைது, தப்பிப்பு என முதல் பாதி முடிய, இன்டர்வல்.

' அம்மாவுக்கு ஆம்புலன்ஸ்.. நண்பனுக்கு நான்டா..!' கேப்டன் அமெரிக்கா #CaptainAmerica-civilwar

இரண்டாம் பாதி ஆரம்பம் முதலே கலக்கல் தான். ஜெமோவை தேடி கேப்டன் அமெரிக்கா குழு செல்ல ஆரம்பிக்க, அதை தடுக்கிறது அயர்ன்மேன் தலைமையிலான அணி. அயர்ன்மேன் அணீயில் ஸ்பைடர் மேனாக வரும் 19 வயது சிறுவன் டாம் ஹோலாந்து செய்யும் செயல்கள் எல்லாமே திரை அரங்கில் சிரிப்பலைகள் தான்.

சண்டை அட்டகாசமாக இருந்தாலும்.அயர்ன்மேன் அணியில் யார், கேப்டன் அமெரிக்கா அணீயில் யார் என தெரியாமல், கன்ஃப்யூஸாகி எக்ஸ்ட்ரா பாப்கார்ன் திங்கும் நிலையில் தள்ளப்படுகிறான் ரசிகன்.
சைபீரியாவில் இருக்கும் வின்டர் ஷோல்ஜர்களின் கட்டிடத்திற்கு கேப்டன் அமெரிக்கா செல்ல, அங்கு இருக்கும் பிற வின்டர் ஷோல்ஜர்களை எல்லாம் ஏற்கனவே கொன்றுவிடுகிறான் ஜெமோ. போகிற போக்கில், அயர்ன் மேனின் பெற்றோரைக் கொன்றதும் பக்கி பார்ன்ஸ் தான் என்ற ஆதாரத்தை போட்டு உடைக்க , அயரன்மேனுக்கும், கேப்டன் அமெரிக்காவிற்கும் சண்டை நடக்கிறது. பிறகென்ன, பட தலைப்பிற்கேற்ப, ஹீரோ வெற்றி பெறுகிறார்.

“வெளிய இருந்து ஒரு சாம்ராஜ்யத்தை உடைச்சா, மீண்டும் எழும். அதே உள்ளிருந்து உடைச்சா, மீண்டு வராது “ என ஜெமோ சொல்லும் தத்துவம் தான் மிக உண்மை. அவெஞ்சர்ஸ் அணி உடைகிறது. சூப்பர் ஹீரோ படங்களுக்கே உரித்தான மெகா சைஸ் வில்லன்கள் இல்லாதது மட்டும் தான் சின்ன மைனஸ்.
படம் தெறி ஹிட் அடிப்பதைத் தாண்டி, கலக்கலான சண்டைக்காட்சிகளுக்காகவே பார்க்கலாம்.

“சிவில் வார்” டிரெய்லருக்கு:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism