Published:Updated:

’’டிடியை அடிச்சுக்க முடியாது!’’- எஸ்.எஸ். மியூசிக் பூஜா

’’டிடியை அடிச்சுக்க முடியாது!’’- எஸ்.எஸ். மியூசிக் பூஜா
’’டிடியை அடிச்சுக்க முடியாது!’’- எஸ்.எஸ். மியூசிக் பூஜா

பீட்ஸா, காஞ்சனா,களம் இப்படி வரிசையாக பேய்ப் படங்களில் பிஸியாக இருந்த பூஜாவுக்கு ஒரு ஹாய் சொன்னோம்.. ”ஓ மை காட் பல வருஷம் ஆச்சு விகடன் ரீடர்ஸுக்கு ஹாய் சொல்லி”, படபடத்தார் பூஜா..

ஆக்சுவலி நீங்க என்ன படிச்சிருக்கீங்க?

”விஸ்காம் தான்.. அந்த இண்ட்ரெஸ்ட்ல அப்படியே SS மியூசிக் வந்தேன். அங்க 80% இங்கிலீஷ் , 20% தமிழ்னு என்னோட தமிழுக்கு நிறைய ஃபேன்ஸ்!”

வாவ்.. SS மியூசிக் பூஜான்னு சொன்னா உங்க ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்?

”ரொம்பப் பெருமையா இருக்கும். எனக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்து என்னோட திறமைய வெளிய கொண்டு வந்தது SS மியூசிக் தான்!”

டிவி , சினிமா வித்தியாசம்?

”சினிமா தான் ரொம்ப கஷ்டம்... ஆனா எனக்கு சினிமா மூலம் நிறைய கத்துக்க சான்ஸ் கிடைச்சது.. கேமராவ ஆன் பண்ணின உடனே நமக்கு ஒரு பூரிப்பு வரும் பாருங்க அதுக்கு ஈடே இல்லை!”

பிடிச்ச ஹீரோ யாரு?... சூப்பர் ஸ்டாருன்னு சொல்லி தப்பிக்கக் கூடாது.

“ ஹ்ம்ம்ம்... எனக்கு சூர்யா, விஷால், ஆர்யா இப்படி எல்லாரையும் பிடிக்கும். எல்லார் கிட்டயும் ஒரு தனி ஸ்டைல் இருக்கு.. அப்பறம் ரஜினி சார், கமல் சார் ரெண்டு பேரும் கடவுள் ஆச்சே!”

எலெக்‌ஷன் மெசேஜ் ப்ளீஸ்?

”தயவு செஞ்சு உங்க ஓட்ட வேஸ்ட் பண்ணாதிங்க. இப்போ தான் நானும் வோட்டர் ஐடி வாங்கியிருக்கேன்... ஏன்னா அப்பா ஆர்மியில இருந்ததுனால ஒரு ஊர்ல இருக்கவே முடியாது. இந்த வருஷம் நானும் ஓட்டுப் போடப் போறேன். நீங்களும் போட்ருங்க!”

நீங்க CM வேட்பாளர்.. ஒரு நலத்திட்டம் ப்ளீஸ்?

“எனக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைச்சா, கண்டிப்பா ரோட்ல ஆதரவில்லாம சுத்துற விலங்குகளுக்கு ஒரு பெரிய இடத்துல ஷெல்டர் கட்டிக் கொடுப்பேன். அதுதான் ஆசை. ஆனா அரசியல் ஆசையெல்லாம் இல்லப்பா!”

ஹீரோயின் அவதாரம் எப்போ?

“அடுத்தடுத்து  நாலு படங்கள் இருக்கு. அதுல ஒரு படத்துல நான் ஹீரோயின். மத்த ரெண்டும் கேரக்டர் ரோல். எனக்குக் கதை தான் முக்கியம். இந்த ஹீரோயின் கேரக்டர்லாம் இல்லை!”

பிடிச்ச விஜே யாரு?

“எனக்கு ரொம்ப பிடிச்ச விஜே டிடி தான். என்ன எனர்ஜி, என்ன ஸ்டைல். எத்தனை பேர் வேணும்னாலும் வரலாம். ஆனால் டிடிய அடிச்சுக்கவே முடியாது!”

உங்க டயட் சீக்ரெட் என்ன?

“அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. பிடிச்ச எல்லாத்தையும், எல்லா நாடுகள்லயும் கூட போய் சாப்பிடுவேன். எவ்ளோ சாப்பிட்டாலும் குறைஞ்சது ரெண்டு மணிநேரமாவது ஜிம்ல வொர்க் அவுட் செய்வேன், அவ்ளோ தான்!”

நாளைக்கு உலகம் அழியப் போகுது! இன்னைக்கு என்ன செய்வீங்க?

“நான் ஒரு டூர் பைத்தியம். இந்த சேவிங்ஸ், பண மிச்சம் இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அதனால எப்பவுமே நான் என்னோட வாழ்க்கைல நாளைக்கு உலகம் இல்லைன்னு நினைச்சுட்டு தான் எல்லா வேலையும் செய்வேன். எல்லா நாட்டுக்கும் தனியாவே போய் சுத்திப் பார்த்துட்டு வருவேன்”.

- ஷாலினி நியூட்டன் - படங்கள் : சொ. பாலசுப்ரமணியன்