Published:Updated:

'வெயிட் பார்ட்டி பாபி சிம்ஹா..!' - நிக்கி கல்ராணியின் கலாய்

'வெயிட் பார்ட்டி பாபி சிம்ஹா..!' - நிக்கி கல்ராணியின் கலாய்
'வெயிட் பார்ட்டி பாபி சிம்ஹா..!' - நிக்கி கல்ராணியின் கலாய்

கோ-2 படத்தில் ரிப்போர்ட்டர், ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் போலீஸ், ’மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் மீண்டும் ரிப்போர்ட்டர் என 'டார்லிங்' நிக்கி கல்ராணி இப்போ பயங்கர பிஸிபேலாபாத். அந்த பரபரப்புக்கு இடையில் பிடித்து ஒரு குட்டி பேட்டி தட்டினோம்...

’யாகாவாராயினும் நா காக்க’ படத்துக்கு அப்பறம் பெரிய கேப் ஆகிடுச்சே? என்ன காரணம் யார் செய்த தாமதம்?

“தொடர்ச்சியா படங்கள் நடிச்சுட்டு இருக்கேன். ஆனால் ரிலீஸ் தான் கொஞ்சம் லேட் ஆகுது. ப்ச்ச்... ஆனால், அடுத்தடுத்து மூணு படம் இருக்கே. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வருவேன்னு நம்புறேன்”

கோ-2 படம் பற்றி...

“ கோ-2, பொலிடிக்கல் த்ரில்லர். நிறைய சமூக பிரச்னைகளயும் பேசப் போற படம். முக்கியமா ஒரு சில சமூக பிரச்னைகள ஹைலைட் பண்ணியிருக்க படம். சரியான டைம்ல ரிலீஸ் ஆகப் போகுது!”.

படத்தில் உங்கள் கேரக்டர்?

“படத்தில் ரிப்போர்ட்டரா நடிச்சுருக்கேன். எப்பவுமே பிஸியான, கொஞ்சம் ட்ரெண்டியான கேரக்டர். என்னோட கேரக்டர் என்னன்னு ரொம்ப க்ளியரா, படத்தில் என்னுடைய லுக், கெட்டப் முதற்கொண்டு டைரக்டர் சரத் டீடெய்லா விளக்கிட்டார். அதனால், அந்த கேரக்டரை நல்லாவே உள்வாங்கி நடிச்சுருக்கேன்!”

கோ  & கோ 2 ஏதாவது ஒற்றுமை இருக்கா?

“ ஒரே ஒரு ஒற்றுமை தான் ரெண்டுமே அரசியல் படம். மத்தபடி கதை, களம் எல்லாமே வேற”.

பாபி சிம்ஹா பற்றி...

” பாபி இப்போ புதுமாப்ள. பாபி சிம்ஹா படத்துல நடிக்கிற கேரக்டர்களுக்கும், அவரோட ரியல் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் வெயிட் போட்டுடுச்சு... சும்மா ஏதாவது சாப்பிட வெச்சுகிட்டே இருப்பாரு. பாபி ரொம்ப ஃப்ரெண்ட்லி!”

கோ 1 கார்த்திகா, பியோவோட உங்களைக் கம்பேர் பண்ணாங்களா?

“ இல்லை, நான் நானாகவே தான் நடிச்சேன். எந்த மாற்றமோ, கம்பேரிஸனோ கிடையாது!”.

உங்க ட்ரீம் ரோல் என்ன?

“எந்த ட்ரீமும் இல்லை, ஆனால் நான் தமிழ்ல நடிச்ச கேரக்டர்கள விட மலையாளத்துல நிறைய எமோஷனல் ரோல்கள் பண்ணியிருக்கேன். ஒவ்வொரு கதைக்கும் நான் ரொம்ப வெயிட் பண்ணி தான் செலக்ட் பண்ணுவேன். அந்த மாதிரி தமிழ்லயும் நல்ல ரோல்கள் பண்ணணும்!”

தமிழ் சினிமாவுல உங்க டார்கெட் என்ன?

“ எந்த டார்கெட்டும் இல்லை. இந்த நம்பர் கேம்ல எனக்கு உடன்பாடே கிடையாது. நிறைய படம் பண்ணனும். நிறைய சம்பளம் வாங்கணும்ன்ற ஆசையும் இல்லை. ஒரு பத்து வருஷம் கழிச்சு நான் திரும்பிப் பார்த்தா நல்ல படங்கள் இருக்கணும் அது போதும்!”.

நீங்க உண்மையாவே ஒரு ரிப்போர்ட்டர் ஆகிட்டீங்கனு வெச்சுக்கோங்க.... இந்தியாவுல எந்த விஷயத்த கவர்ஸ்டோரியா பண்ணுவீங்க?

” கண்டிப்பா பெண்களுக்கு நடக்குற கொடுமைகளைப் பற்றி தான் கவர்ஸ்டோரி பண்ணுவேன். பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கணும்!”.

ஒரு வீட்ல ஒரு ஹீரோயின் இருந்தாலே ரிஸ்க்... உங்க அக்கா சஞ்சனாவும் ஹீரோயின்.. வீட்ல எப்படி?

“ வீட்டுக்குள்ள நாங்க ரெண்டு பேருமே சாதாரண அக்கா தங்கை தான். ஹீரோயின், பெரிய நடிகை, இதெல்லாம் எதுவுமே கிடையாது. வீட்ல செமையா சண்டை போடுவோம், அக்கா கூட செம அட்டாச் நான். எனக்கு நிறைய அட்வைஸ் குடுப்பாங்க!”.

உங்க ஃபேவரிட் ஹீரோ, ஹீரோயின் யாரு?

“ ஹீரோயின் குஷ்பூ மேம்.. ஹீரோ இதப் பத்தி கேட்கவே வேண்டாம்... இருக்கறது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான். என்னோட ஃபேவரிட் ஸ்டார் அவர் தான், அவர் மட்டும் தான். கபாலி டீஸர் பார்த்து ஐயம் கூஸ்பம்ப்ட்!” ( மெய்சிலிர்த்தேன்)... #நெருப்புடா...

- ஷாலினி நியூட்டன் - படங்கள் : ஆ.முத்துகுமார்

அடுத்த கட்டுரைக்கு