Published:Updated:

’மருது படத்தின் திருட்டு டிவிடி வெள்ளிக்கிழமையே ரிலீஸ்!’ - விஷால் அதிர்ச்சி

’மருது படத்தின் திருட்டு டிவிடி வெள்ளிக்கிழமையே ரிலீஸ்!’  - விஷால் அதிர்ச்சி
’மருது படத்தின் திருட்டு டிவிடி வெள்ளிக்கிழமையே ரிலீஸ்!’ - விஷால் அதிர்ச்சி

’மருது படத்தின் திருட்டு டிவிடி வெள்ளிக்கிழமையே ரிலீஸ்!’ - விஷால் அதிர்ச்சி

திருட்டு டிவிடி-க்களை ஒழிப்பது பற்றி தொடர்ந்து பேசிவரும் விஷால், திடீரென நேற்று அவசர பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதில் ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா, கோ2 பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார், 24 பட தயாரிப்பாளர் ராஜசேகர், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் விஷால் பேசியதாவது,

“ வி.எஸ்.ஓ.பி,  இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட ஏழு படங்களின் திருட்டு டிவிடியை சோதனை செய்தபோது, அவை பெங்களூர் ஓரியண்ட் மாலில் உள்ள  பி.வி.ஆர் சினிமாஸ் தியேட்டரில் தான் படமாக்கப்பட்டிருக்கிறதென்பது தெரியவந்துள்ளது. இதைக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு படத்திற்கும் 54000ஆயிரம் ரூயாய் செலவு செய்து, க்யூப் சிஸ்டத்தில் திறனாய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறோம். இதைக் குறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் புகார் தெரிவித்தும் இன்று வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 சென்ற வாரம் புகார் கூறிய உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால், நாளை வெளியாகவிருக்கும் என்னுடைய மருது படமாவது தப்பித்திருக்கும். நான் அடித்துக் கூறுகிறேன், மருது படத்திற்கான திருட்டு டிவிடி, படம் ரிலீஸாகும் வெள்ளிக்கிழமையே கடைகளுக்கு வந்துவிடும், மருது படத்திற்கான டிவிடி, அதற்கான ரேப்பர் எல்லாம் ரெடியாகிவிட்டது, எங்கே ரெடியாகிறது என்பது வரைக்கும் எனக்குத் தெரியும். நாளை திருட்டு டிவிடி வந்ததும், நானே உங்களுக்குக் கொடுத்து அனுப்புகிறேன். என் படம் மட்டுமல்ல, இனி வரும் படங்களையாவது திருட்டு டிவிடி கும்பலிலிருந்து காப்பாற்றவேண்டும்.

இதுகுறித்து ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா கூறும்போது, “ சூர்யாவின் 24 படம், விஜய்யின் தெறி உள்ளிட்ட பல படங்கள் பெங்களூர் ஓரியண்ட் மாலில் தான் படமாக்கி திருட்டு டிவிடி விற்பனை செய்கின்றனர். அதற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, அந்த தியேட்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தள்ளிப்போடுவது தான் ஏன் என்று புரியவில்லை.  தயாரிப்பாளர் தாணுவைக் குறையாகக் கூறவில்லை, ஏனெனில் அவரின் தெறி படமும் தான் திருட்டு டிவிடியாக வெளியாகியிருக்கிறது.

பி.வி.ஆர்.சினிமாஸ் தான் குற்றவாளி என்று தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதே எங்களின் கேள்வி. பிவிஆர் தியேட்டர் விளக்கம் தரும் வரைக்கும் எந்தப் படமும் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஏன் கூறக்கூடாது?  தயாரிப்பாளர் சொத்தை கூறு போட்டு விக்கிறாங்கன்னு தெரிந்தும் இந்தவாரம் மருது படமும் பிவிஆர் தியேட்டரில் ரீலீஸாகத்தான் போகிறது.

பைரஸி குறித்து விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்களிடம் சில கேள்விகளை வைத்தோம்.

தியேட்டரில் மட்டும் தான் திருட்டு டிவிடி தயாராகிறதா?

90% சதவிகித திருட்டு டிவிடி உருவாவது தியேட்டரிலிருந்து தான். மேலும் FMS, Qube உள்ளிட்ட இடத்திலும் பைரஸி சிடிக்கள் வெளியாகிறது. ஆனால் அதிகப்படியாக எங்கு குற்றம் நடக்கிறதோ, அதைத்தான் தடுத்து நிறுத்தவேண்டும்.

நீங்கள் ஏன் காவல்துறையிடம் புகார் கொடுக்ககூடாது?

ஓரியண்ட் மால் பெங்களூரில் இருக்கிறது, இங்கே தனிமனிதனாக புகார் கூறி, அது கர்நாடகக் காவல் துறையிடம் சென்று பெரிய சிக்கலான ஒன்றாகவே இருக்கும், அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தை நாடுகிறோம். இங்கிருந்து கர்நாடக தயாரிப்பாளர் சங்கம் மூலமாக எளிதில் பிரச்னைக்கான தீர்வை எட்டிவிடலாம்.

பொதுவாக திருட்டு டிவிடி மூலமாக எவ்வளவு சம்பாத்தியம் நடக்கிறது?

அதிகப்படியான பாதிப்பு திருட்டு டிவிடியாக மார்க்கெட்டில் விற்பனையாகும் போது தான் நடக்கிறது, இரண்டாவதாக இணையதளத்தில் படம் ரிலீஸான உடனேயே ஏற்றிவிடுகிறார்கள், மூன்றாவதாக பஸ், கேபிள் டிவிகளில் என்று  தயாரிப்பாளரின் ஒட்டுமொத்த உழைப்பும் சுரண்டப்படுவது தான் உண்மை.

திருட்டு டிவிடியை ஒழிக்க என்ன தீர்வு கொண்டுவரலாம்?

சேரனின் C2H போலவே, ஆனால் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் விநியோகஸ்தர்கள்  நியமித்து, படம் ரிலீஸான 15 நாளில் ஒரிஜினல் டிவிடியை நாங்களே விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இதனால் மக்களும் ஒரிஜினல் டிவிடிக்காக காத்திருப்பார்கள், திருட்டு டிவிடிக்களின் அளவும் குறையும். 

அடுத்த கட்டுரைக்கு