Published:Updated:

இளையராஜா எனக்கு மாமாவாக்கும்! ‘ஸ்ரீதிவ்யா’வின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விலாசினி பெருமிதம்!

இளையராஜா எனக்கு மாமாவாக்கும்! ‘ஸ்ரீதிவ்யா’வின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விலாசினி பெருமிதம்!
இளையராஜா எனக்கு மாமாவாக்கும்! ‘ஸ்ரீதிவ்யா’வின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விலாசினி பெருமிதம்!

இளையராஜா எனக்கு மாமாவாக்கும்! ‘ஸ்ரீதிவ்யா’வின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விலாசினி பெருமிதம்!

ல மொழிகளிலிருந்து நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி செய்தாலும்,  படங்களில் அவர்களுக்கான பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டுகளைப் பற்றி நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் ஒரு நடிகையின் நடிப்பை முழுமைப்படுத்துபவர்கள் டப்பிங் கலைஞர்களே. ரொமான்ஸ், அழுகை, கோபம்னு நடிகைகள் நடிப்பில் செஞ்சுரி அடிப்பதற்கு, அவர்களுக்கு குரலுதவி செய்பவர்களின் பங்கு மிக முக்கியமானது.  டப்பிங் துறையில் கலக்கிவரும் ஆர்டிஸ்ட் R.K.விலாசினி. (R.K.Vilasini). சமீபத்தில் வெளியான மருது படத்திற்காக ஸ்ரீதிவ்யாவிற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் இவரைத் தொடர்பு கொண்டோம். திரைக்குப் பின் முகத்தை மறைத்துவைத்திருக்கும் விலாசினியின் திரைப்பயணம் கொஞ்சம் சுவாரஸ்யம் தான்.

சொல்லுங்க..  இந்தத் துறையில உங்க பயணம் எங்க ஆரம்பிச்சது?

சேட்டைக்கார சென்னை பொண்ணு, படிச்சது பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆர்ஜே தான் என்னோட முதல் ஸ்டெ ஸ்டெப். அப்புறம் ஆதித்யா டிவில வி.ஜேவாக மாறினேன்.  கோவை சரளா, பாக்யராஜ், பாரதிராஜா என்று பல குரல் வித்தகியா மாறிட்டு, மறுபடியும் ரேடியோவில் ஆர்.ஜேவாக மாறிட்டேன். இப்போ டப்பிங் ஆர்டிஸ்ட்.

டப்பிங் ஆர்டிஸ்டா மாறின ரகசியத்தை சொல்லுங்க ?

என்னோட முதல் படம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”. பாண்டிராஜ் சார் தான் என்னோட சினிமா வாழ்க்கையை தொடங்கி வைச்சவர். ஆரம்பத்துல டப்பிங் ஆர்டிஸ்டா போகவேண்டாம்னு தான் இருந்தேன். பயத்தையெல்லாம் மீறி டப்பிங் கொடுத்தேன், அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு, படத்துல ரெஜினா பேரு பாப்பா. அந்த பாப்பா பாட்டு பாடுற மாதிரி சில காட்சிகள் வரும். பாடணும்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், பாடலாமேனேனு டப்பிங் கொடுத்தேன். டப்பிங்ல நான் பாடுன முதல் பாட்டு தல பாட்டு. இப்போ புரிஞ்சிருக்குமே.. நான் தல ஃபேன். அப்படி ஆரம்பிச்சது தான் என் குரல்வளம். அடுத்தடுத்து, ‘சென்னையில் ஒருநாள்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’னு ஆரம்பிச்சி கொஞ்ச கொஞ்சமா டப்பிங் ஆர்டிஸ்டா மாறியிருக்குற சந்திரமுகி நான். அதுமட்டுமில்ல என்னோட ஐம்பதாவது படமும் பாண்டிராஜ் சாரோட பசங்க 2.

ஸ்ரீதிவ்யாவிற்கு ஆஸ்தான டப்பிங் ஆர்டிஸ்டாவே மாறிட்டீங்களே?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெள்ளக்கார துரை, காக்கிச்சட்டை, பென்சில் இப்போ மருதுனு ஸ்ரீதிவ்யாவிற்கு நான் வாய்ஸ் கொடுத்த எல்லாப் படமுமே ஹிட்.. படத்துல மட்டுமில்லாம, நிஜ வாழ்க்கையிலுமே பூ மாதிரி பொண்ணு தான் ஸ்ரீதிவ்யா.இந்த வருசம் ரெண்டு படம் ஸ்ரீதிவ்யாவிற்கு வாய்ஸ் கொடுத்துட்டேன். என்னோட லக்கி ஸ்ரீதிவ்யா தான். அதுமட்டுமில்ல டப்பிங் நேரத்துல சின்சியரா வந்து வேலை பண்ணுவாங்க. அடுத்தடுத்து யட்சன், யாக்கை படங்கள்ல ஸ்வாதிக்கு, நித்யாமேனன், சம்ஸ்ருதினு புதுசுபுதுசா நடிகைகளுக்கும் டப்பிங் பேசிட்டு இருக்கேன்.

உங்க வாய்ஸ்ஸ எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே?

‘உங்க செல்ஃபோன்ல, கஸ்டமர் கேர்க்கு ஃபோன் பண்ணிருப்பீங்க’ என்று ஜெர்க் கொடுத்தவர் தொடர்ந்தார்.. ‘இந்த சேவைக்கு ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்துங்கள்’னு ஒரு குரல் வருமே அது என்னோடது தான். வோடஃபோன், பிஎஸ்என்எல்  நிறுவனங்களுக்கு குரல் கொடுத்தேன், இந்த வாய்ஸ திட்டாத ஆளே இருக்க முடியாது. ஏன் நீங்களே திட்டியிருப்பீங்க.

மருது படத்துல டப்பிங்கில் ஏதும் சவால் இருந்ததா?

பென்சில் படத்துல சின்ன பொண்ணா நடிச்சிருப்பாங்க, ஆனா மருதுல மெச்சூர்ட் & போல்ட் கேரக்டர். அதுனால வாய்ல மாற்றி பேசணும், சென்டிமென்ட் காட்சிகள்ல கொஞ்சம் கஷ்டப்பட்டு குரல் குடுத்தேன். சரியா மூணு நாள்ல டப்பிங்கை முடிச்சேன். அதுக்கான ரெஸ்பான்ஸ் இப்போ ரொம்ப நல்லாவே இருக்கு.

உங்ககிட்ட இருக்குற, நீங்க மாத்திக்க நினைக்கற கெட்ட பழக்கம் என்ன?

எங்கனாலும் லேட்டா தான் போவேன். மருது டப்பிங் நேரத்துல 20 நிமிஷம் லேட்டா ஸ்டூடியோ போனேன், முத்தையா பிடிச்சி திட்டு திட்டுனு திட்டி எடுத்துட்டாரு. என்னனே தெரியல லேட்டா போறதே பழகிடுச்சி. பாண்டிராஜோட முதல் படத்துல கூட லேட்டா போயிருக்கேன். அவர் மன்னிச்சு விட்டுருவாரு. ஆனா அந்த பழக்கத்தை மாத்திக்கணும்.

டப்பிங் கலைஞர்கள் தான் நடிக-நடிகைகளுக்கு பலமே. ஆனா உங்க பெயர் வெளிய வரலையேனு வருத்தப்பட்டதுண்டா?

ரொம்ப வருத்தமா இருக்கும். சில நேரம் கோபம் கூடவரும். சின்ன பிட் வாய்ஸ் பேசுறோம்னா குறிப்பிட்டு சொல்லணும்னு அவசியமில்லை, ஆனா ஹீரோ, ஹீரோயின்களுக்கு குரல் கொடுக்கும் போது, எங்களுக்கு சம்பளம் கொடுக்காட்டா கூட பரவாயில்லை, நாங்க தான் குரலுதவின்னு சொன்னா கூட போதும். நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். ஆனா எங்களை மறந்துடுறாங்க.  இதுக்கு சங்கத்துல தான் முடிவெடுக்கணும். நடிகைகள் பெயர் போடும்போதே, டைட்டில் கார்டில் எங்க பெயர் வந்தா சூப்பரா இருக்கும். ஆர்டிஸ்டுக்கு பாராட்டு தானே முக்கியம்.

நயன்தாரா மாதிரி முன்னணி நடிகைகள் சொந்த குரலில் டப்பிங் பேச ஆரம்பிச்சிட்டாங்களே?

நடிகைகள் சொந்தக்குரலில் பேச ஆரம்பிச்சிட்டா எங்களுக்கு வேலையே இல்லாம போய்டும். ஆனா ஒரு படத்துக்கு மூணு நாள்ல நாங்க பேசுற டப்பிங்கை, அவங்க ரெண்டு வாரம் எடுத்துப் பேசுவாங்க. அந்த அளவுக்கு ஹோம்வோர்க் இருக்கு. அப்படி பேசினாலும் ரசிகர்களுக்கு பிடிச்சாதான் வெற்றியே.

உங்களைப் படத்துல நடிக்க கூப்டிருப்பாங்களே?

சோகமாகிறார்.

அதை ஏன் கேட்கறீங்க சார்! ‘ஓகேஓகே’ மதுமிதா பண்ணின ஜாங்கிரி கேரக்டர் நான் பண்ண வேண்டியது. அப்ப விஜேயா பிஸியா இருந்ததால, கமிட் ஆக முடியல. அப்புறம் ‘இது நம்ம ஆளு’ படத்துலயும் ஒரு சின்ன கேரக்டர் மிஸ் ஆகிடுச்சு. அதுவும் ஜாங்கிரி கேரக்டரை மிஸ் பண்ணினதெல்லாம் ரொம்பவே வருத்தமா இருந்துச்சு.

எந்த மாதிரி வேஷத்துல நடிக்க ஆசை?

கேரக்டர் ஆர்டிஸ்ட் அல்லது காமெடி கதாபாத்திரம், ஹீரோயின் ஃப்ரெண்ட் கதாபாத்திரம்ன்னு எது கெடைச்சாலும் பண்ணுவேன். கண்டிப்பா வாய்ப்பு வரும்னு காத்துகிட்டிருக்கேன்.


உங்க மாமா இளையராஜா பத்தி கேட்காம விட்டுருவோமா?

எனக்கு அதுல எப்பவுமே பெருமைதான்! எங்க சொந்த ஊரு பண்ணைபுரம். ராஜா சாரோட மனைவியோட சொந்த தம்பி பொண்ணு நான். குழந்தையா இருக்கும்போது ராஜா சாரோட செல்லபிள்ளை நான். என்னோட இதயத்திற்கு ரொம்ப நெருக்கமானவர் ராஜா சார். இப்பவும் நான்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். போன வருஷம் ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வீட்டுக்கு போகணும். வழக்கம் போலவே லேட்டா போய்ட்டேன். கிளம்பும் போது, “சொந்தக்காரங்கள்லாம் இப்போ விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போறாங்க?”னு என்னைப் பார்த்து ராஜா சார் சொல்லவும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். ஸாரி ராஜா சார்! 

அவர்கூட நடந்த எதாவது ஜாலியான சம்பவம்? 

சின்னவயசுல தேவர்மகன் ரிலீஸ் நேரம், அவரோட பாட்டு “ உன் கழுத்தில் மாலையிட.. உன்னிரண்டு தோளைத்தொட.. என்ன தவம் செய்தேனோ என் மாமா...”  இந்தப் பாட்டை சத்தமா பாடிட்டிருந்தேன்.  டக்னு இளையராஜா சார் வந்து நின்னு,  “என்னம்மா, மாமாவ கூப்பிட்டியா..  இதோ வாரேன்?” கிண்டலா சொன்னத இப்பவும் மறக்கமுடியாது.


பி.எஸ்.முத்து

அடுத்த கட்டுரைக்கு