Published:Updated:

கல்யாணம்கறது ‘ஒருநாள் கூத்து’ இல்ல. - மியா ஜார்ஜ் சிறப்புப் பேட்டி

கல்யாணம்கறது ‘ஒருநாள் கூத்து’ இல்ல. - மியா ஜார்ஜ் சிறப்புப் பேட்டி
கல்யாணம்கறது ‘ஒருநாள் கூத்து’ இல்ல. - மியா ஜார்ஜ் சிறப்புப் பேட்டி

மியா ஜார்ஜிடம் ஒரு சின்ன சிட் சாட்..

அமரகாவியம், இன்று நேற்று நாளை இப்படி நடிப்புக்கான படமா தேர்வு செஞ்சுதான் நடிக்கறீங்க ஆனாலும் வரிசையா படங்கள் இல்லையே?

“ நான் ஒரே டைம்ல தமிழ் , மலையாளம் இப்படி ரெண்டு மொழிகள்லயும் நடிக்கிறேன். இங்க ஒரு படம் பண்ணி ரிலீஸ் ஆனா அடுத்து மலையாளம். இப்படிதான் நடிப்பேன். அதே மாதிரி என்னோட கேரக்டருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குன்னு பார்த்து தான் முடிவு செய்வேன். அதனால தான் லேட் ஆகுது. நிறைய படங்கள கையில வெச்சுகிட்டு நான் பிசின்னு சொல்லிக்க விரும்பலை!”.

'ஒரு நாள் கூத்து' என்ன மாதிரி படம்?

“ கல்யாணம் தான்..கல்யாணத்த வேற கோணத்துல சொல்லப்போற படம். படிப்பு , முடிச்சு ஒரு வேலை கிடைச்ச உடனே அடுத்து எப்போ கல்யாணம்னுதான் எல்லாரும் கேப்பாங்க. அதை மையமா வெச்சு உருவாகியிருக்கற நல்ல குடும்பப் படமா இந்தப் படம் இருக்கும்!”

உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்?

“ என் கேரக்டர் பேரு லட்சுமி. ஹோம்லி திண்டுக்கல் பொண்ணு.  இந்தப் படம் மூணு பொண்ணுங்களுக்கான ட்ராக்.  இளைஞர்களுக்கு கொஞ்சம் மெஸேஜ் சொல்ற மாதிரி இருக்கும். எனக்கு ரொம்ப அழகான, அமைதியான கேரக்டர். அதிகமா பேசக் கூட மாட்டேன்!”

இந்தப் படத்துல உங்களுக்கு ஜோடியே கிடையாதா?

“ ஆமாம்.(சிரிக்கிறார்) உண்மைய சொன்னா ஹீரோ தினேஷோட எனக்கு சீனே கிடையாது. பிரஸ் மீட்லதான் நான் தினேஷை நேர்லயே பார்த்தேன். விசாரணை பார்த்தேன். செம ஆக்டிங். நல்லவேளை.. அவர் கூட காட்சிகள் வெச்சு, இயக்குநர் எனக்கு சவால் குடுக்கல!”

அதெப்படி ஹோம்லி கேரக்டர்களா நடிக்கறீங்க..நீங்களே செலக்ட் பண்றதா இல்ல அமையுதா?

“ அதுவாவே அமையுது. ஆக்சுவலி ஹீரோயினுக்கு அதீத முக்கியத்துவம் இருந்தாலே கிளாமர் கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும். நான் அந்த மாதிரி கேரக்டர் தேர்வு செய்யறதும் அதுக்கு ஒரு காரணம்!”

கிளாமர் ஹீரோயின் கான்செப்ட் வேண்டாம்னு நினைக்கிறீங்களா?

“ முதல்ல எனக்கு கிளாமர் செட் ஆகுமான்னு ஒரு விஷயம் இருக்கே. கிளாமர் படத்துக்குத் தேவைன்னா பண்ணலாம்.ஆனால் எனக்குன்னு ஒரு லிமிட் வெச்சிருக்கேன். அதைத் தாண்டின கிளாமர்னா நடிக்க மாட்டேன். 

’வெற்றிவேல்’ படத்துல நீங்களே டப்பிங் பேசியிருந்தீங்களே..தொடர்ந்து முயற்சிக்கலாமே?

“’அமரகாவியம்’, ’இன்று நேற்று நாளை’, இப்போ ’ஒரு நாள் கூத்து’ இதெல்லாம் பக்கா வசனத்துக்குரிய படங்கள், எனக்கு நடிக்க ஸ்கோப் இருக்கற படங்கள். இதுல நான் போயி மலையாளம் கலந்து பேசிகிட்டு இருந்தா நல்லா இருக்குமா. அந்தப் படத்துல மலையாளம் பேசச் சான்ஸ் கிடைச்சதுனால பண்ணேன். ஆனாலும் கத்துக்கிட்டு கண்டிப்பா சீக்கிரத்துல டப்பிங் பேசுவேன்!”

கல்யாணம் பத்தி உங்க கருத்து என்ன? இந்தியக் கல்யாணங்கள்ல நீங்க பார்க்கற மைனஸ் என்ன?

“முதல்ல கல்யாணம் ஒவ்வொருத்தரோட பெர்சனல். அதுல ஏன் அடுத்தவங்க நுழையணும். குறிப்பிட்ட வயசு வந்துட்டாலே எப்போ கல்யாணம்ன்னு ஆரம்பிச்சுடுறாங்க. அது தப்பு. கல்யாணம்ங்கற பேர்ல இப்போ இருக்க ஜெனரேஷன் எல்லாத்துலயும் அவசரப்படறாங்க. விட்டுக்கொடுக்கற மனசே இல்லை. கல்யாணம்கறது ‘ஒருநாள் கூத்து’ இல்ல. இப்பல்லாம் நிறைய விவாகரத்து நடக்குது. ரெண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கணும். சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் மன்னிப்பு, சகிப்புத் தன்மை இல்லாம வாழ்க்கைய சோகமயமா ஆக்கிக்கறாங்க. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும் அதுதான் உண்மையான கல்யாண வெற்றி!”

உங்க கல்யாணம் எப்படி நடக்கும், நடக்கணும்னு ஆசைப் படறீங்க? எதிர்பார்ப்புகள் என்ன.

“ இப்போதைக்கு அதெல்லாம் யோசிக்கல. இப்போதான் படிச்சு முடிச்சிருக்கேன். நிறைய டைம் இருக்கு. ஆனால் எதிர்பார்ப்புகள்னா, நல்ல நடத்தை இருக்கணும், நான் நல்லா பேசுவேன்.  அதுக்கேத்த மாதிரி அவரும் கலகலன்னு இருக்கணும். நல்ல லுக்கிங். அவ்ளோ தான்!”

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பத்தி சொல்லுங்களேன்?

“ அவருக்கு முதல் படம், யார்கிட்டயும் அசிஸ்டெண்டா இதுக்கு முன்னாடி வொர்க் பண்ணல. ஆனாலும் நான் நடிக்கும் போது எனக்கே ஆச்சர்யம். அவ்ளோ பக்குவமான இயக்குநரா தெரிஞ்சாரு. முதல் படம் மாதிரியே இல்ல!”

அடுத்தடுத்த படங்கள் பத்தி சொல்லுங்களேன்?

“ ரெண்டு படங்கள்  ’ரம்’, ’எமன்’. ரம் படம் முடிஞ்சது. சமீபத்துல கூட அந்தப் படத்தோட சிங்கிள் ’ஹோலா அமிகோ’ பாட்டு ரிலீஸ் ஆச்சு. அது ஒரு ஹாரர் படம். அதுல நான் க்ரிமினாலஜி படிக்கிற காலேஜ் ஸ்டூடண்ட். ’எமன்’ ,அமரகாவியம் இயக்குநரோட அடுத்த படம். நல்ல ஸ்கோப் இருக்கற படங்கள் ரெண்டுமே!”

கடைசியா என்ன படம் பார்த்திங்க? பிடிச்ச ஹீரோ யாரு?

” 24 பார்த்தேன். எனக்கு தனுஷ், சூர்யா ரெண்டு பேரையும் பிடிக்கும்!”

- ஷாலினி நியூட்டன்

அடுத்த கட்டுரைக்கு