Published:Updated:

தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!

தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!
தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!

ன்னதான் புதுப்புது வரவுகள் படையெடுத்தாலும் பழைய பாடல்களுக்கு எப்போதும் நம் காதுகள் பணிவதை மறுக்க முடியாது. அப்படித்தான் ஜெயா டிவியின் தேன்கிண்ணம் நிகழ்ச்சிக்கு சீனியர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள். காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சினிமாக்கள் பற்றிய தகவல்கள் தான். இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் விஜே ஸ்ரீதேவிக்கும் நிறைய ரசிகர்கள்...

உங்களை பல வருஷமா டிவி விஜேவா பார்க்கறோமே?

“ ஆமா சுட்டி குட்டி விஜேவா ஜெயா டிவியில தான் என் வாழ்க்கைய ஆரம்பிச்சேன். அப்புறம் பி.ஏ சோஷியாலஜி,. அத முடிச்சுட்டு அப்படியே திரும்ப ஜெயா டிவில கொஞ்ச நாள். அப்பறம் பொதிகை சேனல்ல கதை கதையாம் காரணமாம்ன்னு ஒரு படத்தையே சீரியல் மாதிரி ஒரு வாரம் போடுற வித்தியாசமான நிகழ்ச்சி. இப்போ பெப்பர்ஸ் டிவியில ’ப’ அப்படின்னு ஒரு நிகழ்ச்சி. அதுலயும் பாடல்கள் பத்தின கதைகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள்ன்னு போயிட்டு இருக்கு. வந்ததுல இருந்தே என்னமோ தெரியல சினிமா , சினிமா பாடல்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் தான் அதிகமா அமையுது!”

மீடியா உங்க திட்டமா? இல்லை அதுவா அமைஞ்சதா?

“ அப்பா தீயணைப்புத் துறை, அம்மா அக்கவுன்டன்ட். அதனாலேயே சமூகம், வரலாறு இதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம். ஆனா மீடியா நானே யோசிக்காம நடந்தது. அம்மா ஒரு சின்ன வேலைக்காக ஜெயா டிவி போனாங்க. அப்போ அம்மா கூட நானும் போனேன். அப்போ நான் அஞ்சாவதோ ஆறாவதோ படிச்சிட்டு இருந்தேன். அப்போ தான் விஜய் டிவி கோபி நாத் தமிழ் படிக்கத் தெரியுமான்னு கேட்டாரு. நானும் படிச்சேன். அப்புறம் வாராவாரம் ஞாயிறு ஷூட் அப்படின்னு எனக்கு வேலை கிடைச்சது. ஜெயா டிவி கிட்ஸ் நியூஸ். அப்படி எதிர்பாராம நடந்தது தான் மீடியா! இன்னைக்கு வரைக்கும் ரொம்ப நல்லா போகுது மீடியா வாழ்க்கை.”

அப்போ நிறைய அனுபவங்கள் இருக்கும்னு சொல்லுங்க?

“ 15 வருஷம் கடந்துருக்கு. எனக்கே தெரியல இப்போ நினைச்சுப் பார்த்தாலும் மலைப்பா இருக்கு. அது என்னமோ தெரியல எனக்கு அமைகிற நிகழ்ச்சிகள் எல்லாமே கொஞ்சம் பக்குவமான, அதே சமயம் பொறுப்பான நிகழ்ச்சிகளா அமையும். அப்படி தான் தேன் கிண்ணம் நிகழ்ச்சி. நிறைய சீனியர் ரசிகர்கள் எனக்கு. ரொம்ப பாந்தமா ‘எனக்கு உன் நிகழ்ச்சின்னா ரொம்ப பிடிக்கும்மா, ரொம்ப நல்லா தமிழ் பேசற’ன்னு பாராட்டுவாங்க. அதுக்கெல்லாம் கோபி அங்கிள் - ஆமா அவர நான் அப்படிதான் சொல்லுவேன் - அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும்!”

மீடியா தாண்டி வேற என்ன பிடிக்கும்?

“ நான் முறையா பரதம் கத்துக்கிட்ட டான்ஸர். என்னோட இன்னொரு உலகம் அதுதான். பரதம், கச்சேரி, டான்ஸ் நிகழ்ச்சிகள் இதுல அதிகமான ஈடுபாடு செலுத்துவேன்!”

உங்களப் பத்தி ஒரு ரகசியம் சொல்லுங்களேன்?

“ எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். 3 வயசு. இப்போ தான் Pre KG சேர்ந்துருக்கான். எனக்கு கேமரா பிடிச்ச மாதிரியே அவனுக்கும் கேமரா மேல ஆசை, நிறைய முக பாவனைகள், நடிப்பு இதுலெல்லாம் ஆர்வம் காட்டறான். ரொம்ப சுட்டி.. அதே சமயம் அறிவாளி. இப்போ கபாலி ரஜினிகாந்த பார்த்துட்டு அவர் ஸ்டைல்ல நெருப்புடா சொல்லிக்கிட்டு இருக்கான்!”

மீடியாவுல அடுத்த ஸ்டெப் என்ன?

“ விஜே 15 வருஷம் கடந்துடுச்சு. அடுத்தக் கட்டம் ப்ரோக்ராம் ப்ரொட்யூஸர் தான். நல்ல போஸ்ட்டிங்ல ஒரு முழு நிகழ்ச்சிய நானே டிசைன் பண்ணி வொர்க் பண்ணணும்னு அதுதான் ஆசை. அது தான் என்னோட எதிர்கால திட்டமும். ஏன்னா விஜே’க்கு காலம் குறைவு. ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான். ஆனால் ப்ரோக்ராம் ப்ரொட்யூஸர்...  வேற லெவல்!”

நீங்க ரொம்ப வருஷமா மீடியால இருக்கற ஒரு அனுபவசாலி. புதுசா மீடியா, டிவி’ன்னு ஆர்வமா வரவங்களுக்கு என்ன அட்வைஸ் குடுப்பீங்க?

“ இப்போ வர்றவங்க எல்லாருமே ரொம்ப அப்டேட்டா இருக்காங்க. நாம சொல்லிக்குடுக்க வேண்டியதே இல்ல. நான் டிவிக்குள்ள வந்தப்போ எனக்கெல்லாம் எதுவுமே தெரியாது. அதோட இப்போ இருக்கற அளவுக்கு நிறைய சேனல்கள், மீடியாக்களும் கூட இல்ல. அதனால எங்கள நாங்களே வடிவமைக்க பல வருஷம் ஆச்சு. ஆனால் இப்போ அப்படி கிடையாது. வரும் போதே அவங்களுக்குன்னு தனி ஸ்டைல், ட்ரெஸ் எல்லாமே கவனமா பார்த்துக்குறாங்க. எல்லாத்துக்கும் மேல அவங்கள அவங்களே எப்படி ப்ரமோட் பண்ணிக்கணும்னு கூட தெரியுது. அட்வைஸ் சொல்லணும்னா ஒண்ணே ஒண்ணு தான். வேலையையும் வாழ்க்கையையும் கலந்து டென்ஷன் ஏத்திக்காதிங்க. மீடியா மட்டும் இல்ல. எந்த வேலையிலயும் டென்ஷன் இருக்கதான் செய்யும். சரி ஒரு ஃபீல்ட்ல முழுமையா நம்ம திறமைசாலின்னா அதோட விட்டுடாம அடுத்தடுத்து நிறைய திறமைகள் , பல பாதைகள அமைச்சிக்கணும். அப்போ தான் ஒண்ணு விட்டாலும் இன்னொன்னு கை கொடுக்கும். ஏன்னா இது க்ரியேட்டிவ் உலகம், நம்ம ஒண்ணு யோசிச்சா நம்மள தாண்டி டபுள் மடங்கா யோசிக்க அடுத்த ஆள் காத்துகிட்டே இருப்பாங்க. அதுக்கு நாம தயாரா இருக்கணும். இப்போதைக்கு நான் சொல்ற ஃப்ரீ அட்வைஸ் இதுதான்!”

- ஷாலினி நியூட்டன்