Published:Updated:

பெட் அனிமல்ஸுக்கும் பெர்சனல் லைஃப் இருக்கு! - The Secret Life of Pets - படம் எப்படி #TheSecretLifeofPets

பெட் அனிமல்ஸுக்கும் பெர்சனல் லைஃப் இருக்கு! - The Secret Life of Pets - படம் எப்படி #TheSecretLifeofPets
பெட் அனிமல்ஸுக்கும் பெர்சனல் லைஃப் இருக்கு! - The Secret Life of Pets - படம் எப்படி #TheSecretLifeofPets


உங்கள் வீட்டில், நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணி என்னவெல்லாம் செய்யும் . உங்களைப் பார்க்கும் போது வாலாட்டும்; நேசமாய் தலை சாய்த்து தடவிக் கொடுக்க சொல்லும். எல்லாம் சரி, நீங்கள் இல்லாத போது, அது என்னென்னவெல்லாம் செய்யும் என எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா? அது தான் The Secret Life of Pets  திரைப்படம்.

Despicable Me என்னும் அனிமேஷன் படத்தின் மூலம் மினியன்ஸ்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய இல்லுமினேசன் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் கிறிஸ் ரெனாடும் இணைந்து அளித்து இருக்கும் அடுத்த படம் இது.

மேக்ஸ், மெல், க்ளோ, பட்டி, கிட்ஜெட், தாரா ஆறு பேரும் மான்ஹட்டான் நகரின் அப்பார்ட்மென்ட்களில் இருக்கும் செல்லப் பிராணிகள். இதில் க்ளோ பூனை. தாரா - ட்வீட்டி... அதான் ட்விட்டர்ல இருக்கற பறவையோட மஞ்சள் வெர்ஷன்.  மற்றவை நாய்கள். மேக்ஸின் ஓனர் புதிதாக ட்யூக் என்ற மற்றொரு நாயையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இதற்குப் பிறகு ஆரம்பிக்கிறது சண்டை. என் கட்டில், என் ஸ்நேக்ஸ் பிளேட் என ஆரம்பிக்கும் சண்டை, ட்யூக்கை ஒழித்துக்கட்ட வேண்டும் என மேக்ஸ் திட்டம் போடும் வரை நீள்கிறது.

நம்மூரில் டிராஃபிக் போலீஸ் கொண்டு வரும் ‘வண்டி பிடிக்கும் வண்டிகள்’ அதிகம் இருப்பது போல், அங்கே நாய் பிடிக்கும் வண்டிகள் அதிகம் இருக்கும். ட்யூக், மேக்ஸின் அடையாள அட்டைகளை, பூனைகள்  திருடிவிட, இருவரையும் பிடித்துக்கொண்டு சென்று விடுகிறார்கள். இவர்களை ஸ்நோபால் என்னும் முயல் காப்பாற்றுகிறது. செல்லப் பிராணிகளாய் வளர்க்கப்பட்டு, கைவிடப்பட்டவர்களின் தலைவனாக இருக்கிறது ஸ்நோபால். அங்கு இருக்கும் பாம்பு, முதலையிடம் இருந்தெல்லாம் தப்பிக்கும் மேக்ஸ், வழிதவறி, ப்ரூக்லின் நகர் நோக்கி சென்றுவிடுகிறது.

இங்கு அப்பார்ட்மென்ட்டில் மேக்ஸை, ஒன்சைடாக காதலித்துக்கொண்டு இருக்கிறது கிட்ஜெட். மேக்ஸை காணவில்லை என்றதும், கிட்ஜெட் செய்வதெல்லாம் காமெடி சரவெடி ரகம். இறுதியில் மேக்ஸ், ட்யூக் வீடு வந்து சேர்ந்தார்களா என ஜாலியாக முடிகிறது கதை.

படத்தில் வரும் வசனங்கள் எல்லாமே சிரிப்பு சிக்ஸர்கள்தான். சில சாம்பிள்கள்.
 
க்ளோ: ‘தாரா, அன்னிக்கு ஒரு பூனை உன்னைய சாப்பிட வந்துச்சே. அப்ப உன்னைய யாரு காப்பாத்துனா.. மேக்ஸ் தானே?’

தாரா : யாரோ ஒரு பூனையா.. நீ தான சாப்பிட வந்த ?

க்ளோ:  யாரு சாப்பிட முயற்சி பண்ணினாங்கன்னு முக்கியம் இல்ல... காப்பாற்ற மேக்ஸ் வந்தது தான் முக்கியம்
 _______

மேக்ஸ் : நாமெல்லாம் 'வுல்ஃபோ'ட வழித்தோன்றல்கள்னு சொல்றாங்க. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. ஒரு குட்டி நாய், தன்னோட அம்மாகிட்ட, நாம யாரோட வழித்தோன்றல்னு கேட்டு இருக்கும். அது கடுப்பாகி 'உஃப்'னு சொல்லி இருக்கும். இவனுக 'வுல்ஃப்'னு ஆரம்பிச்சுட்டானுக.
 _________
 
க்ளோ : இந்த நாய் வளர்க்குறவங்க எல்லாம் எவ்வளவு லூசுகன்னா. அதுகளுக்கு நாய் வளர்த்தக்கூடாது, பூனை தான் வளர்த்தணும்னுகூட தெரியாத அளவுக்கு லூசுக.
 ___
க்ளோ : நான் உன் பெஸ்ட் ஃபிரண்டா இருக்கலாம். அதுக்காக, உன் மேல அக்கறை எல்லாம் செலுத்த முடியாது.
___________
இரு வாரங்களுக்கு முன் வெளிவந்த ஃபைண்டிங் டோரியை, இந்தப் படம் ஓரம் கட்டும் என்பதில் சந்தேகமில்லை. டோண்ட் மிஸ் இட்!

படம் பார்ப்பவர்களுக்கு, கண்டிப்பாக வளர்ப்புப் பிராணிகளின் மேல் ஒரு கரிசனம் பிறக்கும், இவ்ளோ அறிவான அன்பான பிராணிகளை மாடில இருந்தெல்லாம் தூக்கிப் போட்டது எவ்ளோ தப்புன்னும் புரியும்! 
 

ட்ரெய்லருக்கு..

பின் செல்ல