Published:Updated:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின் ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

மூன்று மணிநேரம் மூச்சு திணறத் திணற எடுக்கப்படும் தமிழ்படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் சீன்களை வெறும் ஆக்‌ஷன், கட், சைலன்ஸ் என்ற மூன்றே வார்த்தைகளில் நமக்கு காட்டி முடித்துவிடுவார்கள். அதெப்படி? ஒவ்வொரு டைரக்டரின் ஸ்டைலும் படத்தில் வெளிப்படும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் வெளிவராமலா இருக்கும்? அப்படி யோசித்து கற்பனை கொரில்லாவை தட்டிவிட்டதன் பலன் இது.

மணிரத்னம்:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

செட்டில் சூரிய வெளிச்சம் பட்டும்படாமலும் இருக்கும். எல்லாரும் எதையோ யோசித்தவாறே இருப்பார்கள். 'இருக்கா? இருக்கு, வருமா? வராது’ என ஒற்றை வார்த்தையில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். 'கன்ட்யூனிட்டி மிஸ் ஆகுதுனு தோணல, டைரக்டர் திட்டுவார்னு நினைக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு' என சொதப்பியதை கூட ஸ்டைலாய் சமாளிப்பார்கள். இன்னொருபக்கம், 'எடுத்துக்கோ, எவ்வளவு இட்லி வேணும்னாலும் எடுத்துக்கோ' என உணவு உபசரிப்பு பலமாய் இருக்கும்.

ஷங்கர்:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

கும்பமேளா கூட்டத்திற்கே சவால்விடும் அளவிற்கு ஜன சந்தடி அதிகமிருக்கும். 'பாடல் காட்சியில் ஹீரோ நடந்து வரும்போது அப்படியே குழந்தையாய் மாறி அதிலிருந்து திரும்ப டைனோசராய் மாறும் காட்சி க்ராபிக்ஸில் சரியாக வரவேண்டுமே' என டென்ஷனில் இருப்பார்கள் ஏ.டிக்கள். மறுபக்கம் திருப்பூர் சாய பட்டறைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல சாயங்களை உடலிலும் சுவரிலும் அப்பிக்கொண்டிருப்பார்கள். மூலையில் ஓடுவது, நடப்பது, பறப்பது, பறப்பது போடுவது அனைத்தையும் பிரம்மாண்டமாக சமைத்துக் கொண்டிருப்பார்கள்.

கெளதம் வாசுதேவ் மேனன்:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

கண்ணை உறுத்தாத நிறங்கள், மெல்லிய கிடார் இசை என மூட் செட் செய்துகொண்டிருப்பார்கள். கீழே நிறைய ஆங்கில பட சிடிக்கள் சிதறிக் கிடக்கும். நிக்கோலஸ் ஸ்பார்க்ஸும், இ.எல் ஜேம்ஸும் ஏ.டிக்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பார்கள். காற்றில் பரவி வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் ஆக்ஸ்போர்ட் அகராதியே தலையில் கை வைத்து குத்த வைத்திருக்கும். கோல்ட் காஃபியும் ரெட் ஒயினும் ஆஸ்தான டிஷ்களாக இருக்கும்.

ஹரி:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

எல்லாரும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பார்கள். கேமராமேன் ரோலர் கோஸ்டரில் அமர்ந்து ஒளிப்பதிவு செய்ய பழகிக் கொண்டிருப்பார். தூத்துக்குடி வட்டார மொழியில் க்ராமர் மிஸ்டேக்குகளை திருத்திக் கொண்டிருப்பார்கள் ஏ.டிக்கள். எங்கும் எதிலும் காக்கியே வியாபித்திருக்கும். அருவாள், வேல்கம்புகளுக்கான ஹோல்சேல் டீலர் ஒருபக்கம் துண்டை போர்த்தி டீல் முடிப்பார். சுமோக்கள் பறந்து பஞ்சராக தயாராகிக் கொண்டிருக்கும். சாம்பாரைக் கூட 'சாம்ம்ம்ம்ம்பார்ர்ர்' என நரம்பு புடைக்க கத்தி கொதிக்கக் கொதிக்க தட்டில் ஊற்றுவார்கள்.

டி.ஆர்:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

டி.ஆரே க்ளாப் தட்டி, டி.ஆரே ஆக்‌ஷன் சொல்லி, டி.ஆரே நடித்து, அதற்கு டி.ஆரே கட் சொல்லி கேமராவில் ஷாட் பார்ப்பார். உடனுக்குடன் 'ஜும்பக்குஜும்பா ததாக்குஜும்' என பி.ஜி.எம் ரெடியாகும். ஸ்கிரிப்ட் பேடில், பஜ்ஜி - சொஜ்ஜி, கயிறு - தயிரு என ரைமிங் வார்த்தைகள் மெஜாரிட்டியாய் இடம் பிடித்திருக்கும். கெஸ்ட் ரோலில் சிம்புவும் (கொஞ்சம் டவுட்டுதான்) குறளரசனும் வந்து வணக்கம் போட்டு செல்வார்கள். இதை டிபன் பேரியரோடு பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார் உஷா.

மிஷ்கின்
:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

செட் ஹாரர் படம் போல கும்மிருட்டாய் மின்னும். அந்த இருட்டிலும் எல்லாரும் கூலர்ஸ் போட்டு சுற்றுவார்கள். கேமராமேன் தரையோடு தரையாக படுத்து எதையோ தேடிக்கொண்டிருப்பார். வயலின் இசை தூரத்தில் எங்கோ இருந்து சன்னமாய் ஒலிக்கும். குரசோவாவின் உருவச்சிலை ஒரு மூலையில் கம்பீரமாய் வீற்றிருக்கும். எல்லாரும் எப்போதும் குனிந்துபடித் திரிவதால் கழுத்து பிடித்துவிட ஒரு பிசியோதெரபிஸ்ட் உஷார் நிலையில் உட்கார்ந்திருப்பார்.

விக்ரமன்:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

பெரிய ஓட்டு வீடு, நடுவில் முற்றம், பேக்ட்ராப்பில் மலை. மொத்த படத்திற்கும் இதுதான் லொக்கேஷன். மாற்றான் சூர்யாக்கள் போல எல்லாரும் தோள் மீது கையை போட்டுத்தான் சுற்றுவார்கள். ஏ.டிக்கள் அனைவரும் ஒரே குடும்பத்து பங்காளிகளாய் இருப்பார்கள். அனைவருக்கும் பாட்டி சமையல்தான். வரிசையாய் உட்கார வைத்து உப்புக்காரம் சரியா இருக்கா என பார்த்து பார்த்து பரிமாறுவார் பாட்டி. 'இப்ப வரவா? இல்ல போயிட்டு சாயங்காலம் வரவா?' என எல்லார் கண்களிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும்.

வெங்கட் பிரபு:

’இருக்கா.. இருக்கு.. வருமா.. வராது..!’ - இது எந்த இயக்குநரின்  ஷூட்டிங் ஸ்பாட்? #ஒரு ஜாலி அலசல்!

இந்தியா மேப்பை தேடி எடுத்து அதில் போகாத டூரிஸ்ட் ஸ்பாட் ஒன்றை குறிப்பார் வெங்கட் பிரபு. அந்த இடத்திற்கு தன் கேங்கோடு பெட்டி படுக்கை கட்டிக்கொண்டு டூர் கிளம்புவார். போகும் வழியில் கேமராமேனையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள். அங்கே போய் உண்டு, களித்து, தூங்கி எழும் சேட்டைகளை எல்லாம் கேண்டிட்டாய் ஷூட் செய்வார். அதை அப்படியே சென்னை கொண்டு வந்தால் யுவனின் தெறி இசையில் படம் ரெடி.

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

-நித்திஷ்

அடுத்த கட்டுரைக்கு