Published:Updated:

’ரெமோ’ விக்ரமைப் புகழ்ந்த ரெமோ சிவகார்த்திகேயனும், ப்ரேமம் நிவின் பாலியும்! - இருமுகன் இசைவிழா

’ரெமோ’ விக்ரமைப் புகழ்ந்த ரெமோ சிவகார்த்திகேயனும், ப்ரேமம் நிவின் பாலியும்! - இருமுகன் இசைவிழா
’ரெமோ’ விக்ரமைப் புகழ்ந்த ரெமோ சிவகார்த்திகேயனும், ப்ரேமம் நிவின் பாலியும்! - இருமுகன் இசைவிழா

’ரெமோ’ விக்ரமைப் புகழ்ந்த ரெமோ சிவகார்த்திகேயனும், ப்ரேமம் நிவின் பாலியும்! - இருமுகன் இசைவிழா

பீமா படத்திற்குப் பிறகு விக்ரமுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்திருக்கும் படம். அரிமா நம்பி படத்தைத் தொடர்ந்து ஆனந்த் சங்கரின் இரண்டாவது படம்.  நித்யாமேனன், நயன்தாரா என்று இரண்டு நாயகிகள். நானே ஹீரோ நானே வில்லன் என்று இரண்டு கெட்டப்பில் விக்ரம் நடித்திருக்கும் படம்... இருமுகன்! நிவின்பாலி, சிவகார்த்திகேயன் என்று இரண்டு இளம் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினராக வந்த,  இருமுகன் படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக தம்பிராமையா மேடையில் பேசினார். இப்படத்தில் மலேசியா போலீஸ் அதிகாரியாக தம்பிராமையா நடித்திருக்கிறார். சீக்ரெட் ஏஜென்டான விக்ரமிற்கு உதவிசெய்யும் மலேசியா போலீஸ் அதிகாரியாக காமெடியில் கலக்கியிருக்கிறாராம் தம்பிராமையா.

தொடர்ந்து கவிஞர் தாமரை, மதன் கார்க்கி, தொழில்நுட்ப கலைஞர்களான அன்பு-அறிவு, கணேஷ், பாகுபலி கதையாசிரியர் விஜயேந்திரபிரசாத், இயக்குநர் ஹரி என்று ஒவ்வொருவரும் விக்ரமின் பெயரை மேடையில் சொல்லும்போதும் ரசிகர்களிடமிருந்து விசிலும், கைத்தட்டலும் காதைப்பிளக்கிறது.

இருமுகன் நிகழ்ச்சியின் ஸ்பெஷல் ஹீரோ பிரேமம் நாயகன் நிவின்பாலி தான். நிவின்பாலி கலந்துகொள்ளும் முதல் தமிழ் படத்திற்கான இசைவெளியீட்டு விழா இது தான். எல்லோருக்கும் வணக்கம் என்று அழகிய தமிழில் பேச தொடங்கினார் நிவின். “விக்ரமின் படங்களைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். எனக்கான முன்னுதாரனம் விக்ரம் சார் தான். அவரே என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியின் நடுவில், மற்றுமொரு சுவாரஸ்யாமான நிகழ்வு நடந்தது. இயக்குநர் ஹரி மேடையேறியதுமே, சாமி பாகம் இரண்டு பற்றி ரசிகர்கள் கேட்க, உடனேயே மேடையில் சாமி இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பை வெளியிட்டார் ஹரி. விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் மற்றும் பிரியன் நால்வரையும் மேடைக்கு வரவழைத்து, இவர்களே என்னுடைய சாமி 2ம் பாகத்திற்கான குழு. என்று ஒரு படத்தின் இசைவெளியீட்டில், மற்றொரு படத்திற்கான அறிவிப்பையும் தந்துவிட்டு சென்றார் இயக்குநர் ஹரி.

ரெமோ நாயகன் சிவகார்த்திகேயன், “சாமி படம் ரிலீஸான நேரம், முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் கிடைக்காம, இரவுக்காட்சிக்கு காத்திருந்து படம் பார்த்தேன். படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே இந்த அரங்கை விட பத்துமடங்கு விசில் பறந்தது. விக்ரம் சாரோட படங்கள் பார்ப்பதே பெரிய பாக்கியம் என்று நினைச்சிட்டு இருந்தேன், ஆனா இப்போ அவர் படத்து இசைவெளியீட்டு விழாவுக்கு நான் வந்திருப்பது ரொம்பப் பெரிய விஷயம். மெரினா படத்துக்கான ஒரு பாடலுக்கு இரண்டு வரிகள் பாடுவதற்காக தயங்கி போய் அனுமதிகேட்டேன். யாருக்கும் பண்ணமாட்டேன், ஆனா உனக்காக பண்ணுறேன்னார். எனக்கு எப்போதுமே ஊக்கம் கொடுத்துப் பேசுவார். சினிமாவில் சாதிப்பவர்களுக்கான நம்பிக்கை வார்த்தை தான் விக்ரம். ஒரு படத்துக்கு,  வேற மாதிரி வித்தியாசமான மேக்கப் பண்றதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனா நீங்க ஒவ்வொரு படத்துக்கும் 4  மணிநேரம் மேக்கப் போட்டு உங்களை வேற வேற மாதிரி காமிக்கற வேடங்கள்ல நடிக்கிறீங்க. என்றுமே எங்களுக்கான முன்னுதாரணம் விகரம்சார் தான்” என்று முடித்தார் சிவகார்த்திகேயன்.  

இறுதியாக விக்ரம் மேடைஏறினார், “ ஒன்பது மாதம் படத்திற்கான வேலைகள் தள்ளிச்சென்றபோதும், தயாரிப்பாளர் ஷிபு காத்திருந்து படத்திற்கான முழு வேலையையும் செய்துகொடுத்தார். வில்லன் கதாபாத்திரத்திற்கும் நானே நடிக்கவா என்று கேட்கவும் உடனே சம்மதித்தவர் ஆனந்த் சங்கர். இந்த மாதிரியான கதையில் நடிக்கவேண்டும் என்பதில் ரொம்ப விருப்பம் இருந்தது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.  ஹாரிஸ் ஜெயராஜ் பத்தி சொல்லவே வேண்டாம். இன்றைக்கும்  அவருடைய, “ மூங்கில் காடுகளே” பாடல் தான் இன்றுமே என்னுடைய காலர் ட்யூன். இந்தப் படத்திற்கு தேவையான பாடலை மேஜிக்குடன் தந்திருக்கிறார்.

எனக்கு இங்கு நடந்ததிலேயே ரொம்ப பிடிச்ச விஷயம், சிவகார்த்திகேயன் மேடைக்கு வரும்போது, ’ரெமோ’னு ரசிகர்கள் அழைத்தது தான். சிவகார்த்திகேயன் தான் ரெமோ. சின்ன வயதில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார். ஆனா உங்க படத்தோட இருமுகன் ரிலீஸாக கூடாது. நல்லவேளை உங்க படம் ரிலீஸாகும் போது என் படம் ரிலீஸாகவில்லை. சிவகார்த்திகேயன், நிவின்பாலிக்கு ஓ போடுங்க!’ என்று சிரிப்புடன் சொல்லி முடித்தார் விக்ரம்.

இருமுகன் டிரெய்லருக்கு:

அடுத்த கட்டுரைக்கு