Published:Updated:

‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்!

‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்!
‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்!
‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்!

சென்னை-28 டீமுடன் மீண்டும் இணைந்த சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அவருடனான சந்திப்பு என்பது  அவரது படத்தை போல கொண்டாட்டமானதாய் தான் இருக்கும். இதுவும் அப்படித்தான். 

சந்திப்பிலிருந்து..

யுவன் உங்களோட படங்கள்ல மட்டும் ரொம்ப ஸ்பெஷலான பாடல்கள் கொடுக்கறாரே, எப்படி அது?

இந்த மாதிரி வேணும்ப்பானு ஐடியா மட்டும் குடுத்துருவேன். அதுக்குப் பிறகு யுவனே பாத்துப்பாரு. . யுவன் இசையமைப்பாளர் ஆகறதுக்கு முன்னால, டெமோ ஆல்பம்ஸ் பண்ணிட்டிருந்த டைம்ல இருந்தே கூட சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற ஏழாவது படம் இது. சில சமயம் செல்லமா ஒரு கோவம் காட்டுவேன். இப்போ கிருஷ்ணா நடிக்கற 'யாக்கை' படத்துக்கு ஒரு பாட்டு போட்டு குடுத்திருக்கார். என்னால பொறுக்கவே முடியல, எப்படி அவ்வளோ நல்ல பாட்ட கிருஷ்ணாவுக்கு குடுத்த? ஒத்துக்கவே மாட்டேன்னு சண்டை போட்டேன். ஆனா, அதை எல்லாம் பீட் பண்ற மாதிரி சென்னை 28- 2ல பண்ணி சமாதனப்படுத்திட்டார்.  முதல் பாகத்தின் வெற்றிக்கு யுவனுடைய இசைக்கு முக்கியமான பங்கு இருக்கு. இந்தப் படத்தில் யுவன் ஃபேன்ஸுக்கு பெரிய ட்ரீட் இருக்கு. சென்னை 28க்கு எப்படி இறங்கி ஆடினீங்களோ இதிலும் இறங்கி ஆடுவீங்க. 

யுவன், பிரேம்ஜி, கெஸ்ட் ரோல்ல கூட ஜெய்னு ஒரே டீம்னு கம்ஃபர்ட்டா இருக்கீங்க, வெளிய வந்து புதுசா பண்ண விருப்பம் இல்லையா?

ஆசை இருக்கு. என்னோட கேமராமேன் எப்பவும் சக்தி சரவணன் தான். ஆனா, மாஸ்ல ஆர்.டி.ராஜசேகர் சார் பண்ணார். சென்னை 28 -2ல ராஜேஷ் யாதவ் பண்றார். டெக்னீஷியன் சைடுல இருந்து அந்த மாற்றத்தை பண்ண ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு இந்த டீம் நல்லா செட் ஆகிடுச்சு. எடிட்டர் பிரவீனுக்கும் சென்னை 28 தான் முதல் படம், மாஸ் அவருக்கு 50வது படம். ஆனா எனக்கு 6வது படம். நல்ல டீம் அமைஞ்சிட்டதால இவங்கள தவிர்க்க முடியல. ஆர்டிஸ்ட்கள  பார்த்தா மூணு படம் பசங்கள வெச்சுப் பண்ணேன். அப்பறம் மங்காத்தால அஜித் சார், அர்ஜுன் சார், பிரியாணில கார்த்தி, நாசர் சார், ராம்கி சார், மாஸ்ல சூர்யா சார், பார்த்திபன் சார்னு டோட்டலா மாத்தி வேலை செஞ்சிட்டேன். ஆனா, டெக்னீஷியன்கள்னு வரும் போது ஒரு கம்ஃபர்ட் வந்திடுச்சு. இத மாத்தணுமா என்ன?

உங்ககிட்ட இருந்து ரஞ்சித்க்கும் இந்தப் பழக்கம் ஒட்டிக்கிச்சு போல?

அது தெரியலங்க. சுத்தி நம்மளுக்கு தெரிஞ்சவங்க ஒர்க் பண்ணும் போது அது ஒரு தனி பலம் தரும். ஆனா, ஒரு கட்டத்தில் மாற்றம் வரும். இப்போ பிரேம்ஜி இல்லாம நான் ஒரு படம் எடுத்தாலே  வித்யாசமா ஒரு படம் எடுத்துட்டேன்னு சொல்லுவாங்க. ஆனா, பிரேம்ஜி மட்டும் தான் இருக்க மாட்டான். படம் அப்படியே தான் இருக்கும். பிரேம்ஜியோட வேவ் லென்த் எனக்குத் தெரியும். அது போல தான் மொத்த டீமும். யுவன், பிரேம்ஜி, காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி, எடிட்டர் பிரவீன் இவங்க நாலுபேர் மட்டும் தான் என் படத்தில் மாறவே இல்ல. இதில் மூனுபேர் சொந்தக்காரங்க, வீட்டுக்கு போனா பிரச்னை ஆயிடும்....

உங்க உதவி இயக்குநர்கள் நிறைய பேர் படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... அவங்களப் பத்தி?

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. சென்னை 28 -2 க்ளைமாக்ஸ்ல ஒரு பெரிய மேட்ச் சீக்குவன்ஸ் இருக்கு. அது ரொம்ப கஷ்டமான வேலைனு ஆரம்பிக்கும் போதே தெரியும். நாலஞ்சு கேமிரா, 5டி, ஹெலிகேம்னு பெரிய செட்டப்ல பண்ண வேண்டிய வேலை. எனக்கு என் பசங்க எல்லாம் வந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுச்சு.  "யாரெல்லாம் ஃப்ரீயா இருக்காங்களோ எல்லாரும் வாங்கடா"னு சொன்னேன். 'நவீன சரஸ்வதி சபதம்'  சந்த்ரு, 'வடகறி'  சரவணராஜன், 'நளனும் நந்தினியும்'  வெங்கடேஷ், 'கனிமொழி' ஸ்ரீபதி, என்னோட நண்பர் 'காவல்' நாகேந்திரன்னு நிறைய பேரக் கூப்பிட்டேன். ரஞ்சித்தும் வர்றதா சொல்லியிருந்தாரு. ஆனா, 'கபாலி' போஸ்ட் புரொடக்‌ஷன்ல செம டைட் ஆனதால வர முடியல. எல்லாருமே சென்னை 28ல ஒர்க் பண்ணவங்கதான். ரஞ்சித் எல்லாம் 'சென்னை 28'ல மேட்ச் நடக்கறப்போ கிரிக்கெட் விளையாடிட்டிருப்பாரு. இப்படி ஒரு செட் கிளம்பி வந்து அந்த சீன எடுக்க உதவி பண்ணாங்க. அந்த ஒரு குணம் இருக்குதுல்ல அது தான் நம்ம பசங்கன்றது. இப்ப நிறைய பேர் படம் பண்ணிட்டிருக்காங்க. 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' படம் பண்ண சக்தி என் அசிஸ்டென்ட் தான். 'கபாலி'லயே என்னுடைய மூனு அசிஸ்டென்ட்ஸ் இருக்காங்க, ரஞ்சித், கோ-டைரக்டர் சுரேஷ், விக்ரம்னு. ஒரு குறுகிய காலத்தில் என்கிட்ட இருந்த இத்தனை பேர் படம் பண்ணியிருக்காங்கனு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. இவங்கள வெச்சு ஈஸியா படம் பண்ணிடலாம். ’ப்ளாக்டிக்கெட்’ன்னு தயாரிப்பு நிறுவனம் வேற ஆரம்பிச்சிருக்கேன் அவங்க கிட்ட இருந்து டேட்ஸ் ஈஸியா வாங்கிக்கலாம். ஆளுக்கு ஒரு படம்னு அப்பிடியே ஜாலியா பண்ணலாம். 

திடீர்னு ஆன்மிகப் பயணம்  போனதா போட்டோஸ் பார்த்தோமே?

‘கொஞ்சம் நடிங்க பாஸ்!’ - பிரேம்ஜிக்கு வெங்கட்பிரபு அட்வைஸ்!

 லொக்கேஷன் பார்க்கப் போயிருந்த போது மதுரையில இருந்த கோயில் எல்லாத்துக்கும் போயிட்டு வந்தோம். எல்லாம் இந்தப் பிரேம்ஜி பண்ற வேலை தான். நாங்க அடிக்கடி கோயிலுக்குப் போவோம். ஆனா இவன் பார்ட்டிக்கு போகும் போது எடுத்த போட்டோவ போட்டு விட்டர்றான். இப்ப தான் கோவிலுக்குப் போற போட்டோவையும் போட ஆரம்பிச்சிருக்கான். எங்க டீம்ல எல்லாருக்குமே கடவுள் விஷயங்கள்ல அதிக ஈடுபாடு உண்டு. சமீபத்தில் பிரேம்ஜி, சிவா, அஜய் எல்லாம் சேர்ந்து காசிக்கு போயிட்டு வந்தாங்க. அதில ஒரு பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. என்ன ஏன் விட்டுட்டுப் போனீங்கனு வைபவ், நிதின் சத்யா எல்லாம் பேசறதே இல்லங்கற மாதிரி எல்லாம் சண்டை போயிட்டிருக்கு. கோயிலுக்கு விட்டுட்டுப் போனது இவளோ பெரிய பிரச்சனை ஆகியிருக்குனா நாங்க எவ்வளோ ஆன்மிக ஆர்வம் உள்ளவங்கனு நீங்க நோட் பண்ணனும்.

பாடகர், நடிகர்னு இரண்டு விஷயங்கள் பண்ணியிருக்கீங்க... அதைத் தொடர்ந்து பண்ணுறீங்களா?

சென்னை 28ல ஒரு குரூப் சாங்க்ல பாடகர் வெங்கட்பிரபுவ கேக்கலாம், நடிகர் வெங்கட்பிரபுவ மீரா கதிரவன் இயக்கியிருக்கும் 'விழித்திரு' படத்தில் பார்க்கலாம். தொடர்ந்து பண்றதில் ஒரு பிரச்சனை இருக்கு சார். மக்களுக்கு ஓரளவுக்கு துன்பம் கொடுத்தா போதும்னு நினைக்கறேன். எல்லா சைடுல இருந்தும் கொடுத்தா தாங்க மாட்டாங்க. எங்க குடும்பத்தில் நடிகனா பிரேம்ஜி மட்டும் போதும்.

அந்த நடிகருக்கு என்ன அட்வைஸ் கொடுக்கணும்னு நினைக்கறீங்க?

பிரேம்ஜிக்கு ஒரே அட்வைஸ் தான், நடிக்க ஆரம்பி. நிறைய படம் பண்ணிட்ட. இனிமேலும் நடிக்கலைனா ரொம்ப கஷ்டம். தயவு செஞ்சு கொஞ்சம் நடிங்க பாஸ்னு சொல்லுவேன். ஆனா, பிரேமே சரண்டர் ஆகிடுவான் எனக்கு இவ்வளோ தான் நடிக்க வருதுனு. 'மாஸ்'ல அவன நடிக்க வெக்கறதுக்காக ஒரு சீன் வெச்சிருந்தேன். அவனுடைய டெட் பாடிய அவனே பார்த்து ஃபீல் பண்ற மாதிரி. ஆனா, எனக்கு இவ்வளோ தான்டா வருதுனு சொல்லிட்டான். அதுக்குப் பிறகு சூர்யா சார்கிட்ட ' நீங்க கொஞ்சம் அட்ஜஸ் பண்ணுங்க'னு சொன்னதும் அவர் பின்னிட்டார். அவன் அப்பிடியே ஃபிக்ஸ் ஆகிட்டான் . கல்யாணம் பண்ணலாம்னா, அது நடக்கும் போது நடக்கட்டும்.. எனக்குனு ஒருத்தி எங்கயாவது பொறந்திருப்பானு சொல்லுறான். எப்பிடி வேணும்னு கேட்டா விளம்பரத்தில் காலைல காஃபி எல்லாம் போட்டு புருஷனை எழுப்பும்ல. அப்பிடி ஒரு பொண்ணு வேணும்னு சொல்லறான். அதுக்கு நீ விளம்பரத்தில் வர்ற புருஷன் மாதிரி இருக்கணும்ல இந்தப் படத்திலயே சில சீன்ல கலச்சிருக்கோம். கல்யாணம் பத்தி எதுவும் தெரியல... நல்லது நடக்கும். 

மொத்தமா நீங்க ஒரு ஜாலியான டீம், விளையாட்டுத்தனமாவே இருப்பீங்கனு ஒரு இமேஜ் இருக்கு. உண்மைதானா.. அது தப்புனு தோணியிருக்கா?

கடைசியா ரெண்டு படங்கள் நாங்க எந்த விளையாட்டுத்தனமும் இல்லாம சீரியஸா பண்ணோம். காரணம் அந்த விளையாட்டுத்தனத்துக்கு நேரமே இல்ல. மாஸ்ல எல்லாம் அவ்வளோ வேலை இருந்தது. டெக்னிகலா அது ரொமபவே உழைப்ப போட்டு எடுத்த படம். ஆனா, அது தப்புனு தோணினதில்ல. ஏன்னா எனக்கு எப்பவும் ஒரு வேலைய பிடிச்சு என்ஜாய் பண்ணி பண்ணதான் விருப்பம். ரொம்ப ஸ்ட்ரிக்டா எல்லாம் இருந்து நான் வேலை வாங்கறதுனா நடிக்கற மாதிரி இருக்கும். என்னால அது முடியாது. 

ரொம்பவே கஷ்டப்பட்டு எடுத்த 'மாஸ்'ல என்ன சறுக்கல்னு நினைக்கறீங்க?

என்கிட்ட எல்லாரும் கேட்கும் விஷயம் நீங்க சீரியஸான படம் பண்ண மாட்டீங்களானு. சரி ஓகே இந்த முறை சீரியஸா பண்ணுவோம்னு யோசிச்சது தான் 'மாஸ்'. ஆனா, கொஞ்சம் ஓவரா யோசிச்சிட்டேன்னு நினைக்கறேன். நம்மாளுங்களுக்கு அந்த மாதிரி யோசிச்சா பிடிக்க மாட்டேங்குது. ஒரு அப்பா பையன் கதை, அப்பா வந்து பையன விட இளமையா இருக்கணும். ஏன்னா, அப்பா இறக்கும் போது மகனை விட சின்ன வயசு. இறக்கும் போது அவர் ஆன்மா எப்படி இருந்ததோ அப்பிடியே தான். இருக்கும். அதுக்கு ஒரு சின்ன கதை வெச்சோம். ஒரு குட்டிப் பையன் ஆவியா இருப்பான். அவனுடைய கடைசி ஆசை என்னனு கேட்டா கேர்ள் ஃப்ரெண்டு கிட்ட லவ்வ சொல்லணும்னு சொல்வான். அவன் கேர்ள் ஃப்ரெண்ட்ட பார்த்தா 90 வயசு கிழவியா இருப்பாங்க. உயிரோட இருக்கவங்களுக்கு தான் வயசாகும்னு சொல்ல இந்த சீன்னு நிறைய யோசிச்சு எடுத்தேன். ஆனா, என்னடா கதை இது பேய் வந்து பழிவாங்குதாம். பேய்னாலே பழிவாங்க தான் வரும் இதில என்ன புதுசுனு ஆகிடுச்சு. நம்ம ஊர்ல பேய் படத்தையே இப்போ ஜாலி ஆக்கிட்டாங்க. பேய் வந்து  சிரிக்க வைக்கும்னு காமெடியாகிடுச்சு. டபுள் ஆக்‌ஷன் கதை, ரொம்ப யோசிச்சு, ரொம்ப மெனக்கெட்டு எடுத்த படம் மாஸ் தான். நான் யோசிச்சது மக்களுக்கு போய் சேரலையா புடிக்கலையானு தெரியல. சரோஜா படத்தை நான் பயங்கர த்ரில்லரா தான் ஆரம்பிச்சேன். ஆனா முடியும் போது அது காமெடித் த்ரில்லரா முடிஞ்சு போச்சு, நல்லாவும் போனுச்சு. நான் சீரியஸ் படம் பண்ணாலும் அதில் ஜாலிய எதிர்பாக்கறாங்கனு தெளிவா புரிஞ்சிடுச்சு. அதனால அந்த மாதிரி படங்களையே கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதனால இனிமே ரொம்ப பெருசா யோசிக்கறதா இல்ல.

சின்ன படமா இருந்தாலும் சரி, கபாலி மாதிரி பெரிய படமா இருந்தாலும் சரி, சவால் விட்டு இணையத்தில் வெளியிடும் நிலை வந்திருச்சு... இந்த நிலைய மாத்த முடியாதா?

அரசாங்கம் நினைச்சா பண்ணலாம். சைனா போனீங்கனா ஃபேஸ்புக் கிடையாது, அவங்களே அதுக்கு சமமான ஒரு விஷயத்தை உருவாக்கி பயன்படுத்திட்டிருக்காங்க.  இப்பிடி ஒரு அரசாங்கம் உதவி பண்ணா கண்டிப்பா பண்ண முடியும்னு நினைக்கறேன். அதுக்கான நடவடிக்கைகளும் எடுத்திட்டிருக்காங்க. இதெல்லாம் தாண்டி நம்ம வீட்டுக்கு ஒரு பொருள் வாங்கினா டூப்ளிகேட் வாங்கறதில்ல, ஒரிஜினலானத வாங்கறோம். எண்டர்டெயின்மென்ட்லயும் ஒரிஜினலானத தேர்ந்தெடுத்தா நல்லா இருக்கும். 

வீட்ல புதுசா ஒரு நபர் வந்திருக்காங்களே... ஸியா என்ன சொல்றாங்க?

யுவன் பொண்ணு ஸியா தான் இப்போ வீட்ல ஸ்டார் அட்ராக்‌ஷன். சென்னை 28 ரெக்கார்டிங்க ஸியா வந்து பார்த்தாங்க. எங்க படத்தில் அவங்கள சிங்கரா அறிமுகப்படுத்தினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்ல.. பொறந்து மூணு மாசம் தான் ஆகுது. 

-பா. ஜான்சன்