தனி ஒருவன்.. தனி ஒருவனா? #1YearBlockBusterOfThaniOruvan

 

படம் வந்து கரெக்டா ஒரு வருஷம் ஆச்சு. ஒரு படம் ஏன் ஹிட்டாகுதுன்னு ஃபார்மூலா தெரிஞ்ச ஒருத்தன் இருந்தா, இன்னைய தேதிக்கு மணிக்கு ஒரு கோடிரூவா கூட அவனுக்கு சம்பளம் கொடுத்து வெச்சுக்குவாங்க. அரைச்ச மாவையே அரச்ச படங்கள் ஹிட்டாகறதும், அன்பே சிவம் மாதிரி படங்கள் ஓடாம இருக்கறதும் எல்லாமே இங்கதான்.

சரி. தனி ஒருவன் எதுனால மக்களைக் கவர்ந்ததுன்னு  யோசிச்சதுல ஒரு சில பாய்ண்ட்ஸ் தோணிச்சு:
 

# தம்பி ராமையா நடிப்பு. பண்றதெல்லாம் பையன்னு ஸ்கிரீன்ல இருக்கறவங்களுக்கு தெரியாது, ஆனா பார்வையாளர்களுக்கு தெரியும். ரெண்டையும் மேனேஜ் பண்ணி அழகா நடிச்சிருந்தார்.

# பாட்டு. வந்ததுமே கவனிக்க வெச்ச ட்யூன்ஸ். ஹிப்ஹாப் தமிழா ஆல்பத்துல இளசுகளுக்கு பழக்கமானவரா இருந்தாலும், இதான் அவரை அடையாளப்படுத்திய சினிமா ஆல்பம்னு சொல்லலாம். அதும் 'தீமைதான் வெல்லும்' - அந்த ஆரம்பமே 'என்னடா இப்டிச் சொல்றாங்க'ன்னு கவனத்தை ஈர்த்து ஹிட்டடிச்சது. 

# கதை / ஸ்கிரீன்ப்ளே. ஆரம்பத்துல தம்பி ராமையா தயங்கறப்ப நாம எதிர்பார்க்காத விதமா அவர் பையன் வந்து நின்னு பேசறதுல ஆரம்பிச்சு, கடைசி காட்சி வரை நேர்த்தியான திரைக்கதை. 

# லொகேஷன்ஸ். 'கண்ணால கண்ணால' பாட்டை நெனைச்சாலே அந்த ஸ்பாட் ஞாபகம் வருதா? யெஸ். ஒரு படத்தோட லொகேஷன்ஸ் நம்ம மைண்ட்ல பச்சக்னு ஒட்டணும். இந்தப் படத்துல அது அமைஞ்சது. திரைல பார்க்கறப்ப ஒரு pleasant feel இருக்கணும். வில்லன் வீடு, ஹீரோ கேம்ப் போற இடங்கள், பாடல் லொகேஷன்ஸ்ன்னு எல்லாமே வெரிகுட் இதுல.

# ஸ்பெஷல் சீன். ஒரு படம் ஹிட்டாக இருக்கற எல்லா காட்சிகளுமே மனசுல பதியணும், கைதட்டல் வாங்கணும்னா அதுக்கான வாய்ப்புகள் 0.01% கூட இருக்காது. ஒருத்தனுக்கு லவ் சீன் பிடிச்சா, இன்னொருத்தனுக்கு ரிவெஞ்ச் சீன் பிடிக்கலாம். அடுத்தவனுக்கு ஃபைட் பிடிக்கலாம். ஆக,ஒவ்வொரு வகை ரசிகனுக்கும் பிடிக்கற மாதிரி ஏதோ ஒரு காட்சியாவது இருக்கணும். அதையும் தாண்டி, எல்லா வகை ரசிகர்களுகும் பிடிக்கற மாதிரி ஒரே ஒரு காட்சி அமைஞ்சுட்டா அது ஷ்யூர் ஹிட். இதுல நயன்தாரா கிட்ட ஜெயம்ரவி லவ் சொல்ற காட்சி அப்படி எல்லாருக்கும் பிடிச்சதா அமைஞ்சது!

# வசனங்கள். ரொமாண்டிக்கா காதலையும் பேசியது, சீரியஸா நாட்டு நடப்பையும் பேசியது வசனங்கள். அதுவும் அந்த ' மொதல் பக்க செய்திக்கும் 11ம் பக்க செய்திக்கும் உள்ள தொடர்பை கவனிக்கணும்' மறக்க முடியுமா! 

# நயன்! அவ்ளோ அழகு + நடிப்பு. நயனோட கரியர்ல வெறும் அழகுப்பதுமையா மட்டும் வந்து போகாம நடிப்பும் பேசப்பட்ட படம்னு லிஸ்ட் போட்டா தனி ஒருவனுக்கு தனி இடம் உண்டு.

#ஜெயம் ரவி. அலட்டிக்காம நடிக்கணும், தனக்கு இணையா இன்னொரு கேரக்டர் இருக்கு.. அந்த கேரக்டரை ஜெயிக்கணும். இந்த சவாலை சரியா செஞ்சிருந்தார்.

இவ்ளோலாம் சொல்லிட்டு, கடைசியா படத்தோட வெற்றிக்குக்கான அந்த ஸ்பெஷல் காரணத்தை சொல்லாம விட்டா, விட்டுடுவீங்களா! ஆம்.. தனி ஒருவனின் தனி ஒருவன். அரவிந்த்சாமி! 

-பரிசல் கிருஷ்ணா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!