Published:Updated:

அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha

அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha
அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha

அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha

அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha

2011.. ஆகஸ்ட் 31.

தமிழ் சினிமாவின் முக்கியமான நாள். அஜித்குமாரின் 50வது படம் வெளியான நாள். ஆனால், அது தமிழ் சினிமாவுக்கு முக்கியமானதாக ஆனதற்கு வேறு காரணம் உண்டு.

அதுவரை சூப்பர்ஸ்டார்களின் படங்கள் 300--400 தியேட்டர் வரையே வெளியாகும். அதிகபட்சமாக  சிவாஜியோ, எந்திரனோ வெளியாகி இருக்கலாம். அதைத் தாண்டி பார்க்கும் எல்லா இடங்களிலும் ஒரு படம் வெளியானது என்றால் அது மங்காத்தாதான். Extended week end என சொல்லப்படும் வார இறுதியோடு வரும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி 4,5 நாட்களில் கோடிகளை அள்ளும் முறை மங்காத்தா மூலமே கோடம்பாக்கத்துக்கு வந்தது. மங்காத்தாவோடு ஆர்.கே நடித்த படம் ஒன்று வெளியானது. அந்த தியேட்டர்களிலும் இரண்டாவது காட்சியில் இருந்தே மங்காத்தா திரையிடப்பட்டது. Power of Ajith.

இந்த சினிமா கிம்மிக்ஸ் எல்லாம் தாண்டி மங்காத்தாவின் மாபெரும் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு, அவை எல்லாமே தல என்ற ஒற்றை சொல்லுக்கு அடுத்த வரிசை காரணங்கள் தான்!

அஜித்தின் 50வது படம். தமிழ் சினிமாவில் மைல்ஸ்டோன் படங்கள் அதிகம் வெற்றி அடைந்ததில்லை. ரஜினியின் 100வது படம், கமலின் 100வது, விஜயின் 50வது படம் என வரிசையாக பட்டியிலிடலாம். அதில் தப்பித்தவர் கேப்டன் மட்டுமே. அவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் அதிரடி ஹிட். அதை முறியடித்தது மங்காத்தா. மைல்ஸ்டோன் படங்களில் தெறி ஹிட் என்றால் மங்காத்தாடா தான்.

அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha


அஜித்தின் ரசிகர்கள் என்றால் ஒரு தனி கெத்து என்பார்கள். திரையில் மட்டுமே போற்றப்படும் பிம்பம் அல்ல ’தல’. அந்த கெத்தை சினிமாவில் பல படங்களில் காட்டியிருந்தாலும், மங்காத்தா அதில் டாப். அது சரியா, தவறா என்ற கேள்விக்குள் போகாமல், ஒரு ரசிகனின் பார்வையில் பார்த்தால், மங்காத்தா ஒவ்வொரு தல ரசிகனுக்கும் ஆயிரம் லிட்டர் அட்ரீனலின் பம்ப் செய்தது.


வெங்கட்பிரபுவே ஒரு தல ரசிகர்தான்.மங்காத்தாவை பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். திரைக்கதையில் குழப்பம் என வந்த சில நெகட்டிவ் விமர்சனங்களையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற முக்கிய காரணம் தலையை அவர் காட்டிய விதம்


சால்ட் & பெப்பர் லுக். இமேஜை தட்டியெறிந்து தமிழில் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மங்காத்தாவில் அஜித் செய்தது உச்சம். நல்லவந்தான் ஹீரோ, அழகுதான் முக்கியம் என எல்லா டெம்ப்ளேட்களையும் தூக்கியெறிந்துவிட்டு நின்றார். அப்படியும் அவர் ஸ்மார்ட்டாக இருந்தார் என்பது வேறு விஷயம்


யுவன். தமிழ் சினிமாவின் சிறந்த தீம் ம்யூசிக் என்றால் அது மங்காத்தாதான்.(சிலர் பில்லா என சொல்லலாம்). Slow tempoவில் கொல குத்து குத்தும் அந்த பீட்டை மறக்க முடியுமா? “அம்பானி பரம்பரை”யை ஆடாம கேட்க முடியுமா? “என் நண்பனை” கலங்காமல் ரசிக்க முடியுமா? யுவனின் பிறந்த நாளும் இன்று என்பதால் அவருக்கு லைஃப்டைம் படம் மங்காத்தா.


பணம். அந்தந்த காலத்து மக்களின் மனநிலையை சினிமாவில் காட்டி வெற்றியடைந்த வரலாறு பல உண்டு. இன்று எல்லோருக்கும் தேவை பணம். அது எந்த வழியிலாவது வந்தால் போதும் என நினைக்கிறார்கள் என்பதுதான் சோகமான உண்மை. அதை சரியாக பிடித்து கதை அமைத்திருந்தார் வெங்கட்பிரபு.

Casting. அர்ஜூன்,த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்,பிரேம்ஜி, வைபவ் என நட்சத்திர கூட்டம் அதிகம். ஆனால் அவரவருக்கான முக்கியத்துவம் சரியாக இருந்தது.

அஜித்தின் பாட்ஷா #5YearsOfMankatha


இனிமேல அஜித்துக்கு பல ஹிட் படங்கள் வரலாம். அதற்கு முன் வந்திருக்கலாம். ஆனால், மங்காத்தா தல ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அஜித்தின் பாட்ஷா என்று கூட சொல்லலாம்.


-கார்க்கிபவா

அடுத்த கட்டுரைக்கு