மிஸ்டர் மியாவ்: நடிகர் சங்கத்துக்கு ஒரு டி.வி.

விஷாலுக்குச் சொன்ன கதையை ஆர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கியதால், இயக்குநர் பூபதி பாண்டியனை மானாவாரியாகத் திட்டித் தீர்த்தார், விஷாலின் அண்ணியார் ஸ்ரேயா ரெட்டி. இப்போது அதே பூபதிதான் விஷாலின் அடுத்தபட டைரக்டர். டைட்டில் 'பட்டத்து யானை’.


கருணாநிதியின் பேரன்
##~## |

மகன் ஸ்ரீகாந்த்துக்கு இசைப் போட்டியாக அப்பா களமிறங்கி இருக்கிறார். 'கானா திலகம்’ தேவா கையில் இப்போது நான்கு படங்கள் இருக்கிறதாம்.

கோணியில் கோடிகளைக் கட்டிய 'சிறுத்தை’ இயக்குநர் சிவாவுக்கு, கோலிவுட்டில் வரவேற்பு நஹி. அதனால் ரவிதேஜாவை ஹீரோவாக்க ஹைதராபாத் பறந்து விட்டார்.

அம்மாவின் அனுக்கிரகம் நடிகர் சங்கத்துக்கு அதிகமாக இருக்கிறதாம். அதனால் அ.தி.மு.க. ஆதரவோடு தனிச் சேனல் தொடங்கும் தடாலடி வேலையில் சரத்குமார், ராதாரவி இறங்கி இருக்கிறார்கள்.

'மைனா’ பாடல்கள் விமானத்தைத் தாண்டி ஆகாசத்தை உரசியது. அதனால் பிரபுசாலமன், அடுத்த படத்துக்கும் இசையமைப்பாளர் இமானையே ஒப்பந்தம் செய்து விட்டார்.



பூஜை மட்டும் போடப்பட்ட பிரமாண்ட படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடப்பது கானல் நீர்தான். இதுவரை செலவான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் மீட்டுவிட முயற்சி செய்கிறதாம், தயாரிப்புத் தரப்பு.



ஹீரோவாக நடிக்கும் வாரிசு, அரசு இடத்தில் நடத்தவேண்டிய கன்டியூனிட்டி ஷாட் எடுக்க முடியாமல் அவஸ்தைப் படுகிறாராம். உதவி செய்யவேண்டிய அதிகாரிகளோ, முகம் திருப்பி நிற்கிறார்களாம்.