Published:Updated:

இந்தப் படத்தை ஏன் மிஸ் பண்ணக் கூடாது தெரியுமா? #DontBreathe படம் எப்படி?

இந்தப் படத்தை ஏன் மிஸ் பண்ணக் கூடாது தெரியுமா? #DontBreathe படம் எப்படி?
இந்தப் படத்தை ஏன் மிஸ் பண்ணக் கூடாது தெரியுமா? #DontBreathe படம் எப்படி?

இந்தப் படத்தை ஏன் மிஸ் பண்ணக் கூடாது தெரியுமா? #DontBreathe படம் எப்படி?

அலெக்ஸ், மணி, ராக்கி(ஹீரோயின்ப்பா) மூவருமே வீடுகளில் நுழைந்து பொருட்களை திருடும் கன்னித் திருடர்கள் (வடிவேலு மாதிரி இல்லைங்க). பெரிய அமெளண்ட்டாக அடித்துவிட்டு செட்டில் ஆகலாம் என முடிவெடுக்கிறார்கள்.அதற்காக கண் பார்வையற்ற ஒரு முதியவர் வீட்டினுள் நுழைகிறார்கள்.அடுத்து நடக்கும் ஒவ்வொரு காட்சியும் ஹாரர் ரசிகர்களுக்கு தெறி தான்.

'இது தான் க்ளைமேக்ஸ் பார்த்துக்கோ' என கெத்தாக படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் அல்வரெஸ்(ஹாலிவுட் எஸ்.ஜே.சூர்யா). அது வெறும் 20 நொடி காட்சிகள்.தொடர்ந்து, பாப்கார்ன் வாங்குபவர்கள் எல்லாம் வாங்கிவிட்டு வாருங்கள் என்பது போல், 20 நிமிடங்கள் மெதுவாக நகர்கிறது. அதற்குப்பிறகு ஒரு ஹாரர் படத்துக்கான மொத்த ஜீவனையும் வைத்து சிக்ஸர் அடித்து இருக்கிறார் அல்வரெஸ்.

ஹாரர் படம் என்றாலே, ஒரு வீட்டுக்குள் ஒரு கும்பல் சிக்கிக்கொள்வது. அங்கு இவர்களைவிட சூப்பர்நேச்சுரல் சக்திகள் அல்லது பவர்ஃபுல் வில்லன் இருப்பான்.ஆனால், இதில் இருப்பதோ ஒரு வயதான கண் பார்வையற்ற நபர்.அட என, இந்தியன் தாத்தாவைப் பார்த்த டிராஃபிக் போலீஸ் போல  கேசுவலாக இருந்தால்,ஒவ்வொரு ஃபிரேமும் பின்னுகிறது. ஹாரர் என்ற பெயரில் saw, ஹாஸ்டல், ராங் டர்ன் மாதிரியான காட்சிகளும் பெரிதாக இல்லை.ஆனால், க்ரிஸ்ப்பான கதை எல்லாவற்றையும் கடந்து ஸ்கோர் செய்கிறது. Unique.

வீட்டில் நடக்கும் காட்சிகளின் வசனங்களை ட்விட்டில் எழுதிடலாம்..ஆனால், இருளும்,கண் தெரியாத நபரின் கண்களும்,ராக்கியின் கண்களும் அவ்வளவு பேசுகின்றன.ஒவ்வொருவரின் பார்வையிலும் நகரும் கேமராக்கோணங்களில் அப்லாஸ் அள்ளுகிறார் கேமராமேன் பெட்ரோ லூக். படத்தின் அடுத்த பிளஸ் ரோக் பனோஸின் இசை. அலறல் சத்தங்கள் எதுவும் இல்லாமலே, இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்து அல்லு கிளப்புகிறது. 

ஒவ்வொரு காட்சியிலும் வில்லனின் புத்திசாலித்தனம் மேலோங்கி இருப்பது படத்தை அடுத்த சர்ப்ரைஸ் நோக்கி இழுத்துச் செல்கிறது.ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என செல்லும் கதையில், அட இப்படி ஒரு காட்சியா என ஜெர்க் ஆனால், 'அட, தெரிந்து தான் வைத்தேன். பலர் இதை விரும்புவார்கள் ' என அசால்ட்டாக அந்த எதிர்வினைகளை கடந்து செல்கிறார் அல்வரெஸ். 

படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு இணையாக போட்டிப் போட்டு நாயும் குரைத்து இருக்கிறது.படத்தின் இறுதியில் வரும் டைட்டில் பார்த்தால், நாயாக ஆஸ்தோஸ்,ஆஸ்டர்,நோமேட் என மூன்று நாய்கள் நடித்து இருக்கின்றன. ஆஸ்காரில் நாமினேட் ஆக முடியாவிட்டாலும், வாழ்த்துக்கள் சகோஸ்.

அமெரிக்காவில் கடந்த வார வெளியான படம் , பட்ஜெட்டை விட நான்கு மடங்கு வசூலை அள்ளியிருக்கிறது. ஒரு பெர்ஃபெக்ட்டான ஹாரர் படம் பாஸ் டோன்ட் மிஸ். ட்ரெய்லரை பார்த்துட்டு டிக்கெட்ட புக் பண்ணிடுங்க. இல்லைன்னா, கோலிவுட் வெர்ஷன் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. நம்ம கணிப்புப்படி சத்யராஜ வைச்சு புதுமுட டைரக்டர் இயக்குவார். 

அடுத்த கட்டுரைக்கு