Published:Updated:

ஜனதா கேரேஜு’க்கு வண்டியை விடலாமா? #JanathaGarage படம் எப்படி?

ஜனதா கேரேஜு’க்கு வண்டியை விடலாமா? #JanathaGarage படம் எப்படி?
ஜனதா கேரேஜு’க்கு வண்டியை விடலாமா? #JanathaGarage படம் எப்படி?
ஜனதா கேரேஜு’க்கு வண்டியை விடலாமா? #JanathaGarage படம் எப்படி?


ஆந்திரா பாக்ஸ் ஆஃபிஸை அலற வைக்கும் கெத்து சிலருக்குத்தான். அந்த மோசமானவங்கள்ல முக்கியமானவர் ஜூனியர் என்.டி.ஆர். பிரபாஸுடன் ’மிர்ச்சி’, மகேஷ்பாபுவுடன் 'ஸ்ரீமந்துடு' படங்களுக்குப் பிறகு கொரட்டல சிவா இயக்கும் படம், மோகன் லால் - ஜூனியர் என்.டி.ஆர் காம்போ என நிறைய எதிர்பார்ப்புகள் 'ஜனதா கேரேஜ்' மீது. படம் எப்படி?

ஹைதரபாத்தில் ’ஜனதா கேரேஜ்’ வைத்து நடத்துபவர் சத்யம் (மோகன்லால்). யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் தன் 'ஜனதா கேரேஜ்' டீம் மூலம் தட்டிக் கேட்டு தீர்த்து வைக்கும் நல்ல தாதா. அதன் மூலம் வரும் பகை அவர் தம்பியையும் (ரஹ்மான்), தம்பி மனைவியையும் காவு வாங்குகிறது. அதனால் தம்பியின் மகனை உறவினர்களிடம் கொடுத்து மும்பைக்கு அனுப்புகிறார். அந்த சிறுவன்தான் ஜூனியர் என்.டி.ஆர். மோகன்லாலுக்கு மனிதர்கள் மேல் பிரியம் இருப்பது போல என்.டி.ஆருக்கு இயற்கை மேல் காதல். மரம், செடி, கொடி, காற்று என எதற்கு பிரச்சனை வந்தாலும் தட்டிக் கேட்கிறார். படிப்பு விஷயமாக ஹைதராபாத் வருகிறார் இயற்கை காதலன். தாதா யாவாரத்தில் இருந்து ரிட்டயர்ட் ஆகவேண்டி நிலையில் இருக்கும் மோகன்லாலுக்கு என்.டி.ஆரைப் பார்த்ததும் தனக்குப் பிறகு மக்களுக்கு சேவை செய்ய பொருத்தமான ஆள் இவன் தான் என முடிவு செய்கிறார். என்.டி.ஆரும் ஜனதா கேரேஜுக்குள் என்ட்ரி ஆகிறார். அதன் பின் நடக்கும் அடிதடி மேளா, சென்டிமெண்ட், துரோகம், சுமாரான க்ளைமாக்ஸ் என 'தி எண்டு' கார்டு போட்டு   படம் முடிகிறது. 

ஆந்திரா மெஸ்ஸில் சுவை என்றாவது மாறியிருக்கிறதா? இதிலும் அதேதான். மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் என இருவருக்கும் சமமான ஸ்பேஸ் கொடுத்தது, இருவரின் கதாப்பாத்திரங்களுக்கான அழுத்தம் சேர்த்தது, அந்த ஃப்ளோவிலேயே கதையை சொன்ன விதம் என கவனிக்க வைக்கிறார் இயக்குநர் கொரட்டல சிவா. ”அவன் உஜாலாவவிட நீலமானவன், இராமஸ்வரத்தில் பாலமானவன், 32 புள்ளி கோலமானவன், உலகத்தைவிட உருண்டையானவன்”னு எந்த ஓவர் டோஸும் இல்லாமல் இயல்பான வசனங்களையே எல்லோரையும் பேச வைத்ததற்காக ஸ்பெஷல் நன்றிகள். குறிப்பாக இடைவேளைக்கு முன் லாலும் என்.டி.ஆரும் பேசிக்கொள்ளும் காட்சி செம க்ரிஸ்ப். பெர்ஃபாமென்ஸிலும் யாரும் ஏமாற்றவில்லை. உன்னி முகுந்தன், சாய்குமார், தேவயானி, சுரேஷ், சித்தாரா, வில்லனாக சச்சின் கேடக்கர் என எல்லோரின் நடிப்பு சிறப்பு. மோகன்லாலின் டப்பிங் வாய்ஸ் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை என்பதுதான் உறுத்தல்.


இயக்குநர் கொரட்டல சிவாவுக்கு பொழுதுபோக்கே விஜய் படங்கள் பார்ப்பதுதான் போல. குறிப்பாக தலைவா, ஜில்லா (மோகன்லால் இருப்பதால் கூட இருக்கலாம்). பாம் ப்ளாஸ்ட் சீனுக்குப் பிறகு அதுவரை படம் தேக்கி வைத்த மொத்த வைப்ரேட் மோடும் வீணாகி மிக வீக்கான க்ளைமாக்ஸை நோக்கி நடக்கத் தொடங்குகிறது. ஆந்திரா மீல்ஸ் முடியும்போது கிடைக்கும் தயிர் சர்க்கரையில் உப்பை போட்டது போல ஆகிவிட்டது.. சமந்தா, நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் யாரும் மனதில் நிற்கவில்லை. ஜனதா கேரேஜா, சமந்தாவா என்ற நிலையில் என்.டி.ஆர் எடுக்கும் முடிவும் அதற்கு சொல்லும் சமாளிப்புகளும் முடியல சாமி....

திருநாவுக்கரசின் கேமிரா செம. ஹைதராபாத் கேரேஜ் காட்சிகள் முழுக்க ஒரு ஹார்டான டோன், மும்பையில் ஒரு ஃப்ரெஷ் லுக் என இரண்டையும் அழகாக காட்டியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் ‘லெஜெண்ட்’ ஆக வேண்டிய நேரம். காஜல் ஆடும் ஐட்டம் சாங்கைத் தவிர எதுவும் ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் மட்டும் மாஸ் காட்டுகிறார். 

ஜனதா கேரேஜை வேறு கேரேஜில் கொடுத்து இன்னும் கொஞ்சம் ரிப்பேர் பார்த்து இறக்கியிருக்கலாம்.

ப்ளஸ்:

* திருநாவுக்கரசின் கேமிரா + பேக்ரவுண்டு ஸ்கோர்.
* மோகன்லால், என்.டி.அர் சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் மற்றும் மொத்த ஸ்டார் காஸ்டிங்.
* கொரட்டல சிவாவின் சிம்பிள் டயலாக்ஸ்

மைனஸ்: 

* ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது. (ஆமா ஆமா ஆமா)
* கடைசி 20 -25 நிமிடங்கள் படம் டல் ,மிக வீக்கான க்ளைமாக்ஸ்

டிரெய்லருக்கு:-