Published:Updated:

அஜீத், விஜய், சிம்பு, விஷால்...? What's next?

அஜீத், விஜய், சிம்பு, விஷால்...? What's next?
அஜீத், விஜய், சிம்பு, விஷால்...? What's next?

'சினிமாவில் சான்ஸ் இல்லையா? உடனே வாங்க அரசியலுக்கு, இந்த ஆஃபர் தேர்தல் முடியுறவரை மட்டும்தான்' - கோடம்பாக்க காற்றில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. ஒருவேளை நம் பிரபலங்கள் சினிமாவில் ரிட்டையர்ட் ஆன பிறகு, அரசியலுக்கு செல்லாமல் 'டேக் டைவர்ஷன்' என வேறு வேறு களங்களில் நுழைந்தால்? யாருக்கு என்ன பொருத்தமாக இருக்கும் என்ற ஜாலி கற்பனை இது.  

தல:

தல ஒருவேளை சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருக்கு எக்கச்சக்க ஆப்ஷன்கள் இருக்கின்றன. வைகோவிற்கு போட்டியாய் ஆல் ஓவர் வேர்ல்டில் தல மட்டுமே நடை போடுவதால் பிட்னஸ் ட்ரெய்னர் ஆகிவிடலாம். 'மைல்ஸ் டு கோ' என்ற தன்னம்பிக்கை வார்த்தையை கண்டுபிடித்தவரே தல தான் என ட்ரெண்டாகும். இல்லையென்றால் வளரும் கலைஞர்களுக்கு போட்டோக்ராபி கற்றுத் தந்து அதை எப்படி சமூக வலைதளங்களில் பேமஸாக்குவது என்ற டிப்ஸையும் சொல்லித் தரலாம்.

தளபதி:

கில்லி, குருவி, சுறா, அழகிய தமிழ்மகன் என எக்கச்சக்க படங்களில் அத்லெட்டாக நடித்திருப்பதால் 'ஒலிம்பிக் பயிற்சி மையம்' ஒன்றை தொடங்கலாம். அதில் அல்ட்டிமேட் லாங் ஜம்ப், டால்பின் டைவ்  உள்ளிட்ட ஸ்பெஷாலிட்டி ஸ்போர்ட்ஸ்களை சொல்லித் தரலாம். தங்க மெடல் வாங்கும் ஒவ்வொரு இந்திய வீரரும் சிலிர்த்து போய் 'எல்லாப் புகழும் அண்ணா ஒருவருக்கே' என ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள்.

சிம்பு:

தமிழ் சினிமா வரலாற்றிலேயே கமிட்மென்ட்டின் பிறப்பிடம் சிம்புதான் என்பதால் அவரை ஈவன்ட் ஆர்கனைஸராக நியமிக்கலாம். பங்க்ச்சுவலாய் வருவது, சட்சட்டென வேலைகளை செய்வது, மின்னல் வேகத்தில் முடிப்பது உள்ளிட்டவை சிம்பு ஸ்பெஷல். முதல்கட்டமாக கட்சி பொதுக்கூட்டங்கள், பிறந்தநாள் பார்ட்டிகள் போன்றவற்றை வெற்றிகரமாக முடித்தால் அடுத்த வெள்ளை மாளிகையின் ஈவன்ட் ஆர்கனைஸராக ஆகவும் வாய்ப்புண்டு.

விமல்:

பில்லியன் டாலர்கள் செலவழிக்கும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் கூட வாரம் ஒரு ப்ராஜக்ட்டை முடிக்க முடியாது. ஆனால் விமல் சினிமாவில் இருந்த காலத்தில் வாரச்சந்தை போல வாரம் ஒரு படம் ரிலீஸ் செய்ததால் அவரை ப்ராஜக்ட் மேனேஜராக நியமிக்கலாம். ஆனால் அதில் ஒரு சின்ன டிஸ்க்ளைமர் - ப்ராஜக்ட் குறித்த நேரத்தில் டெலிவரி ஆகிவிடும்தான். ஆனால் அது சக்ஸஸா ஃபெயிலியரா என்பதெல்லாம் அந்தந்த க்ளையன்ட்களின் தலைஎழுத்து.


விஷால்:

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். புரட்சித் தளபதி கால் பதித்து ரவுடிகளை வேட்டையாடாத ஒரே இடம் வீனஸ் கிரகம்தான் என்பதால் பழுத்த அனுபவம் வாய்ந்த அவர் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தலாம். பான்பராக் ரவியை அடி வெளுத்த இடம், கேங்க்ஸ்டர் டோனி லீயை தொங்கவிட்ட இடம் என விஷால் லேண்ட்மார்க்களை சுற்றிக் காட்டலாம். ஆடித் தள்ளுபடிக்கு ப்ளைட் டீல் போடுவது போல சுமோ டீல் போடலாம். 

பிரேம்ஜி:

தமிழ் சினிமாவின் நடிப்பு வித்தகர் பிரேம்ஜி ரிட்டையர்ட் ஆனபிறகு 'ஆக்டிங் ஸ்கூல்' ஒன்றை நடத்தலாம். ஒரே ரியாக்‌ஷனில் ஒன்பது எமோஷன்களையும் எப்படிக் காட்டுவது என்ற வித்தை உலகிலேயே அந்த ஒரு ஸ்கூலில் மட்டும்தான் சொல்லித் தரப்படும். சிம்பு இரண்டு கோர்ஸ்கள் மட்டுமே முடித்திருந்த விரல் வித்தையில் பிரேம்ஜி இருபது கோர்ஸ்கள் முடித்திருப்பதால் 'பிங்கர் டான்ஸ்' சொல்லித் தரலாம்.

சந்தானம்:

நவீன தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவி செய்ததில் சந்தானத்திற்கு முக்கிய பங்குண்டு. 'அகாதுகா', மங்கூஸ் மண்டை' என சங்க கால இலக்கிய வார்த்தைகளை எளியவர்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததால் அவர் செம்மொழி ஆராய்ச்சியாளராக வேலை செய்யலாம். 'லார்ட் மெக்காலேயும் மெட்ராஸ் தமிழும்', 'கானாவும் நானும்' போன்ற நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. உங்கள் சேவை தமிழுக்கு தேவை!

-நித்திஷ்


 

அடுத்த கட்டுரைக்கு