பவர் பாண்டி ஆனார் மாயாண்டி! அப்பாவின் ஹீரோவை இயக்கும் தனுஷ் #PowerPaandi

 


கோடம்பாக்கத்தின் எக்ஸ்டென்ஷன் ரோடு வரைக்கும் எதிரொலிக்கும் பெயர் தனுஷ். ரஜினி படத்தின் தயாரிப்பாளர், வெற்றி மாறனின் ட்ரீம் புராஜெக்ட் ஹீரோ, இந்தி, ஹாலிவுட் என கைவசம் ஐந்துக்கு மேற்பட்ட படங்கள்.. இவ்ளோ பிஸி கூடாதுப்பா என கண் வைத்தவர்கள் காலடியில் கன்னிவெடி வைத்திருக்கிறார் தனுஷ்... அவரின் அடுத்த அவதாரம் இயக்குநர்.


1991 ஆம் ஆண்டு தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ராஜ்கிரண் நடிப்பில் என் ராசாவின் மனசிலே படம் மூலம் தான் இயக்குநர் ஆனார். இன்று அதே ராஜ்கிரனை இயக்கி இயக்குநர் ஆகிறார் தனுஷ். படத்தின் பெயர் பவர் பாண்டி.


ஏகப்பட்ட ஆச்சர்யங்கள். தனுஷ் இயக்கும் படத்தில் அனிருத் இல்லை. இசை ஷான் ரோல்டன். மாரி , செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் எடிட்டர் பிரசன்னா படத்தில் எடிட்டராக பணிபுரிகிறார்.அண்ணன் செல்வராகவின் பங்களிப்பு இருப்பதாக போஸ்டரில் தகவல்கள் இல்லை. ஆனால் பாடல்கள் லிஸ்ட்டில் கஸ்தூரிராஜா பெயர் இருக்கிறது. 


ஃப்ரஸ்ட் லுக்கை பார்க்கும் போது ஹாலிவுட் படமான Expandables போல இருக்கிறது என ட்விட்டரில் கொளுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக் வந்த சில நிமிடங்களிலே #PowerPaandi டிரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது.
அடுத்து என்ன பண்ண போறீங்க பாஸ்???

-ஏழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!