Published:Updated:

1 4 3 சொல்ல வைத்த அஜித் மேஜிக்! #21yearsofAasai

1 4 3 சொல்ல வைத்த அஜித் மேஜிக்!  #21yearsofAasai
1 4 3 சொல்ல வைத்த அஜித் மேஜிக்! #21yearsofAasai

1 4 3 சொல்ல வைத்த அஜித் மேஜிக்! #21yearsofAasai

இன்றைய அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த 'ஆசை'படம் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் ஆகின்றன. அவ்வளவு  ஃப்ரெஷான அஜித் இனி எப்பவுமே சான்ஸே இல்ல. அஜித் மட்டுமல்ல அதன் இயக்குநர் வசந்த்க்கும் இதை தொடர்ந்து  ஹிட் கொடுக்கும் அளவிற்கு செம பூஸ்ட் கொடுத்தபடம் இது.

1. இன்றைய அஜித்தின் ஓப்பனிங் சீனுடன் ஆசையில் அவரின் ஓப்பனிங் காட்சியை ஒப்பிட்டு பார்த்தால் அது ஒரு ரோஜா பூப்பதை. இன்று இருக்கும் மாஸ் ஒரு கெத்து என்றால், இது ஒருவகையில் சாஃப்ட். அஜித்துக்கு இந்தப் படத்தில் டப்பிங் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்.

2.ஆசை படத்தின் வெற்றி யாருமே கணிக்க முடியாத அளவிற்கு  அமைந்தது. படத்தின் முடிவில்தான், நியாயமான தலைப்பை இயக்குநர் வைத்தது புரியவரும். ஆனால் படம் துவங்கும் ராவணனின் பெண்ணாசை பற்றிய நாட்டுப்புறக்கூத்திலேயே அதை உணர்த்தியிருப்பார் இயக்குநர்.

3. படத்தின் நாயகியும் நாயகனும் சந்தித்துக்கொள்ளும் காட்சி அவ்வளவு பொயட்டிக். முன் இருக்கையில் குழந்தைத்தனத்துடன் மழை நீரில் விரல்களை வைத்து விளையாடியபடி டிக்கெட் எடுக்க மறந்திருப்பார் நாயகி. பரிசோதகர் வந்துவிடுவார். அப்போது முன்பின் அறியாத அஜித் பின் சீட்டிலிருந்து தன் டிக்கெட்டை கொடுத்துக் காப்பாற்றுவார். செக்கர்கள் அஜித்தை பிடித்து போவார்கள். சுவலட்சுமி விளையாடிவரும் போது வரும் "ஆசை" ஹம்மிங் செமையாக இருக்கும். (தேவாடா)4. தேவா - உண்மையில் தேவாவின் பாடல் வரிசைகளை கேட்டவர்கள் யாருமே நம்பமுடியாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இசை அமைத்திருப்பார்.. படத்தின் 5 பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். "கொஞ்சநாள் பொறு தலைவா"வும் 'திலோத்தமா'வும் கல்யாணவீடுகளை அலறவிட்டால், மீனம்மாவும்,புல்வெளி புல்வெளி பாடலும் கேபிள் டிவிகளில் தினமும் இரண்டுமுறை ஒளிபரப்பானது. 

5. 143 - 'I Love you' என்கிற வாசகத்தின் எழுத்துக்களின்  எண்ணிக்கைதான் 1-4-3. அன்றைய இளைஞர்கள் 'சைன் தீட்டா காஸ் டீட்டா டேன் தீட்டா' ஆகிய வார்த்தைகளை விட அதிகம் சொன்னது இந்த 1 4 3 யைதான்.

6. இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் உதவி இயக்குநர். ஒரு காட்சியில் ஆட்டோ ஓட்டுநராகவும் வருவார். ஒரு காட்சி என்றாலும்  அவரின் ஸ்டைல் அப்படியே இருக்கும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளைகளில் தம்மடிக்க ஒன்றாக ஒதுங்கியதில் தொடங்கிய அஜித் சூர்யாவின் நட்பு பின்னர் 'வாலி' என்கிற மெகா ஹிட் கொடுக்க காரணமாக இருந்தது. 

7.ஜென்டில்மேன்,காதலனுக்குப் பின், ஜீவா ஒளிப்பது செய்த மூன்றாவது தமிழ்ப்படம். ரொமான்டிக் கலர்ஃபுல் காட்சிகளில் ஜீவாவின் கேமரா எப்போதுமே ஸ்பெஷல், படத்தில் வரும் அந்த நாய்க்குட்டி கிஃப்ட் காட்சி எல்லாம், அக்கால காதலர்கள் நிச்சயம் செய்து பார்த்து இருப்பார்கள்.


8. இந்த படத்துக்கு இயக்குநர் வசந்த் முதலில் வைத்த பெயர் 'பூவெல்லாம் கேட்டுப்பார்'.ரொம்ப பொயட்டிக்கான டைட்டிலாக இருக்கிறதே படத்தின் கதை என்ன லவ் ஸ்டோரியா என நிறைய பேர் கேட்கவும் கதைக்கு பொறுத்தமான டைட்டிலான 'ஆசை'யை வைத்திருக்கிறார். 

9. ஆசை படத்தின் மொத்த செலவு 1 கோடி. ஆனால் வசூல் செய்த தொகையோ 5 கோடி. இன்று போல் பெரிய விளம்பரங்கள் ஏதுமில்லாமல் வெளியிடப்பட்டு  ஹிட் அடித்தபடம். இந்த படத்திற்கு பிறகு "தீனா" படம் வரை அஜித் 'ஆசை நாயகன்' என்றே பட்டமிட்டு அழைக்கப்பட்டார்.அதன் பின்னர்தான் தலை 'தல' ஆனார்.

10. மிகச்சில கேரக்டர்களை மட்டும் கொண்டு படத்தை பரபரப்பாக நகர்த்திச்செல்லும் சாமர்த்தியம் தமிழில் வெகு சில இயக்குநர்களுக்கே கைவரும் அதில் வசந்த் அவர்களும் ஒருவர். இதே போன்ற பெண்ணாசையால் அழியும் கதையம்சம் கொண்ட படங்களின் புதிய தொடக்கமாக கடந்த 25 ஆண்டுகளில் 'ஆசையே' இருந்தது என்பதே உண்மை.

11. ஆசை படத்தில் வில்லன் பிரகாஷ்ராஜ். ஆனால், உண்மையில் ஹீரோ அவர்தான். தமிழ் சினிமாவுக்கு புதிய வில்லன் கிடைத்துவிட்டார் என  புகழ்ந்து தள்ளினார்கள் விமர்சகர்கள்.

-வரவனை செந்தில்

அடுத்த கட்டுரைக்கு