Published:Updated:

அனுஷ்கா.. நயன்... வரிசையில் சேர்வாரா த்ரிஷா?! 'நாயகி' விமர்சனம்

அனுஷ்கா.. நயன்... வரிசையில் சேர்வாரா த்ரிஷா?! 'நாயகி' விமர்சனம்
அனுஷ்கா.. நயன்... வரிசையில் சேர்வாரா த்ரிஷா?! 'நாயகி' விமர்சனம்

அனுஷ்கா.. நயன்... வரிசையில் சேர்வாரா த்ரிஷா?! 'நாயகி' விமர்சனம்

ஜூலை மாதமே தெலுங்கில் வெளியாகிவிட்ட 'நாயகி'யின் தமிழ் 'பதிப்பு'தான் இந் ’நாயகி’. இரு மொழி தயாரிப்பு எனச்  சொல்லப்பட்டாலும் முக்கால்வாசி டப்பிங்தான். அருந்ததி, ருத்ரமாதேவி என அனுஷ்காவும், மாயா என நயன்தாராவும் வெளுத்துக் கட்டினார்கள். நாயகி த்ரிஷாவுக்கு அந்த அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு த்ரிஷாவே பதில் அளித்திருக்கிறார். அது.... இறுதியில். இப்போது விமர்சனம்!

அந்த வீட்டில் (பங்களாவே தான்) ஏற்கெனவே பலர்  மர்மமான முறையில் இறந்துபோனதாகச் செய்திகள். அதற்கேற்ப வெள்ளிக்கிழமையானால், அந்த வீட்டில் இருக்கும் த்ரிஷா காலையில் எழுந்து பல்விளக்கி, வளையல், புதுப்புடவை, காஜல் எல்லாம் இட்டு அலங்காரமாக அழகுபடுத்திக் கொண்டு, வாசலில் போய் அமர்கிறார். யாருக்கோ காத்திருந்து அவர் வரவில்லை என்றதும் சோகமாக வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே வந்ததும் டெரராகி பெரிய சைஸ் கத்தி ஒன்றை எடுக்கிறார்.... தொடரும் நிகழ்வுகளில்... மறுநாள் செய்தியில் ஒருவர் இறந்தவர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்.

இப்போது கதை கிராமத்து வீட்டில் இருந்து சிட்டிக்குள் தாவுகிறது. தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள (எவ்ளோ பழைய காரணம்டா சாமி!)  திட்டமிடும் சத்யம் ராஜேஷ், ’காதலிக்கிறேன்’ என்று சொல்லி தன் தோழி சுஷ்மாவை  நண்பனின் ஃபார்ம் ஹவுஸுக்கு அழைத்துச் செல்கிறார். வழியில் தடம் மாற்றப்பட்டு, த்ரிஷா வசிக்கும் வீட்டுக்குச் சென்று இறங்குகிறார்கள். ராஜேஷ் சுஸ்மாவை நெருங்கும் போதெல்லாம் த்ரிஷாவும் நெருங்குகிறார். அது எப்படி? த்ரிஷா யார்? அவர் ஏன் பார்ட்-டைம் பேயாக இருக்கிறார்? வெள்ளிகிழமையானால் காத்திருக்கும்  ரகசியம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையைச் சோதித்தது இரண்டு மணி நேரம் கழித்துப் பதில் சொல்கிறாள் 'நாயகி'!

 பேயாக த்ரிஷா. பயமுறுத்தினாலும்,, ”காஸ்ட்யூம் செம இல்ல” என சொல்ல வைக்கிறார்.  இவரில்  படம் முழுக்க த்ரிஷாவின் முகத்தில் ஒரு தேஜஸ். பிரகாசமான ‘க்ளோ’ மோடிலேயே இருக்கிறார். திரைக்கதை செதுக்கலை  விட த்ரிஷாவை இளமையாகக் காட்ட நிறைய மெனக்கெட்டிருக்கிறது படக்குழு. 

சத்யம் ராஜேஷ், சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பு..  ஓகே ரகம். கெஸ்ட் ரோலில் வரும் மனோபாலா, கோவை சரளா  எபிசோடு மட்டும் ஜாலி கேலி. பிரம்மானந்தத்தின் ஐதீக காமெடிகள்  ஹக்காங் ஹக்காங் ரகம்.

படத்தின் லாஜிக்படி ஆவியை சாதாரணமாக பார்த்தால் தெரியாது. கேமரா வழியாகப் பார்த்தால்தான் தெரியும். அதற்கான காரணமும், க்ளைமாக்ஸும் அந்த ஆவிக்கே பொறுக்காது டைரக்டர் சார். அதுவும் ஜெயப்பிரகாஷின் அம்மன் பாட்டு, த்ரிஷாவின் டான்ஸ் எல்லாம் தாங்கல ஜி.

காமெடி-த்ரில்லர் காம்போவில் வாரம் ஒரு பேய்ப்படங்கள் வந்து அலுத்துப் போயிருக்கும் நேரத்தில் இந்தப்படமும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. பேய் படத்துல பேய்தான் பயமுறுத்தனுமே தவிர.... சரி விடுங்க...!

நிற்க...

”வழக்கமாக உங்கள் படங்களை புரமோட் செய்யும் நீங்கள் இந்தப் படத்தை ஏன் செய்யவில்லை?’ என த்ரிஷாவிடமே ரசிகர்கள் பல ட்விட்டரில் கேட்க , அதற்கு த்ரிஷாவின் பதில் என்ன தெரியுமா? 

அதாவது என் கட்சிக்காரர் என்ன சொல்கிறார் என்றால், ‘நான் நடித்த படத்தை புரமோட் செய்யவில்லையென்றால், அதற்கு தகுந்த காரணம் இருக்கும். என் ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்!’

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!

அடுத்த கட்டுரைக்கு