Published:Updated:

'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பொண்ணு இப்ப ஹீரோயின்! #நிர்மலா கான்வெண்ட் படம் எப்படி?

 'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பொண்ணு இப்ப ஹீரோயின்! #நிர்மலா கான்வெண்ட் படம் எப்படி?
'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பொண்ணு இப்ப ஹீரோயின்! #நிர்மலா கான்வெண்ட் படம் எப்படி?

பள்ளியில் படிக்கும் சாமுவேல் (ரோஷன்), சாந்தி (ஷ்ரியா சர்மா) இருவருக்கும் காதல், அதனால் வரும் பிரச்சனைகள். இதுதான் நாகர்ஜுனாவின் அன்னபூர்னா ஸ்டுடியோஸும், மேட்ரிக்ஸ் டீம் வொர்க்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் 'நிர்மலா கான்வென்ட்' படத்தின் ஒன்லைன்.

ஹீரோ ரோஷன், ஹீரோயின் ஷ்ரியா சர்மா (குழந்தை நட்சத்திரமாக சூர்யாவின் மகள் ரோலில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தவர்) நிர்மலா கான்வென்டில் படிக்கும் இருவருக்கும் காதல். இதற்கு இரண்டு தடைகள். ஒன்று ஷ்ரியா சர்மாவின்  பணக்கார ஜமீந்தார் குடும்பம், ரோஷனின்  ஏழை விவசாய குடும்பம் (எத்தனை ஃப்ரெஷ்ஷான பிரச்னை!), இரண்டாவது ரோஷனின் குடும்பத்துக்கும் ஷ்ரியா சர்மாவின் குடும்பத்துக்கும் உள்ள நிலப் பிரச்சனை. இதில் உப பிரச்சனையாக ஜாதியும் இருக்கிறது.  இந்தப் பிரச்சனைகள் அப்படியே இருக்க ரோஷனும், ஷ்ரியா சர்மாவும் காதலில் விழுந்து ஒரு டூயட் பாடி முடித்து வர விவகாரம் ஹீரோயின் வீட்டிற்கு தெரிந்து விடுகிறது. ஷ்ரியா வீட்டுச் சிறையில் இருக்க, ரோஷனின் அப்பா பெண்கேட்டு வீட்டுக்குச் செல்ல, என்னைவிட பெரிய பணக்காரனாகிட்டு வா அப்ப தர்றேன் பொண்ணு என சொல்கிறார் ஷ்ரியா டாடி.. இதை சீரியசாக எடுத்துக் கொண்டு ரோஷன் எப்படிப் பணக்காரனாகிறார் (ஒரே பாட்டுல இல்ல... இது அதுக்கும் மேல ), காதல் கைகூடியதா என்பது தான் மீதிக் கதை.

ஹீரோ ரோஷன் உட்பட அத்தனை புதுமுகங்களும் ஃப்ரெஷ் அறிமுகம், நடிப்பிலும் பெரிதாக சொதப்பவில்லை. பள்ளி மாணவி வயது ஹீரோயினாக ஷ்ரியா சர்மா  க்யூட் ரியாக்‌ஷன்ஸ், டயலாக் டெலிவரி என கச்சிதமான பெர்ஃபாமென்ஸ் கொடுத்திருக்கிறார். சீக்கிரம் தமிழுக்கு வாம்மா! லேசாக உனக்கும் எனக்கும் (அதுவே தெலுங்குபடம் தானே) வாசனை ஆங்காங்கே அடித்தாலும் போர் அடிக்காமல் நகர்கிறது. 

நிறைய புதுமுகங்களோடு கைகோர்த்து இறங்கிய வரை சரி. எதற்காக இந்த களத்தில் இந்தக் கதை நடக்கிறது?  ஹீரோவாக ரோஷனையும், ஹீரோயினாக ஷ்ரியா சர்மாவையும் இன்னும் சில ஸ்டார் கிட்ஸ்களையும் சினிமாவில் நடிக்க வைப்பதற்கு தான் இப்படி ஒரு சினிமாவா என பல விசித்திரமான கேள்விகளை மனதிற்குள் ரங்கராட்டினம் சுத்தவிடுகிறது படம்.

பள்ளியில் படிக்கும் மகன் சொல்வதால், அவன் மேல் உள்ள பாசத்தில் தந்தை, ஹீரோயின் வீட்டுக்கு சம்மந்தம் செய்வதற்கு செல்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால், பணக்காரனாகவும், புகழ் பெறவும் 'மீலோ எவரு கோடீஸ்வருடு' (நீங்களும் வெல்லலாம் ஒருகோடி தெலுங்கு வெர்ஷன்) ஷோவில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனாவை ( அவரும் படத்தில் ஒரு ரோல்.. சாரி சாரி ஒரு ஷோ பண்ணியிருக்கார்) சந்திப்பதும், அதற்கு அவர் பத்து பேர் கொண்ட குழுவை வைத்து நடத்தும் டெஸ்ட்டும், டெஸ்ட்டின் முடிவில் 'வாவ் வாட் ஏ மேன்... இவன் +2 ஸ்டூடெண்ட் இல்ல... ஹூமன் கம்ப்யூட்டர், பச்ச தண்ணிய சூடாக்கற வாட்டர் ஹீட்டர், ஸ்கூல்ல படிக்கற கார்பென்டர் என வர்ணிப்பதெல்லாம் ”டி20 மச்”

அதற்கும் நாகர்ஜுனா சம்மதித்து ரோஷனின் ஊரிலேயே பெரிய ஸ்டேஜ் அமைத்து லைவ் ஷோ செய்வதும், "தலையைப் பின்னால் திருப்பாமல் தன் பின்னங்காலை பார்க்க முடிகிற விலங்கு எது?" எனக் கேள்வி கேட்டுக் காமெடி பண்ணுவதும்...  (நிஜமா கேட்டார் ப்ரோ) "இந்த தெலுங்கு சினிமாவுக்கு என்ன தான் ஆச்சு?" 

ஆனால், அது தான் படத்தை ஓரளவவது நகர்த்துகிறது. கடைசி 30 நிமிடங்கள் நாகர்ஜுனா வரும் காட்சிகளில் மட்டும் தான் படம் கொஞ்சம் சுறுசுறுப்பாகிறது. இன்னொரு குட் காமெடியன் ரமேஷ் ராமில்லாவுக்கு. குடிபோதையில் வந்து அவர் ரகளை செய்யும் காட்சிகள் அனைத்துக்கும் தியேட்டரே அலறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் பாடிய "கொத்த கொத்த பாஷா" பாடல் மட்டும் சூப்பர், மற்றபடி ரோஷன் சலூரியின் பின்னணி இசையும், பாடல்களும் ஹீரோ அளவுக்கு ஸ்மார்ட் இல்லை.

பணக்கார ஹீரோயின், ஏழை ஹீரோவின் காதல், கொஞ்சம் பிரச்சனை, கடைசியாக ஸ்லம்டாக் மில்லியனரை கலந்துகட்டி படத்தை பரிமாறியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நாக கோடீஷ்வர ராவ். ஆனால், உறுதியாக 'நிர்மலா கன்வென்ட்' அவருக்கு நல்ல அறிமுகம் இல்லை. 

நிர்மலா கான்வெண்ட்... ஃபீஸ் அதிகம்.. குவாலிட்டி கம்மி.