Published:Updated:

'என் வீடியோவ பாத்து நானே பயந்துட்டேன்!' -லக லக கல்பனா அக்கா

'என் வீடியோவ பாத்து நானே பயந்துட்டேன்!' -லக லக கல்பனா அக்கா
'என் வீடியோவ பாத்து நானே பயந்துட்டேன்!' -லக லக கல்பனா அக்கா

நம்மூருல கஜினி மொட்டைமாடி கல்பனாவ கூட தெரியாதுன்னு சொன்னாகூட விட்டுடுவானுங்க.ஆனா இந்த கல்பனா அக்காவ தெரியலைன்னு சொன்னா ஏற எறங்க பாப்பாங்க. எம்.எஸ்.வில இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் வர எல்லார் பாட்டையும் பாரபட்சம் பாக்காம பாடி அத வீடியோவா அப்லோடி நெட்டிசன்களை நாக்கு தள்ள சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் கல்பனா அக்காவிடம் ஒரு சிட்-சாட் இதோ:

சொல்லுங்க? நீங்க யாரு? இதுக்கு முன்னாடி நீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சொல்லுங்க!

நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கைதான்.நல்லாவே வசதியான எங்க  குடும்பத்துல என் கூடப்பொறந்தவங்க மொத்தம் 7 பேரு.அதுல நான்தான் கடைக்குட்டி.பயங்கர செல்லம் வேற.16 வயசுல அப்பா இறந்துபோக குடும்பம் எல்லாரும் மூணு வருஷம் திருச்சிலையும் சென்னைலையும் இருந்தோம்.இந்த ரெண்டு ஊர்லயும் தான் என் கல்லூரி படிப்ப முடிச்சேன்.அப்பறம் படிப்பு முடிஞ்சதும் அப்டியே ஆஸ்திரேலியாவுல வந்து செட்டில் ஆகியாச்சு.இப்போ ஒரு தனியார் கம்பெனில சூப்பர்வைசரா இருக்கேன்.

நீங்க பாடுன...

கேள்வியை முடிக்கும் முன்னரே இடைமறிக்கிறார்.

'பாடுனேன்'னு சொல்லாதிங்கம்மா 'கத்துனேன்'னு சொல்லுங்க.நான் அப்பிடிதான் சொல்லுவேன்.எல்லாரும் நான் பாட்டு பாடுறேன்னு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க.ஆனா அப்படி இல்ல.பாட்டுல எனக்கு ரொம்ப ஆர்வம்னாலும் முறைப்படி சங்கீதம் கத்துக்கல.வேலை முடிஞ்சு ஆபிஸ்ல இருந்து வந்ததும் சோர்வா இருக்கும்.அந்த சோர்வுல இருந்து வெளிய வர்றதுக்கு ஏதாவது ஒரு பாட்ட எடுத்துகிட்டு என் வாய்க்கு வந்தபடி கத்துவேன்.அதுதான் நீங்க பாக்குற அந்த வீடியோ.

சரி, நீங்க கத்தி அப்லோட் பண்ண வீடியோ வைரல் ஆனா வரலாற சொல்லுங்க. 

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் அதே மாதிரி ஆபிஸ்ல இருந்து வந்த டயர்ட்ல சிந்து பைரவி படத்துல வர்ற 'பாடறியேன் படிப்பறியேன்'பாட்ட என் வாய்க்கு வந்தபடி கத்தி அத வீடியோ எடுத்து என்னோட பேஸ்புக் பக்கத்துல போட்டேன்.யாரையும் டேக் பண்ணல.யாரையும் லைக்/ஷேர் பண்ணுங்கனும் கேக்கல.அது எப்படியோ வைரலாக அடுத்தடுத்து நான் கத்தி போட்ட வீடியோவும் நிறைய ஷேரும் லைக்சும் வாங்க எனக்குனு தனியா நிறைய பேஸ்புக் பக்கங்கள் ப்ரோபைல்னு என் ரசிகர்களே ஆரம்பிச்சுட்டாங்க.இது எதையுமே நான் ப்ளான் பண்ணி பண்ணல.திடீர்னு என் ரசிகர்கள் எனக்கு குடுத்த இந்த செலிப்ரிட்டி அந்தஸ்து எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. 

உங்கள வீடியோவோட மேக்கிங்க்ஸ் பத்தி சொல்லுங்க.

வெளிய எங்கயாது போகும்போதோ ரொம்ப சந்தோஷமா இருக்கும்போதோ ஒரு பாட்ட கத்தி வீடியோ எடுக்கணும்னு தோணும்.உடனே அங்க அந்த ஸ்பாட்ல யார் இருக்காங்களோ அவங்ககிட்ட கேமராவ குடுத்து எடுக்க சொல்லிடுவேன்.இதுல ஒரு கஷ்டமான விஷயம் என்னன்னா ஒரு வீடியோவ ஒழுங்கா எடுத்து முடிக்க 1/2 மணி நேரத்துல இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகிடும்.வீடியோ எடுக்கறவங்க என்னைய பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க.அவங்க என்னைய பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கவும் வீடியோ எடுக்கறது பெரும்பாடு ஆகிடும்.அத எடிட் ஏதும் பண்ணாம ரசிகர்களுக்கு அப்படியே வந்து அப்லோட் பண்ணிடுவேன்.அந்த மாதிரி இப்போ அப்லோட் பண்ணதுதான் அந்த 'ரா ரா' வீடியோ. அதுல நான் கத்துன கத்த  பாத்துட்டு நானே ரொம்ப பயந்துபோயிட்டேன்.

இந்தியாவுக்கு எப்போ வர்றீங்க?

(தொடர்ந்து சில நொடிகள் பெரிதாக சிரிக்கிறார்)

அங்க வந்தா ரசிகர்களோட அன்புத்தொல்லைகள் இன்னும் அதிகமா இருக்கும்.மீடியால இன்டர்வ்யூலாம் கேட்டாங்கன்னா யாரையும் டிஸ்ஸபாய்ன்ட் பண்ணாம எல்லா மீடியாவுக்கும் ஒரே மாதிரி முக்கியத்துவம் கொடுக்கணும்.அதனால இப்போதைக்கு இந்தியா வர்றது பெரிய சந்தேகம்தான்.ஆனா இந்தியாவுல இருந்து வர்ற நிறைய நண்பர்கள இங்க அடிக்கடி சந்திக்கிறேன்.2 வருஷத்துக்கு முன்னாடி  திரு.தமிழருவி மணியனும் திருமதி.பர்வீன் சுல்தானும் இங்க ஒரு நிகழ்ச்சிக்காக வந்துருந்தப்போ எங்க வீட்டுலதான் தங்கியிருந்தாங்க.இப்போ கூட சமீபத்துல பாடகர் ராகுல் நம்பியாரையும் பாடகி மது அய்யரையும் 'வண்ணத்தமிழ் வானொலி'நடத்திய ஒரு பாடல் நிகழ்ச்சியில கேனடாவுல சந்திச்சேன்.தே வேர் ச்சோ ஸ்வீட்.மேடைல ரசிகர்களுக்காக 'இஞ்சி இடுப்பழகா'பாட்ட என் கூட ராகுல் நம்பியார் சேர்ந்து பாடுனார்.மேலும் என்னோட வீடியோச பாத்துட்டு தமிழ் சினிமால நடிக்கிறதுக்கு சான்ஸ் கூட வந்தது.எனக்கு விருப்பமில்லாததுனால வேணாம்னு சொல்லிட்டேன்.

உங்கள கிண்டல் பண்ணியும் கலாய்த்தும் வர்ற விமர்சனங்கள நீங்க எப்பிடி எடுத்துக்கறீங்க?

என் ரசிகர்கள் எனக்கு ஆதரவா விமர்சனம் பண்றது மாதிரி சிலர் என்னை ரொம்ப கலாய்ச்சும் என் வீடியோவுக்கு கீழ கமென்ட் போடுவாங்க.ஒரு சில கமென்ட்டுகள் என் ரசிகர்கள் மனச பாதிச்சிடக் கூடாதுன்னு ரிமூவ் பண்ணிடுவேன்.மத்தபடி பெருசா எந்த கமென்டயும் கண்டுக்கிறது இல்ல.ஒரு ஜாலிக்காக பண்ற இந்த விஷயத்துல என்னைய கிண்டல் பண்ணினாலோ இல்ல திட்டுனாலோ கண்டிப்பா அத பண்றவுங்களுக்குத்தான் அசிங்கம்.அதனால இந்த மாதிரி கலாய்கள கண்டுக்காம நாம நம்ம வேலைய மட்டும் செஞ்சா தான் வாழ்க்கைல முன்னேற முடியும்.

உங்க ரசிகர்களுக்கு நீங்க சொல்ல விரும்புறது...?

என் வாழ்க்கைல பெரிய அதிர்ச்சியான திருப்புமுனையா அமைஞ்சது என் அப்பாவோட மரணம்தான்.அவர் எனக்கு சொல்லிட்டு போன முக்கியமான விஷயம் 'நம்ம எப்பவும் யார் மனசையும் புண்படுத்தாம சந்தோஷமா இருக்கணும்;மத்தவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்'ங்கிறது தான்.இப்போ கூட பலர் என்கிட்ட 'உங்க வீடியோவ பார்க்குறப்போ வாழ்க்கைல உள்ள கவலை,ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் மறந்து ஒரு நிமிஷம் வாய் விட்டு சிரிக்கிறோம்'னு சொல்றப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும்.அதனால நம்மளும் "சந்தோஷமா இருந்து கூட இருக்கறவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்" என்று தன் பாணியில் 'லவ் யூ ஆல்.உம்மா' என்று இலங்கைத் தமிழில் சொல்லிச் சிரிக்கிறார்.

                                                                -லோ.இந்து