Published:Updated:

வெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... - ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan

வெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... -  ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan
வெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... - ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan

வெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... - ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan

“பிரிட்டிஷ் காலத்துல, ஒவ்வொரு பட்டு நெசவு செய்து முடிச்ச பிறகும், நெசவாளியோட கட்ட விரல வெள்ளக்காரன் வெட்டிடுவானாம். இதுமாதிரி நிறைய செய்திகள் நம்மைச் சுற்றி நடந்திருக்கும். இப்படிப்பட்ட செய்திகள், நாம அனுபவப்பட்ட விஷயங்களை படமாக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னா,  திரையில் சொல்ல வர விஷயத்தை உண்மையா சொல்லணும். உண்மையோடு, கற்பனையும் சேர்ந்தா தான் படம் வெற்றியும் பெறும். அப்படி நான் பார்த்த விஷயத்தை கோர்த்து உருவாக்கியிருக்கும் படம் தான் சைத்தான்” என நிறைவாக பேசுகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு   படத்தின் டைட்டிலிலும் மிரளவைப்பவர். அவரின் அடுத்தப் படம் சைத்தான். டீஸரிலேயே லைக்ஸ் அள்ளும் அந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப்பை சந்தித்தோம்.  

யாரு சைத்தான்? 

நீங்க கேட்ட கேள்வியில் தான் கதையே இருக்கு. விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான்.   ஐடி கம்பெனியில் வேலை செய்யும்  விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட ஒன் லைன். படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும்.  இடைவேளி வரை ஒரு பேட்டன்லையும், இடைவேளிக்குப் பிறகு இன்னொரு கலர்லையும் படம் நகரும். அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.  

சைத்தான் எந்தமாதிரியான ஜானர்? 

வேலாவேலைக்கு சோறு, ஐடி காட்டுனு நம்ம கொத்தடிமையா நடத்தும் கங்காணி தான் ஐடி வேலைகள். அங்கிருந்து தான் ஐடியாவைப் பிடித்தேன். அங்க நடக்குற விஷயங்கள் தான் கதை. இதில் ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது. ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும். கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும். நான், சலீம் மாதிரி விஜய் ஆண்டனிக்கு பொருந்தும் ஒரு கதாபாத்திரம் தான் சைத்தான். எந்த ஜானருக்குள்ளும் இந்தப் படத்தை அடக்க முடியாது.  

சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனி எப்படி கமிட்டானார்? 

எல்லோரையும் பேட்டி எடுத்துத்தான் பழக்கம். இப்போ என்னையும் கேள்வி கேக்குறாங்கனு நினைக்கவே மகிழ்ச்சியா இருக்கு.  விஸ்காம் முடிச்சிட்டு  சன் டிவிக்காக டாக்குமென்ட்ரி இயக்குனராக இருந்தேன். சன் டிவி  விஜய் சாரதி தான் விஜய் ஆண்டனியிடம், என்னை  அனுப்பினார். கதை சொன்ன உடனேயே ஓகே சொல்லிட்டாரு.  அப்படியே இயக்கத்துல இறங்கிட்டேன்.  இந்தப் படத்தை இயக்க எடுத்துக்கிட்டதை விட, கதை மக்களுக்குப் புரியவைக்கவே நிறைய வேலை செய்யவேண்டி இருந்தது.  ஒவ்வொரு சவுண்ட் எஃபெட்ஸூக்கும் வேலை செய்தோம். கேமிராவில் தொடங்கி தொழில் நுட்பரீதியாகவும் நிறைய வேலை செய்திருக்கும். இந்த கதை மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு. இந்தப் படம் கொஞ்சம் தனித்துவமா இருக்கணும்குறதுக்காவே நிறைய வேலைச் எய்திருக்கோம். 

உங்க குரு வெற்றிமாறனிடம் நீங்க கற்றுக்கொண்ட பாடம்? 

சினிமாவையே அவர் தான் கற்றுக்கொடுத்தார். ஒரு படம் முழுமையா  இயக்குறதுக்கான அறிவே அவர் கொடுத்தது தான். ஆடுகளம் படம் பண்ணும் போது, சினிமாவின் நுணுக்கமான விஷயங்களை கத்துக்கிட்டேன். அதான் சைத்தான் படம் எடுக்க அதிகமா உதவியது. 

தியேட்டர் கிடைக்குமா என்ற பயத்தில், பெரிய ஹீரோக்களின் படங்களே பின் வாங்கிவருகிறது. ஆனா நீங்க தைரியமா தீபாவளி ரிலீஸ்னு சொல்லுறீங்களே? 

ஸ்கிரிப்ட் மேல வச்சிருக்குற நம்பிக்கை தான். 53 நாள் ஷூட்டிங்கிலேயே முழு படத்தையும் முடிச்சிட்டோம். படம் இப்போ ரெடி. தியேட்டர் கிடைக்கும், கிடைக்காதுனுலாம் நினைக்கவில்லை. நிச்சயம் படம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையில் போட்டிக்கு நாங்க ரெடி. 

-பி.எஸ்.முத்து-

அடுத்த கட்டுரைக்கு