Published:Updated:

உருக உருக காதல்...கலகல காமெடி... நானி மேஜிக்! மஜ்னு படம் எப்படி?

உருக உருக காதல்...கலகல காமெடி... நானி மேஜிக்! மஜ்னு படம் எப்படி?
உருக உருக காதல்...கலகல காமெடி... நானி மேஜிக்! மஜ்னு படம் எப்படி?

உருக உருக காதல்...கலகல காமெடி... நானி மேஜிக்! மஜ்னு படம் எப்படி?

எவடே சுப்ரமண்யம், பலே பலே மகாடிவோய், கிருஷ்ணகாடி வீர பிரேம கதா, ஜெண்டில்மேன் என பேக் டு பேக் ஹிட்ஸுக்குப் பிறகு நானி நடித்திருக்கும் படம் 'மஜ்னு'. படம் பற்றி எதிர்பார்க்க இன்னொரு காரணம் 'உய்யாலா ஜம்பாலாலா' இயக்குநர் விரிஞ்ச்சி வர்மா. இந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த ரசிகர்களை திருப்திபடுத்தினானா இந்த மஜ்னு?

பீமாவரத்தைச் சேந்த ஆதித்யா (நானி), பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் உதவி இயக்குநர். சுமாவைப் (ப்ரியா ஸ்ரீ) பார்த்ததும் நானிக்குப் பிடித்துவிடுகிறது. அவளை இம்ப்ரஸ் செய்து காதலிக்க வைக்க சில சர்ப்ரைஸ்கள் தருகிறார். ஆனால், ப்ரியாஸ்ரீ நானிக்கே சர்ப்ரைஸ் தரும்படியாக 'நீ இதுக்கு முன்னால காதலிச்சிருக்கியா? அப்ப அந்த காதலப் பத்தி சொல்லு. அப்போ தான் நான் என் பதில சொல்வேன்' என சொல்கிறார். கட் பண்ணா பீமாவரம்

அங்கு கிரணை (அனு இமானுவேல்) காதலித்தது, பிரிந்தது எல்லாவற்றையும் சொல்கிறார். அந்த ஃப்ளாஷ்பேக்கை அசைபோட்ட நேரத்தில் அனு இமானுவேல் மேலே தனக்கு இருக்கும் காதலை உணர்கிறார். தன்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கும் நானியை ப்ரியா ஸ்ரீக்கு பிடித்துவிடுகிறது. ஊருக்கு சென்று அனுவை சந்திக்க கிளம்பும் நானிக்கு செம ஷாக்காக இருக்கிறது அடுத்த சீன். ரயில்வே ஸ்டேஷனில் அனுவும், ப்ரியாவும் ஒன்றாக வருவதைப் பார்க்கிறார். இருவரும் உறவினர்கள் என்ற ஷாக் நானிக்கு, நானியிடம் காதலை சொல்லும் ப்ரியாவைப் பார்த்து அனுவிற்கு ஷாக், ரொம்ப பழைய கதையா இருக்கே மீதி படம் நல்லாயிருக்குமா என்ற ஷாக் நமக்கு. தான் காதலித்த பெண்ணா, தன்னைக் காதலிக்கும் பெண்ணா நானிக்கு ஜோடி யாரு? என நடக்கும் காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட் கலந்து க்ளைமாக்ஸ் செல்கிறது படம்.

இந்த மாதிரியான கதை ஆடியன்ஸுக்குப் புதுசு கிடையாது தான். ஆனால், என்டெர்டெயின்மென்டுக்கு மட்டும் நான் கேரண்ட்டி என இறங்கி அடிக்கிறார் இயக்குநர் விரிஞ்ச்சி வர்மா. 

படம் முழுக்க நானி ஒன் மேன் ஆர்மியாக ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட் என புகுந்து விளையாடுகிறார். டயலாக் தப்பாக சொல்லி ராஜமௌலி தன்னைத் திட்டுவதைக் கூட புகழ்வதாய் நினைத்து சிலிர்த்துக் கொள்வதும், காதலித்த பெண்ணைக் பார்ப்பதற்காக அவள் க்ளாசிலேயே லெக்சரராய் சேர்ந்து சைட் அடிப்பதும், அனுவை மீண்டும் தன்னைக் காதலிக்க வைக்க உருகுவதுமாய் ... செம செம நானி.

அனு இமானுவேல், ப்ரியா ஸ்ரீ என இரண்டு ஹீரோயின்கள். இதில் அனுவுக்கு தான் நடிக்க நிறைய வாய்ப்புள்ள ரோல்.  ஓரளவு நன்றாகவே செய்திருக்கிறார். நானியிடம் காதலில் கரைவது, பின் வெறுத்து விலகி செல்வதுமாக வசனங்கள் இன்றி எக்ஸ்பிரஷன்களின் மூலமே ஸ்கோர் செய்கிறார்.

ரொமான்ஸ், சென்டிமெண்ட் ஓவராகும் இடத்தில் எல்லாம் காமெடியை சேர்த்து டைல்யூட் செய்திருப்பது சூப்பர். குறிப்பாக வெண்ணலா கிஷோர் எப்பிசோட் அசத்தல். 'உன்னோட காதல் கதைல நவரசமும் இருக்கு. ஆனா காதல்?' என வெண்ணலா கிஷோர் கேட்க, 'காதல் ரசம் இல்லடா..... சட்னி' என படம் முழுக்க ஒன்லைனர் காமெடிகள் ஆசம். 

"smoking cigarette and drinking alcohol is injurious to health. சிகரெட் குடிக்கறது, சரக்கடிக்கறதெல்லாம் இருந்தா மஜ்னு ஆகமாட்டீங்க, செத்திருவீங்கடா" என ஸ்டாட்சுரரி வார்னிங் தொடங்கி க்ளைமாக்ஸுக்கு முன் இளையராஜா சோகப்பாட்டு சிடியும், "காதல் தோல்வியிலிருந்து வெளிவர 14 வழிகள்" புத்தகத்தோடு நானி ட்ரெய்ன் ஏறுவது வரை முழுக்க முழுக்க காமெடி ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. 

ஆனால் படத்தின் தலைப்புக்கும், கதைகளத்துக்கும் பேஸ் ஆன காதல் எப்பிசோடுகள் தான் தகறாறு செய்கிறது. அனுவுக்கும் நானிக்கும் இடையில் வரும் காதல், சண்டை, இரண்டாவதாக ப்ரியா ஸ்ரீயை நானி காதலிப்பது, மறுபடி அனுவையே காதலிப்பது என எதிலும் அவ்வளவு அழுத்தம் இல்லாமல் இருப்பது மைனஸ். 

கோபி சுந்தர் இசை, ஞானசேகர் ஒளிப்பதிவு இரண்டும் ரொமாண்டிக் ஃபீலை ஏற்றுகிறது. முழுக்க காமெடி செய்வதில் சிக்சர் அடித்தது போல லவ் ஃபீலையும் சரியாக கொடுத்திருந்தால் இன்னும் ஈர்த்திருப்பான் இந்த மஜ்னு.

அடுத்த கட்டுரைக்கு