Published:Updated:

ஷங்கர், ராஜமெளலியின் ஷூட்டிங் சீக்ரெட்ஸ்! #க்விக்செவன்

Vikatan Correspondent
ஷங்கர், ராஜமெளலியின் ஷூட்டிங் சீக்ரெட்ஸ்! #க்விக்செவன்
ஷங்கர், ராஜமெளலியின் ஷூட்டிங் சீக்ரெட்ஸ்! #க்விக்செவன்

 அடுத்த வருடம் ஏப்ரல் 28தான் பாகுபலி-2 ரிலீஸ் என்றாலும், வியாபார யுக்திகளை இப்பொழுதே தொடங்கிவிட்டது பாகுபலி பட புரோமோஷன் டீம்.  முதல் கட்டமாக, பாகுபலி அனிமேஷன் தொடர், காமிக்ஸ் புத்தகங்கள், பாகுபலி கேம்ஸ், 360 டிகிரி போட்டோஸ் மற்றும் பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 22ல் ஃபர்ஸ்ட் லுக் என்று அசரடிக்கபோகிறது. அதுமட்டுமின்றி இந்தியாமுழுவதும் 200 திரையரங்குகளில்  மெய்நிகர் அனுபவம்  (Virtual Experience) கொண்ட அறை உருவாகவிருக்கிறதாம். இதற்காக மட்டும் தனியே 25கோடி செலவு செய்யவிருக்கிறார்கள்.  ஷுட்டிங்கை டிசம்பர் இறுதிக்குள் முடிக்கவும் திட்டமாம். 

 எந்திரன் 2.0 படப்பிடிப்பு பரபர வென நடந்து வருகிறது. டெல்லியில் ரோபோ ரஜினியின் பைட் சீக்குவென்ஸ் ஷூட் பண்ணியவர்கள். தற்போது ரஜினிக்கும், எமிக்குமான லவ் புரோஷனை எடுத்துவருகிறார்கள். இதற்காக செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு பெரிய இடத்தில் செட்டு அமைத்து இருக்கிறார் டைரக்டர் சங்கர். 15 நாட்களுக்கும் மேல் இங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். செங்கல்பட்டு என்பதால் காலையில் நேரமே போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு சென்று வருகிறார் சூப்பர் ஸ்டார்.

 தீபாவளி ரிலீஸூக்கு படங்கள் அசுரவேகத்தில் தயாராகிவருகின்றன. தீபாவளி ரிலீஸ் லிஸ்டில் முதல் படம் தனுஷின் கொடி தான். படத்தின் இசையை அக்டோபர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டம். முதல் முறையாக தனுஷின் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதால் எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது. கொடி தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கில் தர்மயோகி என்ற பெயரில் ஒரே நேரத்தில் ரிலீஸ். 

 மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் எல்லா மொழிகளிலும் ரீமேக்காகி ஹிட். இப்படத்தை இயக்கிய ஜீத்துஜோசப் அடுத்ததாக மோகன்லால் மகன் பிரனவ்வை இயக்கவிருக்கிறார். இப்படமும் திரில்லர் வடிவில் உருவாகவிருக்கிறதாம். பாபநாசம் படத்தில் ஜீத்துஜோசப்பிற்கு உதவி இயக்குநராக பிரனவ் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லாலுடன் ஜீத்துவுக்கு கிடைத்த லக், அவரின் மகனுடன் கிடைக்குமா?   

 அக்டோபர் 7ம் தேதி ஆயுதபூஜை தினத்தில் போட்டியிடவிருக்கும் சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய்சேதுபதியின் றெக்க மற்றும் பிரபுதேவாவின் தேவி மூன்றுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருக்கின்றன. மூன்று படங்களுக்குமே சென்சார் முடிந்துவிட்டதால், எல்லா பகுதிகளிலும் தியேட்டர்களை உறுதிசெய்வது மற்றும் எத்தனை காட்சிகள் திரையிடவேண்டும் போன்ற வேலைகளில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனங்கள். ரெமோவிற்கு தான் அனைத்து திரையரங்குகளிலும் முன்னுரிமை, அடுத்ததாக றெக்க. 

 விஜய் நடித்துவரும் பைரவா படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டது. அடுத்ததாக பாடல்காட்சிகளுக்கான படப்பிடிப்பை அக்டோபர் 3ம் தேதி தொடங்கவிருக்கிறார்கள். நவம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்கவேண்டும் என்பது தான் டார்கெட். இதற்கு நடுவே விஜய், கீர்த்திசுரேஷ் இருவருக்குமான ரொமாண்டிக் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் ஒரு திட்டம் இருக்கிறதாம். அதற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகளிலும் பரதன் இருப்பதாக சொல்கிறார்கள்.  

 திருமலை  புகழ் ரமணா இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார்.  மலையாளத்தில் ஹிட் நாயகியாக இருக்கும் மஞ்சுவாரியாரின் முதல் தமிழ் எண்ட்ரி. அதுபோல டிமான்டிகாலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் “இமைக்கா நொடிகள்” படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர அதர்வாவிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” படத்தைத் தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் படம் “ இவன் தந்திரன்”. இப்படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடி ஷ்ரதா ஸ்ரீநாத். மூன்று படங்களுக்குமே படப்பிடிப்பு நடந்துவருகின்றன

-பி.எஸ்-