Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இப்படி எட்டு எட்டா பிரிச்சுதான் தமிழ் சினிமாவே காதலிக்குது!

தமிழ் சினிமாவில் முக்கோணக்காதல் மட்டும்தான் இருக்குதா, இன்னும் எத்தனை எத்தனையோ டிசைன் டிசைனான காதல் படங்கள் கொட்டிக்கிடக்கு. அதையெல்லாம் எப்போவாச்சும் கவனிச்சுருப்போமா? சும்மா சாம்பிளுக்கு சில விதவிதமான வினோத 'வடிவியல் காதல்' வகைகளைத் தெரிஞ்சிக்குவோம். வாங்க மக்களே...

முக்கோணக்காதல்:  

வேற என்ன?  எல்லாம் தெரிஞ்ச கதைதான். ஒரே ஆளை ரெண்டு பேர் லவ் பண்ணுவாங்க. நிறையப் படங்கள் வந்து போனாலும் எக்ஸாம்பிளுக்கு உடனே நம்ம ஞாபகத்தில் வந்து போற படம் என்னவோ இந்த 'காதல் தேசம்' படம்தான்.  உன்னைக் காணவில்லையே நேற்றோடு...!

 சதுர காதல்:

சதுரமான இந்தக் காதலுக்கு எக்ஸாம்பிள் சொல்லணும்னா ரவுண்டான லட்டை வெச்சுதான் சொல்லணும். ஆமா, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தைக்கூட சொல்லலாம். பவர் ஸ்டார், சந்தானம், சேதுனு ஆளாளுக்கு வரிஞ்சுகட்டி  பெர்ஃபார்மன்ஸ் பண்ணி நாயகி விஷாகாவை லவ்வோ லவ்வுனு லவ்வுவாங்க.  'எல்லோருமே நல்லா வித்தை காட்டுறாய்ங்களே... யாரைடா இப்போ நான் செலக்ட் பண்ணுவேன்?'னு ஹீரோயினே குழம்பி, கடைசியில் அந்த  'லட்டு' சேதுவுக்குத்தான் னு உறுதியாகிவிடும்.

வட்ட காதல்:  

ப்ரீ க்ளைமாக்ஸில் ஒரு  சண்டையைத் தவிர காதலில் பெரிசா எந்தப் பிரச்னையும் வராது. எப்படியும்  க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினும்  சேர்ந்துடுவாங்க. இதுக்கெல்லாம் எக்ஸாம்பிள் சொல்றேன்னு எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தா, ஏலியன்ஸே இறங்கிவந்து துப்புவாய்ங்கே. ஏன்னா கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் வந்த  85 சதவிகிதக் காதல்  படங்கள் இந்த  ஃபார்முலாவை வெச்சு 'செஞ்சது'தான். (ஆனாலும் நல்லாருக்குல!)

நீள்வட்ட காதல்:

இது ஒரு வித்தியாசமான காதல். ரெண்டு பக்கமுமே லவ் ஓகேதான். ஆனா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றதுக்குள்ள வத்தலக்குண்டுல ஸ்டார்ட் பண்ணி வாணியம்பாடியில போயி நிற்கும் வண்டி. சுத்தி வளைச்சு வர்றதுனா இந்த குரூப்புக்கு ரொம்பவே பிடிக்கும்போல. இதற்கு சமீபத்திய உதாரணம் 'ஓ காதல் கண்மணி' தான். மன..மன..மன.. மெண்டல் மனதில்...

அரைவட்டக் காதல்:  

இந்த வகைப் படங்கள்லாம் எப்போதாவதுதான் வரும். ரெண்டு பக்கங்களிலுமே ஒரு கட்டத்தில் பரஸ்பரம் பச்சைக் கொடி காட்டப்பட்டு ரெண்டு பேரும் நல்லா  ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கிறப்போ நானும் ஆட்டத்துக்கு வரவா? னு விதியும் ஆட்டத்தில் சேர்ந்து விளையாடும். ஜோடியில் யாராச்சும் ஒருத்தர் செத்துடுவாங்க. வேற என்ன ஹீரோவா இருந்தா தாடி,  ஹீரோயினா இருந்தா அழுகை.  '7ஜி ரெயின்போ காலனி', '3' படங்கள்லாம் இதில்தான் வந்து போகுது.

அறுங்கோண காதல்:

மக்கள் நலக் கூட்டணி மாதிரி ஆறு பேர் கொண்ட கும்பலின் கதை. இதுக்கு உதாரணம் சொல்லணும்னா 'பாய்ஸ்'தான். அஞ்சு பேருமே தனித்தனியாக ஜெனிலியாவுக்கு ரூட்விட்டு கடைசியா சித்தார்த்தைக் கரம் பிடிப்பாங்க ஜெனிலியா. ஏன் எதுக்குனு கேட்கக் கூடாது. ஏன்னா  சித்தார்த்துக்குதான் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் தெரியும்!
 
ஐங்கோண காதல்:

தெருத்தெருவா அலையறோம் செருப்பாகத் தேயறோம் (இதெல்லாம் பெருமையா) நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமானு தனுஷ், கருணாஸ், மயில்சாமி,சத்தியன்னு நாலு பேரும் சேர்ந்து  ஶ்ரீதேவியை லவ் பண்ணுவாங்களே... அதுதான் அதேதான் இது.

நேர்கோட்டுக்காதல்:

இங்க என்ன சொல்லுது வி.டி.வி. வி.டி.வி-னு சொல்லுதா? இவங்க தேனாம்பேட்டைக்கு போனா அவங்க  அப்படியே ஆப்போசிட்டா தென்காசிக்குப் போவாங்க. அப்படி ஓர் ஒற்றுமை(!).  கடைசிவரைக்கும் ஜோடி சேராத காதல் படங்களெல்லாம் இந்த வகையறா படங்கள்தான். 'விண்ணைத்தாண்டி வருவாயா' போல. ஹ்ஹ்ம்ம்.. ஊர்ல எவ்வளவோ பொண்ணு இருந்தும் இவர் ஏன் ஜெஸ்சியை லவ் பண்ணணும் ஃப்ரெண்ட்ஸ்ஸ்ஸ்?

இன்னும் லிஸ்ட்டு பெரிசா இருக்கு. அட  கணக்காக இருந்தாலும் அதுக்கும் ஒரு கணக்கு இருக்குல. அதனால இத்தோட முடிச்சுக்குவோம்!

-ஜெ.வி.பிரவீன்குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement