Published:Updated:

'எப்படி சொன்ன டயலாக் இப்படி ஆயிடுச்சே!' #TamilCinemaPunch

'எப்படி சொன்ன டயலாக் இப்படி ஆயிடுச்சே!' #TamilCinemaPunch
'எப்படி சொன்ன டயலாக் இப்படி ஆயிடுச்சே!' #TamilCinemaPunch

'எப்படி சொன்ன டயலாக் இப்படி ஆயிடுச்சே!' #TamilCinemaPunch

'நாம நினைச்சது ஒண்ணு... ஆனா நடந்தது ஒண்ணு' என்பார்களே! அந்த பிளாக் ஹியூமர் கீழே இருக்கும் இந்த செலிபிரிட்டிகளுக்குப் பொருந்தும். சின்னத்திரையில், வெள்ளித்திரையில் இவர்கள் நாடி, நரம்பு, நாக்குப்பூச்சி எல்லாம் முறுக்கேறச் சொன்ன சில வசனங்களை காலங்காலமாக கலாய் மெட்டீரியலாகவே பயன்படுத்தி வருகிறது தமிழ்ச் சமூகம். (அதுக்காக சமூகத்தைத் திட்ட முடியாது. இப்படித்தான் ஒருத்தர் சமூகத்தைத் திட்ட, அவரையே மீம் மெட்டீரியல் ஆக்கிடுச்சு இந்த சொசைட்டி. எதுக்கு வம்பு?). அப்படியான சில வசனங்களின் எஸ்.டி.டி தான் இது.

என்னடா பேச வைக்கிறீயா?:

சீனியர் மோஸ்ட் நடிகரையும் விட்டுவைக்கவில்லை தமிழ் ரசிகர்கள். 'படையப்பா' படத்தில் விடுக்கென எழுந்து கன்னம் துடிக்க, 'என்னடா என்னைப் பேச வைக்கிறீயா?' என மணிவண்ணனிடம் கேட்பார் நடிகர் திலகம். அப்போது அவர்கூடவே கலங்கி நின்ற கூட்டம் பின்னால் அதையே கலாய் வசனமாக்கிவிட்டது. எத்தனை மீம்கள்..? எத்தனைப் படங்கள்...? அம்மாடி!

தேவாவே சொன்னான்:

க்ளாஸிக் சினிமாவின் சென்டிமென்ட் டயலாக்கையே கலாய் வசனமாக மாற்றிய பெருமை நம்மையே சேரும். படத்தில் தேவராஜாக வரும் மம்முட்டி வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்க, விறுவிறுவென கீதாவிடம் வரும் ரஜினி, 'தேவராஜ் சாக மாட்டான், இதை தேவராஜே சொன்னான்' என்பார். முதலில் கேட்க நன்றாக இருந்த இந்த வசனம் போகப்போக கலாய் கவுன்டர்களுக்கு எனக் காவு கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போதுவரை இதை வைத்து கல்லா கட்டுகிறார்கள் நெட்டிசன்கள்.

நீங்க நல்லவரா கெட்டவரா?:

இதுவரை அதிகம் பயன்படுத்தப்பட்ட தமிழ் சினிமா டயலாக் இதுவாகத்தான் இருக்கும். 'நீங்க நல்லவரா கெட்டவரா?' எனக் குழந்தை கேட்கும்போது தன் டிரேட்மார்க் பார்வையில் கண் வியர்க்க வைப்பார் கமல். நாளாக நாளாக அதை அப்படியே காமெடிக்கு மாற்றி பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அட, இதை வெச்சு பாட்டே எழுதிட்டாங்க பாஸ்! இந்த டயலாக் காப்பிரைட்டிலேயே மணிரத்னம் கோடிகளை சம்பாதிக்கலாம் போல. இதில் ஹைலைட்டே, கோர்ட் வாசலில் கேட்ட கேள்விக்கு 25 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் வைத்து கமல் சொன்ன பதில்தான். 'Am a hero.. Am a villain'. 

என்ன கொடுமை சரவணன் இது?:

எல்லாப் புகழும் பிரேம்ஜிக்கே. தமிழ் சினிமாவின் அமுல் பேபியான பிரபு கண்களில் நீரோடு, மொத்த உடம்பும் குலுங்கக் குலுங்க பேசிய டயலாக் இது. கங்கா மேலுள்ள பாசத்தில் அவர் தலையிலடித்துக் கதைத்ததை காமெடியாக்கி அழகு பார்த்து ஓய்ந்துவிட்டது தமிழ் சமூகம். ஆனால் ட்ரெண்டை தொடங்கி வைத்த பிரேம்ஜியோ இன்னும் டயலாக்குகளை பட்டி டிங்கரிங் பார்த்து, பேசியே ஓட்டிக்கொண்டிருக்கிறார். 

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?:

சின்னத்திரைக்கு தமிழன் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறான் என்பதற்கான 'வரலாற்று ஆவணம்' இந்தச் சம்பவம். ஒரு ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளர் ஆதங்கத்தோடு சொன்னதை காமெடி ஷோவில் கலாய்க்க, லபக்கென கவ்விக்கொண்டார்கள் நெட்டிசன்கள். மீம்கள், பட வசனங்கள், ஹைலைட்டாய் சிவகார்த்திகேயன் ஆட்டத்தில் பாட்டு என எக்குத்தப்பாய் எகிறி ஹிட் அடித்தது. பாவம், இதைச் சொல்லாதீங்க, சொல்லாதீங்க எனச் சொல்லிச் சொல்லி அந்தத் தொகுப்பாளர் டயர்டானதுதான் மிச்சம்.

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும்:

தன் படத்தை பற்றி இயக்குநர் பெருமையாகப் பேசுவதெல்லாம் சகஜம்தான். ஆனால் லிங்குசாமியின் நேரம்.. 'அஞ்சான்' படம் பார்த்துப் பாதிக்கப்பட்டவர்களால் வறுத்தெடுக்கப்பட்டார். படப்பிடிப்புத் தொடங்கியபோது அவர் கொடுத்த பேட்டியில் சொன்ன டயலாக்கை ஏதோவொரு புண்ணியவான் தோண்டியெடுக்க, புகுந்து விளையாடிவிட்டார்கள் ரசிகக் கண்மணிகள். அவர் பெயரிலேயே மீம்ஸ் பக்கங்கள் தொடங்குமளவிற்கு நிலைமை சீரியஸானது. 

-நித்திஷ்
 

அடுத்த கட்டுரைக்கு