Published:Updated:

லவ் போனா இன்னொண்ணு கிடைக்கும்...கிட்னி போனா??? ’தோப்பில் ஜோப்பன்’ படம் எப்படி?

லவ் போனா இன்னொண்ணு கிடைக்கும்...கிட்னி போனா??? ’தோப்பில் ஜோப்பன்’ படம் எப்படி?
லவ் போனா இன்னொண்ணு கிடைக்கும்...கிட்னி போனா??? ’தோப்பில் ஜோப்பன்’ படம் எப்படி?

லவ் போனா இன்னொண்ணு கிடைக்கும்...கிட்னி போனா??? ’தோப்பில் ஜோப்பன்’ படம் எப்படி?

வழக்கமாக இரண்டு பெரிய ஹீரோக்கள் படம் என்றால் எதாவது ஒன்று தான் ஹிட்டாகும். ஆனால் இந்த முறை மல்லுவுட்டில் அது நடக்க வில்லை. மோகன் லால் நடித்த புலிமுருகன் - மம்மூட்டி நடித்த தொப்பில் ஜோப்பன் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இரண்டுமே ஹவுஸ்ஃபுல். புலிமுருகன் ஒரு மாஸ் எண்டர்டெய்னர். காமெடி என்டர்டெயினரான தொப்பில் ஜோப்பன் படம் எப்படி?

கட்டப்னாவைச் சேர்ந்த ஜோப்பன் (மம்மூட்டி) கபடி ப்ளேயர். விபத்து ஒன்றிலிருந்து தன் தம்பியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால் மம்மூட்டி மேல் காதல் கொள்கிறாள் ஆனி (ஆண்ட்ரியா). இதை மம்மூட்டியின் தந்தை எதிர்க்க 'பெரிய பணக்காரணாகிவிட்டு வருகிறேன், அதுவரை எனக்காக காத்திரு' என ஆனியிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார் சிறுவயது மம்மூட்டி. பல வருடம் கழித்து பணம் சேர்த்து திரும்பும் போது ஆனி சர்ச்சில் இன்னொருவனை திருமணம் செய்ய சம்மதம் சொல்வதைப் பார்த்து அன்றிலிருந்து குடிக்கத் தொடங்குகிறார். இந்தக் குடியிலிருந்து மம்மூட்டியை மீட்க அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் போடும் கல்யாண திட்டங்களை சில திருப்பங்களுடனும் நிறைய காமெடியுடனும் சொல்லும் படம் தான் தொப்பில் ஜோப்பன். 

துல்கர், நிவின் பாலி, ஃபகத் பாசில் என அத்தனை பேருக்கும் சவால் விடுகிறார் மம்மூக்கா. ரொமான்ஸ் + காமெடி, கொஞ்சம் சோகம் அடுத்த நொடியே அதுக்கு ஒரு கவுண்டர் கொடுத்து 'இதெல்லாம் ஜகஜம்டா' என மனசை தேத்திக் கொள்வது என்று படம் முழுக்க வைபரண்ட் மோடிலேயே இருக்கிறார் மம்மூட்டி. ஹீரோவுடைய ஃப்ரெண்ட்ஸ் ரோலில் சஜு, அலென்சிர், ஸ்ரீஜித், சீனுலால், மம்மூட்டிக்கு பெண் பார்க்க அலையும் ஹரிஸ்ரீ அசோகன், பாதிரியார்களாக வரும் ரென்ஜி பனிக்கர், சலீம் குமார் என அத்தனை பேரும்  பக்கா சொக்கா. ஆண்ட்ரியா, மம்தா மோகன்தாஸ் இருவரில் மனதில் பதிவது மம்தா தான். மம்மூட்டி இரண்டாவது முறையாக மம்தா மீது காதல் கொள்ளும் போது மம்தா கொடுக்கும் ட்விஸ்ட் செம காமெடி.

'ஏய் நான் ஒன்னும் அவ்வளோ பெரிய குடிகாரனில்ல, நேரம் கிடைக்கும் போது மட்டும் குடிப்பேன். ஆனா, தெய்வத்துடைய அருளால எனக்கு எப்பவும் நேரம் கிடைக்கும்' என்ற வசனங்களாக இருக்கட்டும், குடியிலிருந்து மீள தியானத்துக்கு செல்லும் காட்சிகளாகட்டும், சென்ற இடத்தில் மீண்டும் ஆண்ட்ரியாவை சந்திப்பதாகட்டும் கொஞ்சமும் குறைவில்லாமல் நிஷத் கோயா திரைக்கதை மற்றும் வசனங்களில் முழுக்க காமெடி நிரப்பி இருக்கிறார். 

 ஒரு லவ் போயிடுச்சுனா இன்னொரு லவ்சுலபமா கிடைச்சுடும், அதுக்காக குடிக்க ஆரம்பிச்சு கிட்னி போயிடுச்சுனா கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என காமெடியுடனேயே மெசேஜையும் தட்டுவது நச். 

வித்யாசாகர் இசையில் டைட்டில் ட்ராக்கான தொப்பில் ஜோப்பன் செம. மற்ற பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் ஜாலி ட்ராவலில் வண்டி 3 நிமிஷம் நிக்கும் டீ சாப்பிடுறவங்க, வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பறவங்க டக்குனு முடிச்சுக்கோங்க என்பது போல ஆகிறது. 

அடுத்து இப்படி நடக்கும் பாரேன், இப்ப இவங்கள காட்டுவாங்க பாறேன் என நாம் சொல்ல சொல்ல கமெண்ட்ரிக்கு ஏற்றவாரு காட்சிகள் வருவது பெரிய மைனஸ், ஆனால் அதை பெரிய குறை என நினைக்கச் செய்யாத ட்ரீட்மெண்டால் எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறார் இயக்குநர் ஜானி ஆண்டனி. கலகலப்பாக ஒரு படம் பார்த்து ரிலாக்ஸ் செய்ய 'தொப்பில் ஜோப்பன்' சரியான சாய்ஸ். 

அடுத்த கட்டுரைக்கு