Published:Updated:

பிரேமம் ‘ஜார்ஜு’க்கு ஹேப்பி பர்த்டே #HBDNivinPauly

பிரேமம் ‘ஜார்ஜு’க்கு ஹேப்பி பர்த்டே #HBDNivinPauly
பிரேமம் ‘ஜார்ஜு’க்கு ஹேப்பி பர்த்டே #HBDNivinPauly

நிவின் பாலிக்கு பிறந்தநாள் இன்று

நேரம் என்ற தமிழ் படத்தில் நடித்தபோது கூட கிடைக்காத பாராட்டையும், கவனிப்பையும் 'பிரேமம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம்  பெற்றவர் நிவின் பாலி. சில இடங்களில் நிவினுக்கு ரசிகர் மன்றங்கள் கூட ஆரம்பிக்கப்பட்டன.  நிவின் அதிகம் கவனம் ஈர்த்த கதாப்பாத்திரங்களை டைம்லைன் படி கொஞ்சம் ரீவைண்ட் செய்யலாம் வாருங்கள்.

பெங்களூர் இன்ஃபோசிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிவின் அப்பாவின் மறைவுக்குப் பிறகு பேப்பர் போட்டு கேரளாவுக்கே வந்தார் 

மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப் - பிரகாஷன்:

படத்துக்கான ஆடிஷன் நடைபெற்றபோது லீட் ரோலுக்காக கடைசி 12 பேர் லிஸ்டில் நிவின் இடம் பெறவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த 12 பேரில் இருந்து ஒருவர் விலக நிவினுக்கு வாய்ப்பு கிடைத்து தேர்வானார். தங்களை வளர்த்த மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்பைக் காப்பாற்ற நினைக்கும் சில நண்பர்களின் கதை. படம் முழுக்க உர்ர்ர் என இருக்கும் ஒரு ரோல் நிவினுக்கு. 

தட்டத்தின் மறயத்து - வினோத்:

’ட்ராஃபிக்’ படத்தில் காரில் லிஃப்ட் கொடுக்கும் நிவின் பாலியை கவனித்திருக்கிறீர்களா? அதன் பின் 'தி மெட்ரோ', 'செவன்ஸ்', ஸ்பேனிஷ் மசாலா படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்தவருக்கு  ஹிட் தந்தது தட்டத்தின் மறயத்து. முதல் பட வாய்ப்பு கொடுத்த வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்திலேயே இன்னொரு படம் என்பதால் செம குஷியாக நடித்தார் நிவின். படம் மொத்த கேரள சினிமாவின் ட்ரெண்டையே மாற்றியது. நிவினுக்கு பெண் ரசிகைகள் பெற்றுக் கொடுத்தது.

நேரம் - மேத்திவ் / வெற்றி:

'தட்டத்தின் மறயத்து'க்குப் பிறகும் சில படங்களில் சின்னச் சின்ன ரோல்கள் தான் வந்தன நிவினுக்கு. ஆனால் எந்த ரோலையும் தவிர்க்காமல் நடித்து ஆடியன்ஸுக்கு நன்கு பரிச்சயமாகிக் கொண்டார். நண்பன் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கும் முதல் படம். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் 'நேரம்' படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் தமிழிலும் நிவின் அறிமுகமாகியிருந்தார்.

1983 - ரமேஷன்:

இங்கு தொடங்கியது நிவினுக்கு என தனி ஆடியன்ஸ். ஆந்தாலஜி படமான ஐந்து சுந்தரிகள், ஹீரோயினை மையமாக வைத்து உருவான 'ஓம் சாந்தி ஓசன்னா', மல்டி ஸ்டார் படமான 'பெங்களூர் டேஸ்', நெகட்டிவ் ஷேடில் நடித்த 'இவிடே' என எதுவாக இருந்தாலும் சரி, தன் ஸ்பெஷல் பெர்ஃபாமென்ஸ் மூலம் அப்ளாஸ் அள்ளிக் கொண்டே தான் இருந்தார்.

பிரேமம் - ஜார்ஜ்:

இதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த ஆடியன்ஸ், கைதட்டல்கள், கவனம் எல்லாமும் பிரேமத்துக்கான ஆடியன்ஸாக கொண்டு வந்து சேர்த்திருந்தார் நிவின். ஹீரோயின்கள், இசை என பல காரணங்கள் இருந்தாலும் தன்னை மட்டும் மறக்க முடியாதபடி 'பிரேமம்' படத்தில் பெர்ஃபாமன்ஸால் மேஜிக் செய்திருந்தார். மலையாளத்தைவிட தமிழில் மிரட்டல் ஹிட்டாகி 200 நாட்களுக்கு மேல் ஓடியது. அத்தனை பேரையும் மலரே நின்னே காணாதிருந்தால் என பாட வைத்ததில் மலர் டீச்சரையும் தாண்டி நிவினும் ஒரு காரணம். அதேபோல மொசு மொசுவென தாடி வைத்துக் கொண்டவர்கள் , கருப்பு சட்டை வேட்டி போட்டுக் கொண்டு களிப்பு மொமண்ட்டுக்கு சென்றவர்கள் ஏராளம்.

இதன் பிறகு நடித்த ஆக்‌ஷன் ஹீரோ பிஜு, ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம் இரண்டும் நிவினுடைய இன்னொரு ஸ்டைல் நடிப்பு தான் என்றாலும் பிரேமம் ஜார்ஜை பீட் செய்யவில்லை. கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் தமிழில் நடித்து வரும் 'சன்ட மரியா' (கன்னடத்தில் வெளியான 'உலிடவாரு கண்டண்டே' ரீமேக்) அதை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ஹேப்பி பர்த்டே நிவின். 

- பா.ஜான்ஸன்

பின் செல்ல