Published:Updated:

”அம்மாவைப் பார்க்க அப்போலோவுக்கு போனேன்!” - பார்த்ததை சொல்கிறார் பவர்ஸ்டார் #VikatanExclusive

”அம்மாவைப் பார்க்க அப்போலோவுக்கு போனேன்!” - பார்த்ததை சொல்கிறார் பவர்ஸ்டார் #VikatanExclusive
”அம்மாவைப் பார்க்க அப்போலோவுக்கு போனேன்!” - பார்த்ததை சொல்கிறார் பவர்ஸ்டார் #VikatanExclusive

”அம்மாவைப் பார்க்க அப்போலோவுக்கு போனேன்!” - பார்த்ததை சொல்கிறார் பவர்ஸ்டார் #VikatanExclusive

'என்ன பத்தியே ஏகப்பட்ட வதந்தி வருது. 5 ஆயிரம் கோடி ,பத்தாயிரம் கோடி வச்சி இருக்கேன். அப்படி இப்படின்னு கிளப்பி விடுறாங்க. கோடி எல்லாம் கவர்மெண்ட்கிட்ட இருக்கும். நம்மட்ட இருக்குமா? இது தெரியாம சிலபேரு கிளப்பி விடுறான்.எனக்கே இப்படின்னா அம்மாக்கு எல்லாம் சொல்லவா வேணும்? ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். அம்மா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினா பல உயிர்ச்சேதம் ஏற்படும். அதனால வதந்தியை பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சீரியஸாக பொங்குகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வரைக் காண பல்வேறு அரசியல் தலைவர்கள், அப்போலோ வந்து செல்கின்றனர். பவர் ஸ்டார் எப்போதுமே பவர் புல் தான். முதல்வரை அப்போலோ மருத்துவமனையில் சந்தித்து விட்டு வந்தவரை நாம் சந்தித்தோம் 

உங்கள முதல்வரை சந்திக்க விடலைன்னு சொல்றாங்க ?

அது எல்லாம் பொய்ங்க. பாண்டிச்சேரி கவர்னர் வர்றாருன்னு முதல்ல உள்ள விடல.  கொஞ்ச நேரம் கார்ல வெயிட் பண்ணேன்.  அதுக்கு அப்புறம் அவங்களே போன் பண்ணி கூப்பிட்டாங்க. அப்புறம் நான் போய் அம்மாவ பாத்துட்டு வந்தேன்.ஜெயலலிதாவை சந்திச்சிட்டிங்களா?

இரண்டாவது மாடிக்கு போனேன் அங்க எல்லாரும் உக்காந்து இருந்தாங்க.அவங்ககிட்ட முதல்வரோட உடல்நிலையை பற்றி கேட்டேன். இப்ப நல்லா இருக்காங்கன்னு சொன்னாங்க அதுவே போதும்ன்னு கிளம்பி வந்துட்டேன். மனிதாபிமானத்துல தான் போய் பாத்தேன். அவங்க நூறு வயசு வரைக்கும் நல்லா இருக்கனும்.அவங்க ஆட்சி செய்தால் மட்டும்தான் தமிழ்நாட்டுல பெண்கள் நிம்மதியா வாழ முடியும், கட்டப் பஞ்சாயத்து ரௌடியிசம் எதுவும் இல்லாம இருக்கனும்ன்னா தமிழ்நாட்டுக்கு அம்மா வேணும் 

நீங்க பாரதீய ஜனதா கட்சியில தான இருந்தீங்க ? இப்ப என்ன திடீர் முதல்வர் பாசம் ?

நான் அ.தி.மு.க வில் மாநில மருத்துவ அணிச் செயலாளரா இருந்தேன். அப்புறம்தான் பி.ஜே.பி போய்ச் சேந்தேன். இங்க ஒருத்தரும் மதிக்கமாட்டேங்குறாங்க.தேர்தலில் தமிழிசைக்காக தெரு தெருவாக பிரசாரம் செய்தும் கூட  கண்டுக்கல. மோடி தமிழ்நாடு வந்தபோது அவரை சந்திக்க டைம் கேட்டு இருந்தேன். உங்க மேல வழக்கு இருக்கு அப்படின்னு சொல்லி ஓரம் கட்டிட்டாங்க .அரசியல்ல யாரு மேல தான் வழக்கு இல்ல? அப்படி பாத்தா காந்தி மட்டும்தான் அரசியல்ல இருக்க முடியும். ஆனா ஒரு நடிகையை கூட்டிட்டு போய் மோடியை சந்திக்க வைக்குறாங்க. இது எல்லாம் எனக்கு எவளோ பெரிய அவமானம்? அதுதான் அ.தி.மு.க சேர்ந்துறலாம்ன்னு அப்போலோ வந்தேன். அம்மா சரியாகி வந்த அப்புறம் போய் கட்சியில சேரத் தான் போறேன் .


என்னது... உங்களுக்கே மரியாதை இல்லையா ?

ஆமா. அரசியலுக்கு வர்ற இளைஞர்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.பேக்கிரவுண்டு இல்லாம அரசியல்ல இறங்காதிங்க. நண்பர்கள் உறவினர்கள்ன்னு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா மட்டும் தான் அரசியலுக்கு வரணும் இல்லன்னா பலி கடா ஆக்கிருவாங்க.

நடிகர் சங்கத்துல பல பிரச்சனைகள் நடந்துகிட்டு இருக்கு அது எல்லாம் உங்க கவனத்துக்கு வந்ததா ?

சின்னப் பசங்க. அவங்களுக்கு தெரிஞ்சதை பண்ணிக்கிட்டு இருக்காங்க. கல்யாணம் ஆனா புதுசுல அப்படித் தான ஒருத்தர ஒருத்தர் தாங்கிட்டு இருப்பாங்க. போகப் போகத் தான் தெரியும். தமிழ் சினிமாவை பொறுத்த வரை இன்னைக்கு சின்ன படங்கள் வெளி வருவதில் பெரிய சிக்கல் இருக்கிறது. காமெடி நடிகர்கள் அனைவருமே பிஸியாக தான் இருக்கோம். ஆனால் படங்கள் தான் வெளிவர மாட்டேங்குது

- பிரம்மா
படம்: ப.சரவணக்குமார்

அடுத்த கட்டுரைக்கு