Published:Updated:

பா.இரஞ்சித் தயாரிக்கும் ஆவணப்படம்! #BewareOfcastes

பா.இரஞ்சித் தயாரிக்கும் ஆவணப்படம்! #BewareOfcastes
பா.இரஞ்சித் தயாரிக்கும் ஆவணப்படம்! #BewareOfcastes

பா.இரஞ்சித் தயாரிக்கும் ஆவணப்படம்! #BewareOfcastes

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2010 ஆம் ஆண்டு, ஏப்ரல், 19 ஆம் தேதி... ஹரியானா மாவட்டத்தில் இருக்கும் மிர்ச்பூர் என்ற சிறிய கிராமம். ஆதிக்க சாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சிலர் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அங்கு ஒரு நாய் அவர்களை நோக்கி குரைத்தது. முதலில் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... ஆனால், அந்த நாய் ஒரு தலித்தினுடையது என்பது தெரிந்ததும் அவர்களுக்கு கோபம் தலைக்கேறியது. சாதி, மத பேதங்கள் தெரியாத, இன, மொழி அடையாளங்கள் அற்ற, நன்றியுள்ள நாயாக இருப்பினும்... அது தலித் வளர்ப்பதால் இவர்களுக்கு எதிரி தான். அதை  கொல்லும் நோக்கில் கல்லை எறிகிறார்கள். ஒரு தலித் சிறுவன் அந்த நாயைக் காக்க முற்படுகிறான்... அவ்வளவு தான். அந்த கிராமமே பற்றி எரியத் தொடங்குகிறது...

இந்தக் கலவரத்தில் 70 வயதான தாரா சந்த் என்ற தலித் முதியவரும், அவரின் மாற்றுத் திறனாளி மகள் சுமனும் (16)... உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். நெருப்புடன் போராட முடியாமல், அதற்கு தலைவணங்கி தங்கள் சாம்பலை ஆதிக்க சாதியினருக்கு வெற்றிப் பரிசாகத் தருகிறார்கள். 52 பேர் படுகாயம், 18ற்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டன என பல வலிகளை விட்டுச் சென்றது இந்த சம்பவம். மனிதம் மறந்த, மறுத்த இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய "நீலம்" ப்ரொடக்‌ஷன்ஸ் மூலம் ,ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். 

சில மாதங்களுக்கு முன்பு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் முகாமில் பங்கேற்ற ரஞ்சித் உங்கள் படங்களில் சாதியம் அதிகம் பேசப்படுவது ஏன் என்ற கேள்விக்கு...

" சாதி அழிக்கணும்னு நினைக்குற எண்ணம் நம் எல்லாருக்குமே இருக்கு. சமூகப் பிரச்சனையப் பேசாத எந்தவொரு ஆர்ட்டுமே, ஆர்ட்டில்லைங்குறது என்னோட கருத்து. நான் எங்கே போனாலும், எனக்கு முன்னாடி சாதி அங்க நிக்குது...சாதிய எண்ணங்கள வேரறுக்கும் வகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ளணும். முதல்ல மனுஷன மனுஷனா மனுஷன் மதிக்கணும்..." என்று சொல்லியிருந்தார். 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரின் " சாதிகள் ஜாக்கிரதை ( BEWARE OF CASTES )" என்ற ஆவணப்படத்தின் ட்ரெய்லர்... அவரின் முன்னெடுப்பிற்கான முயற்சியாகவே இருக்கிறது...

-இரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு